Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
உங்க மாமியாரிடம் இந்த அறிகுறிகள் இருந்தா... நீங்க ரொம்ப கொடுத்தவச்ச மருமகளாம்...ஏன் தெரியுமா?
உங்களை விட அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள் உங்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று மருமகள்கள் இருந்தால், கண்டிப்பாக மருமகளுடன் ஒப்பீடுகள் இருக்கும்.
மாமியார், மருமகள் உறவு என்பது அம்மா, மகள் உறவுபோல இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான குடும்பங்களில் அப்படி இருப்பதில்லை. மாமியார், மருமகள் எதிர் எதிர் திசையில் இருப்பதுபோல இருக்கும். உங்கள் உறவுகளை நட்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள். நட்பாக இருக்கும்போது, உங்களுக்குள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. புதிதாக கணவன் வீட்டிற்கு செல்லும் பெண், மாமியாரோடு பழக யோசிக்கலாம். அவர் எப்படிப்பட்டவராக இருப்பார்கள் என்ற பயம் இருக்கும். உங்கள் மாமியார் உங்களுடன் நட்பு கொள்ள முயற்சிப்பதாக நீங்கள் உணர்ந்தால், இந்த அறிகுறிகளையும் சைகைகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

உங்களை மதிப்பதில் இருந்து உங்கள் பிறந்தநாளை நினைவு கூர்வது மற்றும் உங்கள் பரிசைத் தேர்ந்தெடுப்பது வரை, இவை அனைத்தும் உங்களுக்காக யோசித்தால், அவர் உங்களோடு நட்பாக இருக்க விரும்புகிறார். நீங்கள் அந்த அறிகுறிகளை இக்கட்டுரையில் சில அறிகுறிகளை கொடுத்துள்ளோம். அவை, உங்கள் மாமியார் உங்களோடு நட்பாக இருக்க விரும்புவதற்கான அறிகுறியாகும்.

உங்கள் கருத்தை மதிக்கிறாள்
பொதுவாக மாமியார் மருமகளிடையே கருத்து ஒற்றுமை இருப்பதில்லை. மாமியார் என்ன கூறினாலும், அதற்கு எதிர்மறாக மருமகள் நடந்துகொள்வாள். பல மாமியார்கள் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அல்லது சொல்ல வேண்டும் மற்றும் உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் புறக்கணிக்க பார்ப்பார்கள். ஆனால், உங்கள் மாமியார் உங்கள் கருத்தை கேட்கிறாள் மற்றும் மதிக்கிறாள் என்றால், என்ன வேறுபாடுகள் இருந்தாலும் ஆரோக்கியமான உறவைப் பேண முயற்சிக்கிறாள் என்று அர்த்தம். உங்கள் மாமியார் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறாள்.

உங்களைப் பற்றி அறிய விரும்புகிறாள்
உங்கள் மாமியார் உங்கள் வாழ்க்கை, வேலை, ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் தொழில் பற்றி விசாரித்தால், அவர் உங்களைப் பற்றி அறிய முயற்சி செய்கிறார் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் அவளின் குடும்பத்திற்குள் வருவதால், உங்களைப் பற்றிய விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறாள். விஷயங்களை பரிமாறி, உங்களுக்கு என்ன பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லை என்று உங்கள் மாமியார் கேட்டால், அது உங்களிடையே ஒன்றாக நீடித்த நட்பை உருவாக்கலாம்.

ஒப்பீடு செய்வதில்லை
உங்களை விட அதிகமாக பணம் சம்பாதிப்பவர்கள் உங்கள் வீட்டில் இருக்கலாம். ஆனால் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று மருமகள்கள் இருந்தால், கண்டிப்பாக மருமகளுடன் ஒப்பீடுகள் இருக்கும். இருப்பினும், உங்கள் மாமியார் அப்படி ஒன்றும் செய்யாமல், உங்கள் வேலையையும், சொந்தப் பணம் சம்பாதிப்பதைப் பாராட்டினால், உங்கள் வேலையை மதிக்கிறார் என்று அர்த்தம். இது அவள் உங்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதற்கான மிகப்பெரிய அறிகுறியாகும்.

நீங்கள் இல்லாதபோது அவள் உன்னை மதிக்கிறாள்
சில மாமியார்கள் நாடகக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்கள் முகத்திற்கு முன்பு இனிமையாக நடந்துகொள்வார்கள். ஆனால், நீங்கள் இல்லாத தருணத்தில் உங்களை விமர்சித்து கொண்டே இருப்பார். உங்கள் மாமியார் அதைச் செய்யவில்லை என்றால், அதற்குப் பதிலாக அவர் உங்களை எதிர்கொண்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்கள் உறவுக்கு இடையே தவறான தகவல்தொடர்பு வரக்கூடாது என்று அவள் தெளிவாக இருக்க விரும்புகிறாள். இதன்மூலம் ஒரு நல்ல உறவை உருவாக்க அவள் முயற்சி செய்கிறாள்.

உங்கள் எல்லைகளை புரிந்துகொள்கிறாள்
உங்கள் மாமியார் உங்களின் தனிப்பட்ட எல்லைக்குள் வருவதை விட மோசமானது எதுவுமில்லை, குறிப்பாக நீங்கள் பிஸியான அட்டவணை மற்றும் குழப்பமான சூழ்நிலையில் வீட்டைக் கையாளும் போது, உங்களுக்கும் உங்கள் கணவனுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும்போதும் வரக்கூடாது. உங்கள் மாமியாரின் எல்லையை அவர் புரிந்துகொண்டு நடந்தால், அவர் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார். ஆதலால், இந்த வகையான மாமியார் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.



Click it and Unblock the Notifications