Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
பர்பெக்ட்டான திருமண உறவில் இந்த அறிகுறிகள் இருக்குமாம்... உங்க திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?
திருமண உறவு என்பது எப்போதும் மகிழ்ச்சியாக மட்டும் இருப்பதில்லை. சந்தேகம், கோபம், வலி மற்றும் விரக்தியின் கடுமையான காலக்கட்டங்களை ஒரு வெற்றிகரமான திருமண உறவு நிலைத்திருக்கிறது. சில திருமண உறவுகள் பாதியிலேயே முறிவடைவதற்கு காரணம் தம்பதிகளிடையே வெற்றிகரமான திருமண உறவை பராமரிக்க தேவையான சில குணங்கள் இல்லாமல் இருப்பதுதான்.
திருமண உறவு நீடித்திருக்க தம்பதிகள் தங்கள் உறவில் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். பர்பெக்ட்டான திருமணத்தில் மட்டுமே ஒருவர் இந்த உணர்வுகளை பெற முடியும்.

பர்பெக்ட்டான திருமண உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தாங்களாகவே இருப்பதற்கான சுதந்திரம்
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் அடையாளம் உண்டு. ஆரோக்கியமான திருமண உறவில், ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பு வெறுப்புகள், நண்பர்கள், யோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறது. ஒருவர் மற்றொருவரை விட்டு இருக்க முடியாது என்று உணர்ந்தால், அது உறவில் ஏதோ தவறாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பிற ஜோடிகள் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பது
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எது சிறந்தது என்பதைக் கண்டறிவதே சிறந்த உறவிற்கான திறவுகோலாகும். நீங்கள் மற்ற ஜோடிகளை பார்த்து ரகசியமாக பொறாமை கொள்ளாமல், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலை படாமல் இருந்தால், நீங்கள் நிச்சயமாக நல்ல திருமண வாழ்க்கையைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்.
நடிக்க தேவையிருக்காது
ஆரோக்கியமான திருமண உறவில் நீங்கள் குழப்பமான மனநிலையில் இருந்தாலும் சரி அல்லது மோசமான மனநிலையில் இருந்தாலும் சரி, உங்கள் துணையின் முன் நீங்கள் இனி நடிக்க வேண்டியதில்லை. உங்கள் கணவன் அல்லது மனைவி உங்கள் குறைகளை ஏற்றுக்கொண்டு உங்களை நீங்களாகவே இருக்க அனுமதிப்பது நல்ல துணையின் அறிகுறிகளாகும்.
நல்ல செக்ஸ்
நல்ல செக்ஸ் வாழ்க்கை கொண்டிருக்கும் தம்பதிகளுக்குள் பிரிவு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பர்பெக்ட்டான திருமண உறவில் இருக்கும் தம்பதிகள சிறந்த பாலியல் வாழ்க்கையைக் கொண்டிருப்பதாகக் கூறினார். இந்த நெருக்கம் திருமணத்தில் காதல் நெருப்பை அணைக்காமல் பார்த்துக்கொள்ளும்.
தவறை சுட்டிக்காட்டாமல் இருப்பது
நீங்கள் ஒருவருக்கொருவர் கடந்த கால தவறுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதை நிறுத்திவிட்டு, ஒரு நல்ல உறவை உருவாக்க ஒன்றாக வேலை செய்யும் போது நீங்கள் பர்பெக்ட்டான திருமணத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் மன்னிப்பதும், மறப்பதும் உங்களின் வழக்கமாக இருந்தால் உங்கள் திருமணத்தில் பிரிவென்பதே இல்லை.
மகிழ்ச்சிகரமான நேரம்
அலுவலகத்திலிருந்து நீங்கள் எவ்வளவு சோர்வாகத் திரும்பினாலும் அல்லது உங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதில் ஒரு பரபரப்பான நாளைக் கழித்தாலும், உங்கள் துணையுடன் சில தரமான நேரத்தைச் செலவிடுவதையும், உங்கள் நாளின் சுகமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதையும் நீங்கள் விரும்பினால் உங்கள் திருமணம் ஒரு பர்பெக்ட்டான திருமணமாகும்.



Click it and Unblock the Notifications

