Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
பெண்களே! உங்க கணவனுக்கு உணர்வுரீதியாக தொடர்பு ஏற்படுவதற்கு 'இந்த' விஷயங்கள்தான் காரணமாம்!
கணவன் மனைவி உறவில் துரோகம் என்பது உடல் அளவில் ஏற்படுவதைப் போலவே உணர்ச்சி ரீதியான சிக்கல்களும் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் காரணியாகிறது. ஆண் பெண் என இருபாலரும் இதில் குற்றவாளிகளாக இருக்கலாம் என்றாலும், சில ஆண்கள் ஏன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விழுகிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வது, துரோகத்திற்கு வழிவகுக்கும் உங்கள் கணவரின் பிரச்சினைகளை சரி செய்ய உதவும். ஆண்களுக்கு உணர்வு ரீதியான தொடர்பு ஏற்பட வழிவகுக்கும் 7 காரணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உணர்வுரீதியான இணைப்பு இல்லாமை
ஆண்கள் உணர்ச்சிரீதியான தொடர்புகளை தேடுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இருப்பது, அவர்களின் தற்போதைய உறவில் உணர்வு ரீதியான தொடர்பு இல்லாமல் இருப்பது. ஆண்களும் பெண்களைப் போலவே உணர்வு பூர்வமான நெருக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். வீட்டில் அது கிடைக்காத போது தான், அதை வெளியில் தேட துவங்குவார்கள்.
தோழமையும் ஆதரவும்
ஆண்கள் பெரும்பாலும் தங்கள் துணையுடனான உறவில் தனிமையாகவும் ஆதரவற்றவர்களாகவும் உணரும்போது உணர்வு ரீதியான சிக்கல்களை சந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியிடம் பெற முடியாத தோழமையும் ஆதரவான ஆறுதலை வெளியில் இருக்கும் வேறு ஒரு நண்பர் அல்லது சகபணியாளரிடம் பெறலாம்.
உறவுச் சிக்கல்களில் இருந்து தப்பித்தல்
உறவுச் சிக்கல்களை நேருக்கு நேர் எதிர் கொண்டு தீர்வு காண்பதற்கு பதிலாக, சில ஆண்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உணர்வு ரீதியான பகிர்தலை தேடுகிறார்கள். இது அவர்களின் சொந்த பிரச்சனைகளில் இருந்து தற்காலிக திசைதிருப்பலாக மட்டுமே அமையுமே தவிர, பிரச்சனைகளை முழுவதும் சரி செய்யாது.
உற்சாகம் மற்றும் சிலிர்ப்பின் ஈர்ப்புசில ஆண்கள் புதிய நபரைப் பின்தொடரும் போது ஏற்படும் உற்சாகம் மற்றும் சிலிர்ப்பால் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு இரகசியமான உணர்ச்சி ரீதியான தொடர்பின் போது ஏற்படும் உற்சாகம் அவர்கள் விரும்ப கூடியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உணர வைக்கும்.
சுயமரியாதையை அதிகரிக்கும்
வீட்டில் சுயமரியாதையை இழப்பதாக உணரும் ஆண்களுக்கு இந்த உணர்வு ரீதியான ஈகோ ஒரு வகையான ஊக்கத்தை அளிக்கிறது. அவர்களின் துணை அல்லாமல், வெளியே உள்ள ஒருவரின் பாராட்டுக்கள் மற்றும் நேர்மறையான கவனம் அவர்களின் சுய மதிப்பை தற்காலிகமாக உயர்த்துவதாக உணர்கிறார்கள்.
சலிப்பு மற்றும் வழக்கமான ஒன்று
நீண்ட கால உறவில் திரும்ப திரும்ப செய்யும் சில செயல்களால் ஏற்படும் ஒரு வித சலிப்பு, சில ஆண்கள் தங்கள் துணையை தவிர்த்து, வெளியே கிடைக்கும் உறவில் உற்சாகத்தையும் புதுமையையும் தேட வழிவகுக்கும். உணர்வு ரீதியான பிரச்சனையின் போது புத்துணர்ச்சி மற்றும் சாகச உணர்வை அவர்கள் வீட்டில் பெறவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நெருக்கம் இல்லாமை
எந்தவொரு கணவன் மனைவி காதல் உறவிலும் உடல் நெருக்கம் அவசியம் என்பதை போல, உணர்வுபூர்வமான நெருக்கமும் மிக அவசியமாகிறது. ஒருவர் தான் துணையுடன் உணர்ச்சி ரீதியாக அதிக இடைவெளியில் இருந்தால், அதன் தாக்கத்தால் அந்த நெருக்கத்தை சரி செய்ய, அவர் வேறு ஒரு தொடர்பை நாடிச் செல்ல வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications
