Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நீங்க காதலிக்கும் ஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு காதலில் ஆர்வம் இல்லை என்று அர்த்தமாம்...!
எந்தவொரு உறவிற்கும் நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் அவசியம். குறிப்பாக காதல் உறவுகள் என்று வரும்போது அதில் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
எந்தவொரு உறவிற்கும் நம்பிக்கையும், அர்ப்பணிப்பும் அவசியம். குறிப்பாக காதல் உறவுகள் என்று வரும்போது அதில் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் தங்கள் காதலரிடம் அர்ப்பணிப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் பல நிகழ்வுகள் உள்ளன.

எந்தவொரு உறவிலும் இது ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கலாம். காதலரிடம் அர்ப்பணிப்பு சிக்கல்களை சந்திப்பவர்கள் குழப்பம், விரக்தி மற்றும் எதிர்காலத்தைப் பற்றி பயம் போன்ற பல உணர்வுகளுக்கு ஆளாவார்கள். உங்கள் காதலருக்கு அர்ப்பணிப்பு சிக்கல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகள் என்ன மேலும் அவர்களை எப்படி கையாளுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது
உங்கள் காதலர் எதிர்காலத்தைப் பற்றிய உரையாடல்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால், அது அர்ப்பணிப்பு சிக்கல்களின் அடையாளமாக இருக்கலாம். அவர் உங்களுடன் எதிர்காலத் திட்டங்கள் அல்லது இலக்குகளைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்தால் அவர்கள் உங்களுடன் அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடவில்லை என்று அர்த்தம்.
உணர்ச்சிரீதியான ஆதரவு இல்லாமல் இருப்பது
காதலில் அர்ப்பணிப்பு இல்லாத ஆண்கள் ஒருபோதும் தங்கள் காதலிக்கு உணர்ச்சிரீதியான ஆதரவு அளிக்கமாட்டார்கள். அவர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தவோ அல்லது பாசத்தைக் காட்டவோ சிரமப்படுவார்கள், மேலும் அவர்கள் காதலில் இருந்தாலும் எப்போதும் தனிமையானவராகவே இருப்பார்கள்.
பல குறுகியகால உறவுகள் இருக்கும்
உங்கள் காதலருக்கு கடந்த காலத்தில் பல குறுகிய கால உறவுகள் இருந்தால், நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் அடிக்கடி உறவுகளில் விழுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள், ஆனால் அவை நீண்ட காலம் நீடிக்காது. இது காதலில் அர்ப்பணிப்பு பற்றிய பயத்தின் காரணமாக இருக்கலாம்.
திட்டமிடுவதை தவிர்ப்பது
அர்ப்பணிப்பு சிக்கல்கள் உள்ள ஒருவர் உங்களுடன் இணைந்து திட்டங்களை உருவாக்குவதை தவிர்க்கலாம் அல்லது கடைசி நிமிடத்தில் திட்டங்களை ரத்து செய்யலாம். அவர் எதிர்காலம் தொடர்பான நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம். விஷயங்களை அதன் போக்கிலேயே நடக்கட்டும் என்று விட்டுவிடுவார்கள்.
எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளாமல் இருப்பது
அர்ப்பணிப்பு பிரச்சினைகள் உள்ள ஒரு ஆண்கள் உங்களுடன் அடிக்கடி கோபமாகவும், மகிழ்ச்சியாகவும் நடந்து கொள்வார்கள். எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். ஒரு நிமிடம் அவர் உறவில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பார்கள், ஆனால் அடுத்த நிமிடமே எரிந்து விழுவார்கள்.



Click it and Unblock the Notifications
