Latest Updates
-
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
உங்ககிட்ட இந்த தகுதிகள் இருக்கா? அப்ப நீங்க சிறந்த கணவன்/மனைவியா இருப்பீங்களாம்... செக் பண்ணிக்கோங்க!
திருமண வாழ்க்கையில் நுழையும் அனைவருக்குமே தங்களுக்கு அன்பான மற்றும் பர்பெக்ட்டான வாழ்க்கைத்துணை கிடைக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்கள். திருமணம் மற்றும் தேனிலவு உற்சாகம் மறைந்து, நிஜ வாழ்க்கைக்குள் நுழையும் போது, உங்கள் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பங்குகொள்ள உங்களுக்கு ஒரு துணை இருப்பதை நீங்கள் உணர வேண்டும்.
நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்கும் போது, உங்கள் காதல் குறையத் தொடங்குகிறது. திருமணச் சடங்குகளின் போது கொடுக்கப்படும் வாக்குறுதிகளை பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை. உங்கள் கணவன்/மனைவிக்கு நீங்கள் சிறந்த வாழ்க்கைத்துணையாக இருக்க விரும்பினால் சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இரக்கம்
ஒரு நல்ல வாழ்க்கைத்துணை தங்கள் துணையுடனும் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடமும் அக்கறையுடனும், இரக்கத்துடனும், கனிவுடனும் இருக்க வேண்டும். அவர்கள் பிரச்சினைகளில் தீர்வைத் தேடுவதற்கும், துன்பக் காலங்களில் அமைதியை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும்.
நேரம் ஒதுக்குதல்
ஒரு நல்ல வாழ்க்கைத்துணை தங்கள் கூட்டாளருக்காக நேரத்தை ஒதுக்க உண்மையாக முயற்சிக்க வேண்டும். அவர்கள் மற்ற கடமைகள் மற்றும் வேலைகளில் மூழ்கி இருக்கக்கூடாது, எப்போதும் தங்கள் வாழ்க்கையில் பாதியாக இருக்கும் துணையுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
மரியாதை மற்றும் ஊக்குவித்தல்
ஒரு நல்ல வாழ்க்கைத் துணை எப்போதும் தங்கள் துணையை ஊக்கவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் துணையின் முடிவை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் கருத்துக்களை அல்லது கொள்கைகளை ஒருபோதும் நச்சுக்கக்கூடாது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நம்பிக்கை இருக்க வேண்டும்
ஒரு நல்ல வாழ்க்கைத்துணை ஒருபோதும் தங்களின் நிதானத்தை இழக்கக்கூடாது மற்றும் பிரச்சினைகளின் போது அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு தீர்வை எட்டுவதை உறுதி செய்ய வேண்டும்.
டீம்வொர்க்
ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அனைத்து நடவடிக்கைகளிலும் தங்களின் பங்கை சரியாக செய்ய வேண்டும் மற்றும் தங்கள் துணை பங்காளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு உறவிலும் டீம் வொர்க் ஒரு முக்கிய அம்சமாகும், மேலும் இந்த முக்கியமான தரத்தை ஒருபோதும் தவறவிடக்கூடாது. குழுப்பணி மற்றும் ஒருங்கிணைப்பு உண்மையில் ஒரு போனஸ் தரம்.
தனிப்பட்ட ஸ்பேஸை மதிக்க வேண்டும்
ஒரு நல்ல வாழ்க்கைத்துணை திருமண உறவில் தங்கள் துணையின் தனிப்பட்ட உரிமைகளையும், ஸ்பேஸையும் அவமதிக்கக்கூடாது. ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது, எனவே தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பது ஒரு நல்ல மனைவி அல்லது கணவன் செய்யக்கூடாத ஒன்றாக இருக்க வேண்டும்.
தோற்றத்தை பராமரிக்க வேண்டும்
பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தங்கள் தோற்றம் குறித்து அக்கறைக் கொள்வதில்லை. தங்கள் துணையுடன் வசதியாக உணருவதால் தங்கள் தோற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. இதுவே சில சமயங்களில் காதலைக் கொல்லும். உங்கள் துணைக்கு எப்போதும் பொருத்தமாக இருக்க முயற்சிப்பது உங்கள் காதலின் வெளிப்பாடாக இருக்கும்.



Click it and Unblock the Notifications


