Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தம்பதிகளே! உங்க திருமண வாழ்க்கையில இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க...ஏன்னா அது உறவையே அழிச்சிடுமாம்!
பொதுவாக உறவு என்பது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும். அவற்றை நாம் கையாளும் விதத்தில்தான் நம்முடைய உறவு வாழ்க்கை இருக்கும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான வெற்றிகரமான உறவை பெறதான் விரும்புகிறார்கள். ஒரு வெற்றிகரமான உறவுக்கு தம்பதிகள் இருவரிடம் இருந்து நேரம், முயற்சி, காதல் மற்றும் நம்பிக்கை தேவைப்படும்.
ஆனால், தம்பதிகளிடையே முயற்சியின்மை அல்லது ஆர்வமின்மை, வழக்கமானதாக தோன்றுதல், தொடர்பு மற்றும் புரிதல் இல்லாமை, ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக்கொள்வது மற்றும் உறவுக்கு முன்னுரிமை கொடுக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு உறவு காலப்போக்கில் வலுவிழந்து போகலாம். இது இறுதியில் பிரிவுக்கு வழிவகுக்கும்.

ஒரு உறவில் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சிறு காரியங்கள் கூட பந்தத்தை பாதிக்கும். ஆதலால், உறவுகளில் தவறுகளை தவிர்க்க வேண்டியது முக்கியம். உங்கள் உறவை மேம்படுத்தவும், உங்களுக்குள் பிரச்சனை வராமல் இருக்கவும் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உறவு தவறுகளை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணித்தல்
எப்போதும் உங்கள் துணையின் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணிக்காதீர்கள். இது உறவில் மனகசப்பை ஏற்படுத்தும். உங்கள் துணையின் உணர்வுகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அவர்கள் கூற வருவதை காதுகொடுத்து கேளுங்கள். அவர்களுடன் ஆரோக்கியமான தகவல் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளை சரிபார்க்கவும், சமரசம் செய்யவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
துணையை சாதாரணமாக எடுத்துக்கொள்வது
உங்கள் துணையை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்! மாறாக, உங்கள் துணை செய்யும் விஷயங்களுக்கு தவறாமல் பாராட்டுங்கள் மற்றும் நன்றி தெரிவியுங்கள். அவர்களின் முயற்சிகளை அங்கீகரியுங்கள். உங்கள் துணையின் மீது நீங்கள் அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்ட சிறிய விஷயங்களைச் செய்யலாம்.
துணையை விமர்சிப்பது அல்லது ஏமாற்றுவது
எதெற்கெடுத்தாலும் உங்கள் துணையை விமர்சனம் செய்யாதீர்கள். அவர்களுடைய நேர்மறையான நடத்தை மற்றும் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள். தேவைப்படும்போது, அவர்களுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை நீங்கள் வழங்கலாம். உங்கள் துணையிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். கடுமையான வார்த்தைகளால் அவர்களை விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது உங்கள் துணையின் உணர்வுகளை புண்படுத்தும்.
மோதலைத் தவிர்க்கவும்
உறவில் இருக்கும் பிரச்சினைகளை நிதானமாகவும் மரியாதையுடனும் கையாளுங்கள். உங்கள் உணர்வுகள் மற்றும் தேவைகளை உங்கள் துணையை புண்படுத்தாமல் வெளிப்படுத்துங்கள். மேலும் உங்கள் இருவரையும் ஒன்றாக்கும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.
சுய பாதுகாப்பு
உங்களுக்கான சொந்த பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இது உங்களை மிகவும் நிறைவாகவும் உற்சாகமாகவும் உணர உதவும். அதுமட்டுமில்லாமல், உங்கள் உறவையும் மேம்படுத்தும். உங்கள் தேவைகளைப் புறக்கணிப்பதைத் தவிர்க்கவும், ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத வரை, நீங்கள் வேறொருவரை மகிழ்விக்க முடியாது.
நன்றி கூறுங்கள்
உங்கள் துணையுடன் உங்கள் உறவை மேம்படுத்த நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். உங்கள் துணையின் எதிர்மறையான விஷயங்களை பார்ப்பதற்கு பதிலாக உங்கள் உறவின் நேர்மறையான பண்புகளில் கவனம் செலுத்துங்கள். உணவு சமைப்பது, துணி துவைப்பது அல்லது குப்பையை வெளியே போடுவது போன்ற விஷயங்களுக்கு உதவும்போது, உங்கள் துணைக்கு "நன்றி" சொல்லுங்கள்.
பாராட்டு தெரிவியுங்கள்
உங்கள் துணையைப் பற்றி நீங்கள் பாராட்டக்கூடிய மூன்று விஷயங்களை எழுதுவதற்கு ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் உறவில் உள்ள நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த உதவும். உங்கள் துணையின் தோற்றம், செயல்கள் மற்றும் சாதனைகள் குறித்து அவர்களைப் பாராட்டுங்கள்.
காதல் குறிப்பு, அவர்களுக்குப் பிடித்த உணவைச் சமைத்து தருவது அல்லது ஆச்சரியமான பரிசு வழங்குதல் போன்ற சிறிய சைகைகள் உங்கள் துணையைப் பாராட்டவும் நேசிக்கவும் செய்யும்.
இறுதிக்குறிப்பு
உங்கள் துணையின் நிறை மற்றும் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகில் யாரும் நூறு சதவீதம் சரியானவர்கள் அல்ல, அவர்களின் நேர்மறையான பண்புகளில் கவனம் செலுத்துவது அவர்களில் உள்ள நல்லதைக் காண உதவும். உங்கள் துணையின் கண்ணோட்டத்திலும் விஷயங்களைப் பார்க்கத் தொடங்குங்கள். இது அவர்களை பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், உங்கள் தொடர்பை ஆழப்படுத்தவும் உதவும். மேலும், ஒரு உறவில் நன்றியுணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

