Latest Updates
-
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
'அந்த' நேரத்தில் காண்டம் கிழிஞ்சி போயிடுதா? அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
'அந்த' நேரத்தில் ஆணுறை கிழிவது அல்லது உடைவது தம்பதிகள் இருவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இது கர்ப்பம் தரித்துவிடுமோ என்ற பயத்தையும், பாதுகாப்பற்ற உடலுறவாக அமைந்துவிடுமோ என்ற பயத்தையும், பாதியிலே இன்பம் கலைக்கப்படுகிறது என்ற வருத்தத்தையும் இருவருக்கும் ஏற்படுத்தலாம்.
பாதுகாப்பான உடலுறவுக்காக காண்டமை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக உடலுறவை அனுபவிக்கும்போது, திடீரென்று ஆணுறை உடையலாம் அல்லது கிழியலாம். உடலுறவுக்கு முன் நீங்கள் பயன்படுத்திய காண்டம் பயனற்றவையாக போகும்போது, அது உங்களுக்கு பீதியை ஏற்படுத்தும்.
இது தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய் தொற்றுக்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். ஆணுறை உடைவது பொதுவானது மற்றும் பல காரணங்களால் இவை நிகழலாம். உடலுறவுக்கு இடையில் ஆணுறை ஏன் கிழிகிறது? ஆணுறை உடைந்த பின்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆணுறை மிகவும் பழையதாக இருக்கலாம்
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆணுறைகள் பழையதாக இருந்தால் அல்லது அவற்றின் காலாவதி தேதியைக் கடந்திருந்தால், அவை உடைந்துவிடும். காலாவதி தேதியை கடந்த பழைய ஆணுறைகள் நம்பகத்தன்மை குறைவாகவும் எளிதில் கிழியக் கூடியதாக இருக்கும். எனவே, அடுத்த முறை நீங்கள் கடைகளில் ஆணுறை வாங்கும்போது, அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க பேக்கில் உள்ள காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும். பழைய காண்டம் வாங்குவதை தவிர்த்து, புதியதாக வாங்குங்கள்.

வெப்பத்தின் வெளிப்பாடு
ஆணுறைகள் கிழிந்து போவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அவை அதிக வெப்பத்தில் வெளிப்படுவதும் ஆகும். வெப்பத்தின் வெளிப்பாடுகள் இருக்கும் இடத்தில், ஆணுறைகளை நீங்கள் வைத்திருக்கும்போது, அவை கிழிந்துபோக அதிக வாய்ப்புள்ளது. குளிர்ந்த மற்றும் நேரடியாக சூரிய ஒளி படாதவாறு ஆணுறைகளை வைக்க வேண்டும்.
மசகு எண்ணெய் இல்லாமல் முரட்டுத்தனமான உடலுறவு
உராய்வு உடலுறவை மகிழ்ச்சியடையச் செய்யும் அதே வேளையில், அதிக உராய்வு ஆணுறை கிழிந்துபோக அல்லது உடைந்து போக வைக்கலாம். மேலும் மசகு எண்ணெய் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்வதும் உங்களுக்கு உதவாது.
ஆணுறை உடைவதைத் தவிர்க்க லூப்ரிகேஷன் அவசியம். முடிந்தால் லூப்ரிகேட்டட் ஆணுறைகளைப் பயன்படுத்தவும். தேவைப்பட்டால் அதிக மசகு எண்ணெய் சேர்க்கவும் வேண்டும். உடலுறவுக்கு முன்பு ஆரோக்கியமான சரியான லூப் பயன்படுத்துவதன் மூலம் உராய்வு கணிசமாகக் குறைக்கப்படும் மற்றும் உங்கள் ஆணுறையும் கிழிந்து போகாமல் இருக்கும்.
தவறான அளவில் பயன்படுத்துவது
ஆணுறை மிகவும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும் ஆணுறையைப் பயன்படுத்துவதும் ஆணுறை உடைவதற்கு அல்லது கிழிந்து போவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆணுறைகள் சரியாகப் போடப்படாவிட்டால், ஆணுறையின் நுனியில் போதுமான இடத்தை அனுமதிக்காதது போன்ற காரணங்களால், அவை பயன்படுத்தும் போது கிழிந்துவிடும்.
உற்பத்தி குறைபாடு
காண்டம் தயாரிக்கும் உற்பத்தியில் குறைபாடு இருப்பது, உங்கள் தவறு அல்ல. அது உற்பத்தியாளரின் தவறு. குறைபாடுகள் மற்றும் மைக்ரோடியர்களை சரிபார்க்க அவர்கள் தொடர்ச்சியான சோதனைகள் மூலம் ஆணுறைகளை வைக்கும்போது, சில நேரங்களில் இவை நடக்கும். எனவே, ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ளும்போது, கூடுதல் கவனமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எனவே, நீங்கள் நல்ல அளவு மசகு எண்ணெய் கொண்ட ஒரு புதிய ஆணுறையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், மேலும் சிறிது காலமாக உடலுறவுக்கு இடையில் கூட தேவைப்பட்டால் ஆணுறைகளை மாற்றவும்.
உங்கள் ஆணுறை கிழிந்தால் என்ன செய்வது?
உங்கள் ஆணுறை கிழிந்தது அல்லது உடைந்து உங்களுக்குத் தெரிந்தால், அதை உடனே நிறுத்திவிட்டு புதிய ஆணுறையைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவரை அழைத்து அதைப் பற்றி பேசுங்கள். எனவே ஆணுறை முறிவு ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பான உடலுறவு கொள்ளவும் மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை மனதில் கொண்டு செயல்படுங்கள்.



Click it and Unblock the Notifications
