Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தம்பதிகளே! உங்க செக்ஸ் வாழ்க்கையை மசாலாவாக்க... உடலுறவுக்கு முன்னும் பின்னும் 'இத' செய்யுங்க போதும்!
ஒவ்வொருடைய வாழ்விலும் தாம்பத்திய வாழ்க்கை என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும். தம்பதிகள் இருவரின் விருப்பதோடு நடக்கும் உடலுறவு மிகவும் அற்புதமான உணர்வை கொடுக்கும். உடலுறவில் நன்றாக செயல்படுவதினால் மட்டும் இருவருக்கும் இன்பம் கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தம்பதிகள் இருவருக்குள்ளும் நெருக்கம் மற்றும் பிணைப்பு இருக்க வேண்டும். இவை இரண்டும் உங்கள் உறவையும் பாலியல் வாழ்க்கையையும் மகிழ்ச்சியானதாக மாற்றும். உடலுறவுக்கு முன்னும் பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை உங்கள் சுகாதாரத்தை பற்றியதும், மற்றொன்று முக்கியமான விஷயத்தை பற்றியதும். அவை சரியான உரையாடல்.

சரியான உரையாடல்கள் உடலுறவுக்கு முன் உங்களை உற்சாகமாக உணர உதவும், அதே சமயம் உடலுறவுக்குப் பிந்தைய உரையாடல்கள் உங்களை நெருக்கமாகவும் உணர வைக்கும். ஆனால், இதை பெரும்பலான தம்பதிகள் பின்பற்றுவதில்லை. உடலுறவுக்கு முன்னும் பின்னும் நல்ல உரையாடலை மேற்கொள்வது பற்றி இங்கே காணலாம்.
தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதிகள் இருவரும் தங்கள் இரு உடலையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்கிறார்கள். உங்கள் துணை அவர்களையே உங்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களை வசதியாகவும் திருப்தியாகவும் உணர வைக்க வேண்டும். அதற்கு விஷயங்களை நீங்கள் புதிதாக மேற்கொள்ள வேண்டும். அவற்றில் ஒன்று செக்ஸியான உரையாடலை மேற்கொள்வது.
படுக்கையறைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்புகொள்வது ஆரோக்கியமான உறவின் ரகசியம் என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆம், அது உண்மைதான். இதை ஒவ்வொரு தம்பதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். படுக்கையில் உரையாடல்களை மேற்கொள்வது தம்பதிகள் இருவரையும் பாலியல் ரீதியாக நன்றாக தூண்டும். காமசூத்ராவும் செக்ஸ் உரையாடலை பற்றி கூறுகிறது. பாலுறவுக்கு முன் நடக்கும் உரையாடல்கள் ஈர்க்கும் விதமாகவும் குறும்புத்தனமாகவும் இருக்க வேண்டும்.
ஒரு ஆய்வின் படி, வலுவான பாலியல் தொடர்பு கொண்ட தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் மிகவும் திருப்தி அடைகிறார்கள். மேலும் திறந்த தொடர்புடன், அதிக நெருக்கம் மற்றும் வலுவான உறவு உணர்வுகள் அவர்களுக்குள் இருக்கிறதாகக் கூறப்படுகிறது. உடலுறவில் எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும். அதற்கு தம்பதிகள் இருவரும் தங்கள் மனதில் நீங்கள் எதிர்கொள்ளும் லிபிடோ அல்லது பாலியல் செயலிழப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தாராளமாக பேசலாம்.
செக்ஸ் பற்றிய உரையாடல்கள்
செக்ஸ் என்பது உங்களுடைய விருப்பம் உட்பட பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு செயலாகும். உடலை ஒழுங்குபடுத்தப்பட்ட நிலைக்குத் திரும்பப் பெறுவது முக்கியம். எனவே உடலுறவுக்குப் பின் தம்பதிகள் இருவரும் பேசுவது ஒரு நல்ல நடைமுறையாகும். உடலுறவு முடிந்ததும், இருவரும் தனித்தனியாக செல்வது அல்லது நகர்வது ஆரோக்கியமானதல்ல.
கட்டிப்பிடிப்பது, மசாஜ் செய்வது, முத்தமிடுவது, கைகளைப் பிடிப்பது போன்ற பலவற்றை உள்ளடக்கிய விஷயங்களை இருவரும் முயற்சி செய்யலாம். இது உங்களை நன்றாக உணர வைக்கும். உங்கள் உறவை வலுப்படுத்தவும் நெருக்கமாக்கவும் பேசும் விஷயங்கள் உதவும்.
உடலுறவுக்குப் பிறகு சோர்வாக உணரும்போது, உங்கள் துணையின் செயல்திறனை விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். நீங்கள் செய்யக்கூடாத மற்ற விஷயம் என்னவென்றால், அவர்களின் உடலைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்காதீர்கள். அவர்கள் உங்களுடன் ஒரு நெருக்கமான தருணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
அதனால், உங்கள் துணையின் உடல் குறித்து நேர்மறையான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். உடலுறவுக்கு பிறகு இவ்வாறு மேற்கொள்ளும் மகிழ்ச்சியான, அழகான மற்றும் அமைதியான உரையாடல் வேறொரு இன்பத்தை உங்கள் இருவருக்கும் வழங்கலாம்.



Click it and Unblock the Notifications

