Latest Updates
-
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும்
இந்த 6 அறிகுறிகள் உங்க கணவனிடம் இருந்தா? அவரு வாழ்க்கையில நீங்க மட்டும் இல்லையாம்...வேற பொண்ணும் இருக்காம்!
பொதுவாக ஆண்களுக்கு பொய் சொல்வதற்கும் தவறை மறைப்பதற்கும் சரியாக வராது. அவர்கள் தங்கள் மனைவியிடம் விரைவில் மாட்டிக்கொள்வார்கள். தங்கள் மனைவியிடமிருந்து மற்ற பெண்களுடனான தொடர்பை மறைப்பதில் ஆண்கள் சிறப்பாக செயல்பட மாட்டார்கள்.
சில ஆண்கள் உறவில் தங்கள் மனைவிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க மாட்டார்கள். தங்கள் மனைவி அல்லது காதலி இருக்கும்போதே, அவர்கள் வேறோரு பெண்ணுக்கு ரூட் போடுவார்கள். இதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் பெண்களே! ஏனெனில், உங்கள் கணவன் மற்ற பெண்களைப் பார்க்கத் தொடங்கும் போது, சில அறிகுறிகள் அவர்களிடம் வெளிப்படும்.

இந்த அறிகுறிகளை வைத்து நீங்கள் மட்டுமே அவருடைய வாழ்க்கையில் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லலாம். இதன் அர்த்தம், அவர் வேறோரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கலாம் என்பதாகும். உங்கள் கணவனின் வாழ்க்கையில் நீங்கள் மட்டுமே இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவது
உங்கள் கணவன் அல்லது காதலன் திடீரென தனது மொபைலில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தால், வேறொருவருடன் இணைப்பில் இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக இதற்கு முன்பு அவர் பொதுவாக செல்போனை அதிகமாக உபயோகிக்கவில்லை என்றால், இது உங்களுக்கான சிவப்புக் கொடியாக இருக்கலாம்.
அவர் தனது செல்போனை விவேகத்துடன் பயன்படுத்த, குளியலறையில் நீண்ட நேரம் செலவிடுவது போன்ற தனியுரிமையை நாடலாம். ஏனெனில், அவர் தனியாக இருக்கும்போது, அதிக நேரம் செல்போனை பயன்படுத்தலாம்.
உங்கள் மீதான ஆர்வம் குறைந்தது
உங்கள் கணவன் அல்லது காதலன் உங்களின் அன்றாட வாழ்வில் உண்மையாகவே ஆர்வம் காட்டி, உங்கள் நாள், உங்கள் திட்டங்கள், உங்கள் நலன் ஆகியவற்றைப் பற்றிக் கேட்டால், அது ஆரோக்கியமான உறவு. இந்த ஆரோக்கியமான பழக்கம் இப்போது உங்கள் உறவில் குறைந்திருந்தால் அல்லது ஆர்வமில்லாமல் இருந்தால், அது அவருடைய கவனம் வேறு இடத்திற்கு மாறியதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
கேஜெட்களுக்கு அதிக பாதுகாப்பு
சில ஆண்கள் நேர்மையற்ற நடத்தையில் ஈடுபடும் போது, குற்ற உணர்வு இல்லாமல் தங்கள் தொலைபேசிகளை மனைவி பயன்படுத்த அனுமதிக்கலாம். ஆனால், உங்கள் கணவர் அவரது கேஜெட்டுகளை உங்களிடம் கொடுக்காமல், அதிகமாக பாதுகாத்தால், எதோ ஒன்று இருக்கிறது என்று அர்த்தம்.
குறிப்பாக அவரது தொலைபேசியை உங்களிடம் கொடுக்காமல் அதிகமாகப் பாதுகாப்பது, அவர் உங்களிடமிருந்து எதையாவது மறைக்க முயற்சிக்கிறார் என்பதற்கான அறிகுறியாகும்.
உணர்ச்சி தூரம்
தம்பதிகள் உணர்ச்சி ரீதியாக ஒன்றாக இருக்கும்போது, நெருக்கமாக உணருவார்கள். உணர்ச்சி ரீதியான தொடர்பு என்பது உறவுக்கு மிக அவசியம். ஆனால், உங்கள் கணவர் உங்களிடம் இருந்து உணர்ச்சி ரீதியாக தொலைவில் சென்றால், அது மற்றொரு அறிகுறியாக இருக்கலாம்.
அவர் உங்களிடம் முன்பைப் போல் விஷயங்களை வெளிப்படையாகத் தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம் அல்லது பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாம். இதனால் நீங்கள் அவரிடமிருந்து மிகத் தொலைவில் இருப்பதாக உணருவீர்கள்.
அடிக்கடி சண்டை போடுவது
சிறிய பிரச்சனைகளுக்காக அவர் தொடர்ந்து உங்களிடம் சண்டையிடுவது போல் தெரிகிறது என்றால், இதுவும் ஓர் அறிகுறியாகும். மேலும் சிறிய பிரச்சனைகள் கூட உங்கள் இருவருக்கும் இடையே நீண்ட கால வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். நீங்கள் மகிழ்ச்சியடையாத விஷயத்தைப் பற்றி அவரிடம் அமைதியாகப் பேச முயற்சித்தாலும், அவர்கள் கோபமடைந்து அதை ஒரு விவாதமாக மாற்றுவார்கள்.
இறுதிக்குறிப்பு
இந்த அறிகுறிகள் எப்போதும் ஒரு பிரச்சனையை மட்டுமே குறிக்காது. ஏனெனில் இந்த நடத்தைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். உங்கள் கவலைகளைத் தீர்ப்பதற்கும் உங்கள் உறவில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் திறந்த மற்றும் நேர்மையான தகவல்தொடர்பு முக்கியமானது.
உங்கள் கவலைகளைத் தெரிவிக்க நீங்கள் முயற்சிக்கும்போது, அவர்கள் அதை காது கொடுத்து கேட்க மறுத்தால், உங்கள் தனிப்பட்ட விசாரணையைத் தொடங்க அல்லது அவருக்கு சிறிது இடம் கொடுப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications

