Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்த 4 அறிகுறிகள் உங்க காதலனிடம் இருந்தா? அவரு உங்கள கல்யாணம் பண்ணிக்காம கழட்டிவிட்டு போயிடுவாராம்!
இன்றைய நாளில் காதலிக்காத நபர்களே இல்லை எனலாம். ஆனால், அவர்கள் அனைவரும் அந்த உறவிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறார்களா என்றால்? அது கேள்விக்குறிதான். மேலும், காதலிக்கும் பலர் திருமணம் செய்துகொள்வதில்லை.
சூழ்நிலை மற்றும் பல பிரச்சனைகள் காரணமாக பல காதலர்களின் வாழ்க்கை திருமணத்தில் கைகூடாமல் இருக்கலாம். ஆனால், சிலர் வேண்டுமென்றே திருமணத்தை தவிர்த்து, வெறும் காதல் உறவில் மட்டும் இருக்க விரும்புகிறார்கள். இது பெண்களுக்கான அறிவிப்பு. உங்கள் காதலன் உண்மையாக உங்களை காதலிக்கிறாரா? உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாரா? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

ஒரு உறவில் ஒருவரின் உண்மையான நோக்கங்களைத் தீர்மானிப்பது என்பது சவாலானதாக இருக்கலாம். ஆனால், உங்கள் காதலன் உங்களைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடவில்லை என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகளை உங்கள் காதலனிடம் நீங்கள் கவனித்திருந்தால், உங்கள் உறவை மதிப்பீடு செய்வது முக்கியம். அவை என்னென்ன அறிகுறிகள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
குடும்பத்தைச் சந்திக்கவில்லை என்றால்...
பல வருடங்கள் மற்றும் மாதங்கள் கடந்தும், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் எவரையும் நீங்கள் சந்திக்கவில்லை என்றால், அவர் எதிர்காலத்தில் உங்களுடன் இருக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம்.
உங்களை உண்மையாக நேசிக்கும் மற்றும் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் ஆண், கண்டிப்பா அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்துவார். இதன்மூலம், அவர் காதலில் உங்களுக்கு உண்மையாக இருப்பார்.
நண்பரை சந்திக்கவில்லை என்றால்..
உங்கள் காதலனின் சிறந்த நண்பரை பல மாதங்கள் கடந்தும் நீங்கள் சந்திக்கவில்லை என்றால், அது உங்கள் உறவின் ஆழத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பலாம். எந்தவொரு நபரும், தாங்கள் காதலிக்கும் விஷயத்தை முதலில் நண்பர்களிடம்தான் சொல்வார்கள்.
நெருங்கிய நண்பர்கள், தங்கள் நண்பனின் காதலைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். எனவே அவர் உங்களுக்கும் அவருக்கும் உள்ள காதலை ரகசியமாகவே வைத்திருந்தால், அது உறவில் அர்ப்பணிப்பு இல்லாததைக் குறிக்கலாம். அவர், உங்களுடன் நீண்ட காலம் இருக்க மாட்டார் என்பதற்கான முக்கியமான அறிகுறியாக இது இருக்கும்.
பொதுவெளியில் அறிமுகப்படுத்தவில்லை
நீங்கள் பொதுவில் இருக்கும்போது அவர் உங்களை தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்தால், அது உங்கள் உறவுக்கான மிகப்பெரிய சிவப்புக் கொடியாக இருக்கலாம்.
பெருமைமிக்க கூட்டாளர்கள் பெரும்பாலும் உங்களை அவர்களின் சமூக வட்டத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள். இது நடக்கவில்லை என்றால், அவர் உங்களுடன் ஒரு நீண்ட கால உறவை திட்டமிடவில்லை என்று அர்த்தம்.
உங்களிடம் முதலீடு செய்வதில்லை
நிதி மட்டுமே உங்கள் உறவின் வலிமையைத் தீர்மானிக்காது. இருப்பினும், அவர் உங்களுக்குப் பரிசுகளை வழங்குவதையோ அல்லது பகிரப்பட்ட செலவினங்களில் பங்களிப்பதையோ தொடர்ந்து தவிர்த்துவந்தால், அது அவர் உங்களுடன் எதிர்காலத்தை கற்பனைய செய்யவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு பங்குதாரர் பொதுவாக உறவில் முதலீடுகள் செய்ய தயாராக இருப்பார்கள்.
இறுதிக்குறிப்பு
இந்த உறவு முன்னேறாது அல்லது திருமணத்திற்கு வழிவகுக்காது என்பதற்கு மேலே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஓர் ஆரோக்கியமான உறவிற்கு தொடர்பு முக்கியமானது. உங்கள் உறவின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதுகுறித்து உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உரையாடுவது நல்லது.



Click it and Unblock the Notifications
