Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஆண்களே! உடலுறவில் நீங்க இருமடங்கு இன்பம் பெற உங்க மனைவியை 'இந்த' இடங்களில் தீண்ட சொல்லுங்க!
Erogenous Zones for Men In Tamil: உடலுறவு மற்றும் பாலியல் தூண்டுதல் என்றால், எப்போதும் ஆண்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. பெண்களே, சில சமயங்களில் உங்கள் ஆணுக்கு கூடுதல், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை அதிகமாகவும் நேசிப்பார்.
பரிசுகளை வழங்குவது, 'ஐ லவ் யூ' என்று அடிக்கடி கூறுவது அல்லது அவ்வப்போது அவரை கட்டிப்பிடிப்பது உங்கள் கணவனை அல்லது காதலனை சிறப்பாக உணர வைக்கும் சில வழிகள் மட்டுமே. ஆனால், அவரை சந்தோஷப்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய இன்னும் பிற முக்கியமான விஷயங்களும் உள்ளன. அவை என்ன என்று யோசிக்கிறீர்களா?

உங்கள் ஆணின் ஈரோஜெனஸ் மண்டலங்களை ஆராய்வதன் மூலம் படுக்கையில் அவரை மிகவும் மகிழ்ச்சியாகவும் விரும்பத்தக்கதாகவும் உணர வைக்கலாம். உங்கள் காதலன் அல்லது கணவனை சில இடங்களில் தீண்டுவது, அவரை முற்றிலும் சிற்றின்பமாகவும் கவர்ச்சியாகவும் உணர வைக்கும். ஆண்களின் பொதுவான ஈரோஜெனஸ் மண்டலங்கள் எது? எங்கே தீண்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உதடுகள் மற்றும் வாய்
தம்பதிகள் இருவருக்கும் உதடுகளை முத்தமிடுவதும், உதடுகளை கவ்வுவதும் நம்பமுடியாத அளவிற்கு சிற்றின்பமாக இருக்கும். இது உங்கள் கணவன் அல்லது காதலனின் கிளர்ச்சியைத் தூண்ட ஒரு சிறந்த வழியாகும்.
கீழ் உதட்டை மெதுவாக கடிப்பது அல்லது உறிஞ்சுவதும் இன்பத்தை தீவிரப்படுத்தும். உங்கள் கணவனின் கண்கள் மற்றும் மூக்கிலும் நீங்கள் முத்தமிடலாம். வாயைச் சுற்றியுள்ள உணர்திறன் வாய்ந்த பகுதிகளை ஆராய்வது, உங்கள் ஆணின் பாலியல் உணர்வை அதிகரிக்கலாம்.
கழுத்து மற்றும் காது பகுதி
கழுத்து மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியாகும். அங்கு லேசான முத்தங்களோடு நாவல் தீண்டுவது மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தும். கழுத்தில் மெதுவாக கிசுகிசுப்பது அல்லது லேசாக சுவாசிப்பதும் தூண்டுதலாக இருக்கும்.
ஆண்களின் காது பகுதியும் மிகவும் உணர்திறன் வாய்ந்தது. அவர்களின் காதுகளில் கிசுகிசுக்கலாம், முத்தமிடலாம், மெதுவாக கடிக்கலாம். இது ஆண்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பாலியல் தூண்டுதலையும் வழங்கும். இதன் காரணமாக உடலுறவில் அவர்களின் வேகமும் தூண்டப்படலாம்.
மார்பக காம்புகள் மற்றும் மார்பு
மார்பக காம்புகள் ஈரோஜெனஸ் மண்டலங்களாகும். அவை தூண்டப்படும்போது அதிக உணர்திறன் மற்றும் மகிழ்ச்சியைத் தரக்கூடியவை. மார்பக காம்புகளில் முத்தமிடுவது, மெதுவாகக் கிள்ளுவது மற்றும் உதடால் தீண்டுவது ஆண்களுக்கு உற்சாக உணர்வை உருவாக்கும்.
கூடுதலாக, உங்கள் விரல்கள் அல்லது உதடுகளை மார்பின் குறுக்கே இயக்குவது மற்றும் பெக்டோரல் தசைகளை மெதுவாக மசாஜ் செய்வதும் மகிழ்ச்சியாக இருக்கும். இது உங்களின் துணைக்கு வேறுமாதியான இன்பத்தை கொடுக்கும்.
உள் தொடைகள் மற்றும் பெரினியம்
உட்புற தொடைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஈரோஜெனஸ் மண்டலமாகும். உட்புற தொடைகளை மென்மையாகத் தழுவுவது அல்லது முத்தமிடுவது, பிறப்புறுப்புகளுக்கு நெருக்கமாக நகர்வது, ஆண்களுக்கு அதிக உற்சாகத்தை கொடுக்கலாம்.
ஸ்க்ரோட்டத்திற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியான பெரினியமும் அதிக உணர்திறன் கொண்டது. மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துதல் அல்லது உங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை அவர்களை தூண்டக்கூடியவை.
பிறப்புறுப்பு பகுதி
ஆண்குறி மற்றும் விந்தணுக்கள் அதிக உணர்திறன் கொண்டவை மற்றும் பாலியல் இன்பத்திற்கு மையமானவை. ஆண்குறியை மெதுவாகத் தடவுவது மற்றும் மசாஜ் செய்வது ஆண்களுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் கைகள் மற்றும் வாயைப் பயன்படுத்தி, அவர்களின் பிறப்புறுப்புகளில் தூண்டுதலை ஏற்படுத்தலாம்.
இதில், உங்கள் துணைக்கு எது மகிழ்ச்சியளிக்கிறது என்பதைக் கண்டறிய பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்திப் பாருங்கள். ஆனால் நீங்கள் இதைச் செய்வதற்கு முன், உங்கள் காதலன் அல்லது கணவனுக்கு இதைச் செய்வது பிடித்திருக்கிறதா? வசதியாக இருக்கிறதா? என்று கேளுங்கள். அவர் ஒப்புதல் அளித்தால், நீங்கள் தராளமாக விளையாட்டை தொடங்கலாம்.



Click it and Unblock the Notifications

