Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
உங்க காதலியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்களாம்... ஜாக்கிரதையா இருங்க...!
மனிதர்களாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் சொல்வார்கள். வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகள் மனிதர்களை பொய் சொல்லும் நிலைக்குத் தள்ளுகின்றன. பல பொய்கள் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காததால் பாதிப்பில்லாததாக கருதப்படுகின்றன.
ஆனால் ஒரு உறவில் அல்லது காதல் உறவில் இருப்பவர் தொடர்ந்து பொய் சொன்னால், அது பெரும்பாலும் அவர்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பொய்கள் உறவுகளின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் மற்றும் அதன் அளவு அதிகரிக்கும் போது, அது மேலும் ஆபத்தானதாக மாறுகிறது.

பெண்கள் பொய் சொல்வதைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமானது என்று கூறப்படுகிறது. ஆனால் பெண்கள் பொய் சொல்லும்போது வெளிப்படும் சில அறிகுறிகள் உள்ளன. அடிக்கடி பொய் பேசும் ஒருவரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் நீங்கள் இதை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு பெண் பொய் சொல்கிறாரா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கீழ்நோக்கி பார்த்துப் பேசுவது
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒருவர் பொய் சொல்லும்போது, அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது. இந்த நேரத்தில் அவர்கள் உடல் பல உடல்மொழிகளை வெளிப்படுத்தும். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் பொய் சொல்லும் போது நேருக்கு நேர் பார்த்து பேச மாட்டார்கள். அதுமட்டுமின்றி கீழ்நோக்கி பார்த்து பேசுவார்கள். இது பொய்யின் முதல் அறிகுறி. நீங்கள் அதை உணர்ந்து, கேள்வி கேட்டால் மீண்டும் அதையே திரும்பத் திரும்பச் சொன்னால் அவர்கள் பொய் சொல்வது உறுதியாகிவிடும்.
வார்த்தைகளுக்காகப் போராடுவது
உங்கள் காதலி பொய் சொன்னால், அவர்கள் பேசும்போது அவர்கள் வார்த்தைகளுக்காகத் தடுமாறுவார்கள். பொய் சொல்லும்போது, உடலில் உள்ள பல ஹார்மோன்கள் ஒன்றாகச் செயல்படுகின்றன. பொய் சொல்லும் போது அது அவர்களின் பேச்சிலும் தெரிகிறது. வாயில் வார்த்தைகள்தொடர்ச்சியாக வராது. எனவே வார்த்தைகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருப்பார்கள்.
No என்றே பதில் சொல்வது
பல கேள்விகளுக்கு No என்பதே பதிலாக வரும். No என்பது பெரும்பாலும் பொய்யர்களால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். எனவே உங்கள் காதலி நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு No என்று கூறினால் அதை நன்கு கவனிக்க வேண்டும். இதைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்டால், அதற்கும் No என்ற வார்த்தையே பதிலாக வரும். எனவே உங்கள் காதலி எப்போதும் No என்று கூறினால் அவர்கள் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
பேசுவதில் திணறல்
நாம் எதையாவது மறைக்க வேண்டிய தேவையிருந்தால், நாம் பேசும்போது அடிக்கடி திணறுகிறோம். ஆனால் திணறல் பெரும்பாலும் பொய்களைக் கண்டறிய எளிதான வழியாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக நிலைமை கைமீறிப் போகும் போது இவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பது அவர்களின் பேச்சைப் பார்த்தாலே புரியும்.
அவசரமாக கிளம்புதல்
பொய் எப்போதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகும். எனவே பொய் பேசும்போது ஒருவர் மிகவும் அசௌகரியமாக இருப்பார்கள். உங்கள் காதலி உங்களிடம் பொய் பேசினால் அவர்கள் உங்களுடன் அதிக நேரம் இருக்க மாட்டார்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு கிளம்ப முயற்சிப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக உங்கள் காதலி உடனடியாக கிளம்ப எத்தனித்தால் அவர்கள் எதையே மறைக்கிறார்கள் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
