Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
தாம்பத்திய வாழ்க்கை சிறக்க ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்..!
பொதுவாகவே ஆண்கள் பாலியல் ரீதியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கும்போது பலர் மருத்துவரை அணுக பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் இது உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் அவர்களை கடுமையாக பாதிக்கும் விஷயமாக இருக்கிறது..
தாம்பத்திய வாழ்க்கையை பொருத்தவரை பிறப்புறுப்புகளைத் தவிர, உடலின் மற்ற பாகங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவு விதிகளை கடைபிடிப்பது நல்லது..

இதில் முக்கியமாக ஆண்குறியில் தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. சில உணவுகள் பிறப்புறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி நோய்வாய்ப்படாமல் தடுக்கும். ஆண்குறியின் செயல்பாட்டை அதிகரிக்க என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
கேரட்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போகும் தேவை இருக்காது.. ஆண்களும் பெண்களும் உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் ஆப்பிளை விட கேரட்டை அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்கு பீட்டா கரோட்டின் என்ற சத்துதான் காரணம். இது ஆப்பிளை விட கேரட்டில் அதிகமாக உள்ளது மற்றும் ஆண் உடலுக்கு தனித்துவமான ஹார்மோன்கள் மற்றும் இரசாயனங்கள் உற்பத்திக்கு இந்த கேரட் உதவுகிறது..
அத்துடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கேரட் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். மேலும் சத்தானதாக இருப்பதால், சாலட் வடிவில் சமைத்து சாப்பிடலாம். கேரட் சாப்பிடுவதால் நமது கண்பார்வை மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ ஆண்களுக்கு ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஆண் ஆண்குறியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சிக்கன்
கோழி உடலுக்கு மிகவும் நல்லது.. உங்கள் உணவில் சிக்கன் சேர்த்துக் கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்... இது தசையை உருவாக்கவும், கொழுப்பை கரைக்கவும், உடலின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. கோழியில் புரதச்சத்து அதிகம் காணப்படும். அதனால் உடலில் உள்ள வைட்டமின் பி3 ஆண்குறி சுழற்சியை எளிதாக்க உதவுகிறது. இது பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் லிபிடோவையும் அதிகரிக்கிறது.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் ஏழைகளின் நணபன் என அழைக்க்ப்படுகிறது.. காரணம் அனைத்து மக்களும் வாங்கி உண்ணக்கூடிய பழம் இதுதான்.. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் மருத்துவர்களை விலக்கி வைக்கும். வாழைப்பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து மற்றும் சர்க்கரை, தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிளை விட வாழைப்பழத்தை தேர்வு செய்ய இன்னும் பல காரணங்கள் உள்ளன.
வாழைப்பழம் ஆண்டு முழுவதும் எளிதில் கிடைக்கும் ஒரு பழம். ஆண்களின் ஆரோக்கியத்திற்கு இது ஒரு சிறந்த பழம். இது ஆண்களுக்கு வலுவான இதய ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சோடியம் அளவை உறுதிப்படுத்துவது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உப்பு அதிகம் உள்ளவர்கள் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
உலர் மீன்கள் (கருவாடு)
உலர் மீன் உலர்ந்த மீனில் சிறந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. உலர்ந்த மீன் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை தென் மாவட்ட மக்கள் தினமுமே சாப்பிடுவார்கள்.. இது உடலில் சிறந்த இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. உலர் மீனை தினமும் உட்கொள்வதால் தமனிகள் எளிதாக வேலை செய்யும். வாரத்திற்கு இரண்டு முறை இதை சாப்பிடுவது ஆண்கள் குறிப்பிடத்தக்க ஆரோக்கியத்தை அடைய உதவுவதாகவும், ஆண்குறியை ஆரோக்கியமாகவும், பாலியல் செயல்பாடுகளை உற்சாகப்படுத்தவும் உதவுகிறது.
செர்ரி பழங்கள்
செர்ரி பழங்கள் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.. இதய தமனிச் சுவரைப் பாதுகாக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும். ஆண்களின் பாலியல் வாழ்க்கைக்கு அவசியமான ஹார்மோன்களின் வெளியீட்டை ஒருங்கிணைக்கிறது. மற்றும் விறைப்புத்தன்மையை ஊக்குவிக்கும்.



Click it and Unblock the Notifications