Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க Ex லவ்வர் திரும்ப உங்களுக்கு மெசேஜ் பண்றாங்களா? அப்ப அதுக்கு இதுல ஒன்னுதான் காரணமா இருக்குமாம்...!
காதலர்களின் தேசிய மொழி என்றால் அது டெக்ஸ்டிங்தான். காதலர்கள் காதலில் இருக்கும் போது தங்களின் நேரம் முழுவதையும் போன் பேசுவதற்கும், மெசேஜ் அனுப்புவதற்குமே செலவழிப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் காதல் முறிந்து விட்டால் இவை அனைத்தும் முற்றிலும் நின்றுவிடும்.
சில அரிதான சந்தர்ப்பங்களில் உங்கள் Ex-லவ்வர் மீண்டும் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம். உங்களை மெசேஜ் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

உங்கள் Ex-லவ்வருடன் தொடர்பில் இருப்பது மதிப்புக்குரியது என்று நீங்கள் நினைக்கிறீர்களா அல்லது அவர்களுடனான அனைத்து தொடர்பையும் நிறுத்த விரும்புகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் Ex லவ்வரின் திடீர் தொடர்பு உங்களுக்கு குழப்பத்தையும்பலவிதமான எண்ண ஓட்டங்களையும் அளிக்கலாம். உங்கள் Ex லவ்வர் உங்களை மீண்டும் தொடர்பு கொள்வதற்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர்கள் உங்களை மிஸ் செய்கிறார்கள்
நீங்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவழித்ததை நினைத்து பார்க்கும்போது, உங்கள் Ex உங்களை மீண்டும் தொடர்பு கொள்வது முற்றிலும் இயற்கையானது. உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், அவர்கள் அந்த தொடர்பை புதுப்பிக்க நினைக்கிறார்கள். உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது ஆறுதலாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
அவர்கள் தனிமையாக உணரலாம்
பிரிந்த பிறகு உங்கள் முன்னாள் காதலன்/காதலி சிங்கிளாக இருந்தால், அவர்கள் தனிமையாக உணர்கிறார்கள் மற்றும் யாராவது அவர்களுடன் பேச வேண்டும் என்று விரும்புவார்கள். உறவில் இருக்கும்போது நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி அனுப்பும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, உங்கள் முன்னாள் காதலன்/காதலி உங்களை அடிக்கடி தொடர்பு கொள்ளலாம்.
உங்களுடன் மீண்டும் இணைய விரும்பலாம்
உங்கள் துணை முக்கியமான நாட்களிலோ அல்லது அடிக்கடி உங்களுடன் போனில் பேசினாலோ அல்லது மெசேஜ் செய்தாலோ அவர்கள் உங்களுடன் மீண்டும் இணைய விரும்புவதற்கான அறிகுறியாக அது இருக்கலாம். உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகளை தேடுவது அல்லது உருவாக்குவது அதற்கான வாய்ப்புள்ளதா என்பதை சோதிப்பதற்காக அவர்கள் செய்யலாம்.
பழக்கத்தை மாற்ற முடியாமல் இருக்கலாம்
உங்கள் காதல் முறிவு சமீபத்தில் ஏற்பட்டதாக இருந்தால், உங்களுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கத்தை தவிர்ப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கலாம், குறிப்பாக உங்கள் முறிவு கசப்பான அனுபவங்களால் ஏற்படாமல் இருந்திருந்தால் இது மிகவும் கடினமாகும். உங்கள் முன்னாள் காதலன்/காதலி குறுஞ்செய்தி அனுப்புவதில் தீங்கற்றவராக இருக்கிறாரா அல்லது அவர்களுக்கு மறைமுக நோக்கம் உள்ளதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
உங்களை முழுதாக மறக்காமல் இருக்கலாம்
உங்கள் முன்னாள் காதலன்/காதலிக்கு இன்னும் உங்கள் மீது உணர்வுகள் இருக்கலாம், இன்னும் அவர்கள் உங்களை விட்டு முழுமையாக பிரிந்திருக்கவில்லை. உங்கள் முன்னாள் காதலன்/காதலி உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது நன்றாக உணரலாம், மேலும் உறவை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வைத்திருக்கலாம்.
உங்களுடன் நண்பராக தொடர விரும்பலாம்
உங்கள் முன்னாள் காதலன்/காதலி உங்களுடன் நண்பர்களாக இருக்க விரும்பலாம். அவர்கள் இன்னும் உங்கள் நட்பை மதிக்கலாம், அதனால் அவர்கள் மற்ற நண்பர்களைப் போலவே உங்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
நீங்கள் முழுமையாகி வெளிவந்து விட்டீர்களா என்று சோதிக்கலாம்
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் வேறு யாருடனாவது இணைந்து விட்டீர்களா என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். இதைச் செய்வதற்கு அவர்களுக்கு இரண்டு வெவ்வேறு நோக்கங்கள் இருக்கலாம். உங்களுடன் மீண்டும் இணையலாம் என்ற நம்பிக்கை அல்லது நீங்கள் வேறொருவருடன் டேட்டிங் செய்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்வது.
அவர்கள் ஏற்கனவே வேறொருவரை காதலிக்கத் தொடங்கியிருந்தால், நீங்கள் இன்னும் சிங்கிளாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பலாம், அதனால் அவர்கள் மனநிறைவை பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications
