Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த அறிகுறிகள் உங்ககிட்ட இருந்தா? இன்னும் கடந்த காலத்தையே நினைச்சிட்டு லைஃப்-ப வேஸ்ட் பண்ணுறீங்களாம்!
சிலரால் கடந்த காலத்தை மறக்கவே முடியாது. அவர்கள் கடந்த கால அனுபவங்களில் மிகவும் அதிகமாக வாழ்கிறார்கள். இதனால், நிகழ்கால வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கத் தவறிவிடுகிறார்கள். அவர்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட நபர்கள் அவர்களைச் சுற்றி இருந்தாலும், கடந்த கால மனிதர்களையே நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
கடந்த கால வாழ்க்கையை கடந்த காலத்திலே விட்டுவிட்டு, நிகழ்காலத்தில் வாழும்போதுதான் நாம் எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். இதில், கடந்த காலத்திலேயே இருந்துவிட்டால், நிகழ்காலமும் எதிர்காலமும் இல்லாமலே போய்விடும். கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள், தாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

அவர்களின் கடந்த காலத்தை ஒரு முக்கிய அம்சமாக மிகைப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பெரும்பாலும் அவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் எதிர்மறையாக பாதிக்கும். கடந்த காலத்தை நீங்கள் மிகைப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நிலையான ஏக்கம்
உங்கள் கடந்த கால அனுபவங்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசினால் அல்லது சிந்தித்துப் பார்த்தால், உங்கள் கடந்த காலத்தை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதற்கான உறுதியான அறிகுறியாகும். நீங்கள் முன்பு தொடர்பில் இருந்த அன்புக்குரியவர்களுக்கான ஏக்கத்தின் அடையாளமாக இது இருக்கலாம். உங்கள் கடந்த காலத்தின் சிறந்த நினைவுகளை பற்றி நீங்கள் எப்போதும் நினைத்து கொண்டிருப்பீர்கள்.
நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்ப்பது
நம் அனைவரின் கடந்த காலமும் நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டு விஷயங்களையுமே கொண்டிருக்கும். ஆனால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தின் நேர்மறையான அம்சங்களை மட்டுமே நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம். அது ஒரு வகையில் நல்லது என்றாலும், எப்போதும் சிறந்தது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடந்த காலத்தில் நடந்த எதிர்மறையான விஷயங்களை நினைவில் கொள்வதைத் தவிர்ப்பது மறுப்பின் அறிகுறியாக இருக்கலாம். கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்த சிரமங்களை கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் போராடலாம். எனவே, எதிர்மறை விஷயங்களை நினைப்பதை தவிர்க்கலாம். இதன் மூலம் நீங்கள் முன்பு சந்தித்த அனைத்து கஷ்டங்களையும் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியும்.
கடந்த காலத்தை விட்டுவிட இயலாமை
சில நேரங்களில், உங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து முன்னேற நீங்கள் அதிக சிரமப்படலாம். உங்கள் கடந்த கால அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறந்த நேரம் என்று நீங்கள் நம்பலாம். தற்போதைய யதார்த்தமான வாழ்க்கையை, மாற்றுவதிலிருந்தும் அல்லது ஏற்றுக்கொள்வதிலிருந்தும் இது உங்களைத் தடுக்கலாம். இதனால், நீங்கள் கடந்த காலத்திலே இருக்க நேரிடும்.
உறவுகளை இலட்சியப்படுத்துதல்
பெரும்பாலும், கடந்த காலத்தை ரொமாண்டிசைஸ் செய்வதன் அடையாளம் கடந்த கால உறவையே நினைத்துக்கொண்டிருப்பது. முன்னாள் காதலர்களை அல்லது கடந்தகால உறவுகளை தற்போதைய உறவுகளை விட மேலானதாக பார்ப்பது அல்லது கடந்தகால காதலை மிகைப்படுத்தி பார்ப்பது நம்பத்தகாத எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் நிகழ்காலம் நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை என்று நீங்கள் மேலும் ஏமாற்றமடையலாம். ஆதலால், முதலில் நீங்கள் கடந்த கால வாழ்க்கையிலிருந்து வெளிவர வேண்டும். அதை மிகைப்படுத்துவதை முதலில் தவிர்க்க வேண்டும்.
நிகழ்காலத்தில் ஆர்வமின்மை
உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டிருந்தால், நிகழ்காலத்தில் உள்ள அனைத்து மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். இது இந்த உலகத்திலிருந்து நீங்கள் துண்டிக்கப்பட்டதாக உணர வைக்கும். மாற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை சமாளிக்க நீங்கள் போராட வேண்டியிருக்கும். உங்கள் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மீதான நம்பிக்கையை நீங்களே இழக்க நேரிடலாம்.



Click it and Unblock the Notifications

