Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! படுக்கையில் நீண்ட நேரம் செயல்பட முடியலையா? அப்ப 'இத' பண்ணுங்க... குதிரை வேகத்தில் செயல்படலாமாம்!
திருமணமான புதிதில் பெரும்பலான ஆண்கள் படுக்கையில் நீண்ட காலம் செயல்படுவார்கள். அதுவே, காலங்கள் செல்லசெல்ல அவர்கள் படுக்கையில் செயல்படும் நேரம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
படுக்கையில் நீண்ட காலம் நீடிக்காத ஆண்கள் அல்லது முன்கூட்டிய விந்துதள்ளல் பிரச்சனையை அனுபவிப்பவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும் பொதுவானவர்கள். படுக்கையில் நீண்ட நேரம் நீடிப்பத்தை பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை. ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனை பல ஆண்களை தொந்தரவு செய்கிறது.

இது அவர்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அதிகமாக பாதிக்கிறது. இதனால், பல ஆண்கள் தாழ்வு மனப்பான்மை மற்றும் குறைந்த நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க ஆண்கள் மீது நிறைய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், இது எல்லாருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை.
எத்தனை நிமிட உடலுறவு போதுமானது அல்லது எத்தனை நிமிடங்கள் மிகக் குறைவு? என்ற கணக்கு பொதுவெளியில் கூறப்படுகிறது. அந்த வகையில், பெரும்பாலான ஆண்கள் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறுவதாகக் கூறினாலும், ஊடுருவலுக்குப் பிறகு விந்து வெளியேறும் சராசரி நேரம் சுமார் 5 1/2 நிமிடங்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
நீங்கள் எவ்வளவு நேரம் படுக்கையில் செயல்படுவீர்கள் என்பதில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க உதவும் குறிப்புகளை பின்பற்றுங்கள். படுக்கையில் ஆண்கள் நீண்ட காலம் நீடிக்க உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஆணுறைகளை முயற்சிக்கவும்
பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான உடலுறவுக்கு ஆணுறை மிகவும் அவசியம். சிலர் ஆணுறைகளைப் பயன்படுத்த விரும்புவதில்லை. ஏனெனில் அவை மகிழ்ச்சியையும் உணர்திறனையும் குறைப்பதாக பல ஆண்கள் நினைக்கிறார்கள். உங்களின் விந்துதள்ளல் நேரத்தை நீடிக்க வைக்க காண்டம் உதவுகிறது.
ஆதலால், உடலுறவில் ஈடுபாடும்போது கட்டாயம் காண்டம் அணியுங்கள் அல்லது டீசென்சிடைசிங் க்ரீம்கள் உள்ளவற்றை முயற்சிக்கவும். இது நீண்ட நேரம் உங்களை படுக்கையில் செயல்பட வைக்கும்.
கவர்ச்சியான நேரத்தை அவசரப்படுத்த வேண்டாம்
மன அழுத்தம், உங்கள் விந்து வெளியேறுவதை பாதிக்கும். ஆதலால், உடலுறவில் ஈடுபடும்போது, வேறு எந்த விஷயத்தையும் பற்றி யோசிக்காதீர்கள். உடலுறவில் நீங்கள் அவசரமாக இருந்தால் அல்லது சீக்கிரம் முடிக்க நினைத்தால், அந்த இன்பத்தை முழுமையாக உங்களால் பெற முடியாது. படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க இந்த உதவிக்குறிப்புகளில் பெரும்பாலானவற்றை முயற்சிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.
எனவே, உங்கள் பிஸியான கால அட்டவணையில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். இதனால் நீங்கள் அவசரமாகவும் அழுத்தமாகவும் உணர வேண்டியதில்லை. நீங்கள் நிதானமாக இருந்தால், நீண்ட நேரம் படுக்கையில் நன்றாக செயல்பட முடியும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் மற்றும் உங்கள் துணையை மகிழ்விக்க புதிய வழிகளை முயற்சித்து மகிழலாம்.
இடங்களை மாற்றவும்
எப்போதும் படுக்கையிலே உடலுறவு கொள்வது, உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், படுக்கையைத் தவிர்த்துவிட்டு புதிய இடங்களில் முயற்சிக்க வேண்டும். இது உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கலாம் மற்றும் தீவிர விந்துதள்ளலைக் கொடுக்கலாம். இது உங்களை சுவார்ஸமாகவும் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளவும் தூண்ட உதவும்.
ஆதலால், அடிக்கடி உங்கள் இடத்தை மாற்றுங்கள். உங்கள் துணையை படுக்கையறைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். அதற்கு பதிலாக, சமையலறை, இருண்ட பால்கனி அல்லது மேசை போன்ற இடங்களில் விளையாட்டை தொடங்குங்கள். அதே நேரம் இடம் பாதுகாப்பானதா என்பதையும் உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.
சுருக்கமாக தூண்டுதலை நிறுத்துங்கள்
பாலியல் தூண்டுதலுக்கு நீங்கள் மிகவும் உணர்திறன் உடையவர் என்று நீங்கள் நினைத்தால், அவற்றைக் குறைக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். மீண்டும், உணர்வின் கவனத்தை உங்கள் உடலிலிருந்து உங்கள் துணைக்கு மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இவை, உங்களை படுக்கையில் நீண்ட காலம் நீடிக்கச் செய்து உங்களை சிறந்த காதலனாக மாற்றும்.
போர்ஃபிளேவில் கவனம் செலுத்துங்கள்
வேடிக்கையான போர்ஃபிளேவில் அதிக கவனம் செலுத்துங்கள். படுக்கையில் நீண்ட காலம் நீடிப்பதற்கான நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் உங்கள் மனைவி நிச்சயமாக உங்கள் செயல்பாடுகளையும் உங்களையும் நேசிப்பார். நீங்கள் இருவரும் பாலுறவு இன்பத்தை நீட்டிப்பது மட்டுமல்லாமல், தீவிரமான உச்சக்கட்டத்தையும் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications












