Latest Updates
-
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆண்கள் எந்த வீட்டு வேலையையும் செய்யாமல் இருப்பதற்கு இந்த விஷயங்கள் தான் காரணமாம் தெரியுமா?
உங்கள் கணவர் முன்னொரு நாளில் உங்களுக்கு உதவ நினைத்து செய்த செயலால், அவர்களை நீங்கள் மோசமாக பேசி விமர்சனம் செய்திருக்கலாம்.
பெரும்பலான இந்திய குடும்பங்களில் ஆண், பெண் இருவருக்கும் பாகுபாடுகள் பார்க்கப்படுகின்றன. ஆண்களுக்கு என்று சில கடமைகளும், நிறைய சுதந்திரமும் உள்ளன. ஆண்களை விட அதிகமாக பெண்களுக்கு வேலைகளும், பொறுப்புகளும் மற்றும் அதிகபட்ச கட்டுபாடுகளும் இருக்கின்றன. அன்றைய காலம் முதல் இன்று வரை ஆண்களுக்கு பெண்கள் அடிமைகளாகவே இருந்துவர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளர்ந்து வரும் நவீன காலச்சாரத்திற்கு ஏற்ப சில ஆண்களின் சிந்தனைகள் மாறி வருகின்றன. அந்த வகையில், பெண்களை தங்களுக்கு சமமாக பார்க்கவும் மதிக்கவும் செய்துவருகிறார்கள். இருப்பினும் பெரும்பாலான இந்திய குடும்பங்களில் வீட்டு வேலை என்றாலே பெண் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவலநிலை உள்ளது.

வீட்டு வேலைகளை வீட்டு பெண்களிடம் ஆண்கள் பகிர்ந்துகொள்வதே இல்லை. அது, தாய், தங்கை மற்றும் மனைவியாக யாராக இருப்பினும், ஆண்கள் வீட்டு வேலைகளை செய்யமால் தவிர்க்கிறார்கள். ஆண்கள் ஏன் வீட்டு வேலைகள் செய்வதில்லை மற்றும் வீட்டு வேளைகளில் பெண்களுக்கு உதவவில்லை என்பதற்கான காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஒரே மாதிரியான நம்பிக்கைகள்
இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பல குடும்பங்களில் ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வதில்லை. ஏனெனில், ஆண்கள் வீட்டுப் பொறுப்புகளைப் பற்றிய ஒரே மாதிரியான நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் சில பணிகள் மற்றும் பொறுப்புகள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக, பெண்தான் வீட்டை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். சமைப்பது முதல் பாத்திரங்களை கழுவது வரை, ஆடைகளை துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது மற்றும் குழந்தைகள் முதல் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்துக்கொள்வது என அனைத்தும் பெண்களின் வேலையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால், ஆண்கள் வீட்டு வேலைகளை செய்வதில்லை.

கடந்த கால விமர்சனங்கள்
உங்கள் கணவர் முன்னொரு நாளில் உங்களுக்கு உதவ நினைத்து செய்த செயலால், அவர்களை நீங்கள் மோசமாக பேசி விமர்சனம் செய்திருக்கலாம். எந்த விதமான கூச்சல் அல்லது விமர்சனங்களைக் கேட்பதற்குப் பதிலாக, மக்கள் அந்தப் பணிகளைச் செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிடுகிறார்கள். இதையே ஆண்களும் வீட்டு வேலைகளிலும் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆண் என்ற கர்வமும் பெருமையும் அவர்களை வீட்டு வேலை செய்யவிடாமலும் கற்றுக்கொள்ளவும் தடுக்கிறது. எனவே, ஆண்கள் எந்த வீட்டு வேலையையும் செய்ய தயக்கம் கொள்கிறார்கள்.

உங்களைப் போன்று விஷயங்களைப் பற்றி சிந்திப்பதில்லை
இன்றைய நாளில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். எந்தவிதமான வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும், அவர்கள் வீட்டு வேலையையும் செய்துவிட்டுதான் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களால், எல்லாவற்றையும் சமாளிக்க முடிகிறது. ஆனால், ஆண்கள் பெண்களை போல சிந்திப்பதில்லை. நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, பெரிய மற்றும் முக்கியமான விஷயங்களை மறந்துவிடுகிறோம். உங்கள் கணவர் பல வேலைகள் செய்யும்போது, நிறைய விஷயங்களை அவர்கள் மறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக ஆண்கள் வீட்டு வேலை செய்யாமல் இருக்கலாம்.

பொறுப்பற்ற நபராக இருப்பது
வீட்டு வேலைகள் செய்வதில் அலட்சியமாகவும் மிகவும் பொறுப்பற்ற நபராக இருக்கலாம். வெறுமனே எந்த வேலையையும் செய்ய விரும்பாத சோம்பேறியாக்கூட அவர்கள் இருக்கலாம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் நலன் மட்டுமே கருத்தில்கொண்டு வாழும் பல ஆண்கள் உள்ளனர். அதனால், இவர்கள் வீட்டு பொறுப்புகளை எடுத்துக்கொள்வதில்லை.

எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்
பெண்கள், எப்போதும் எல்லா பொறுப்புகளையும் நீங்களே ஏற்றுக்கொள்கிறீர்கள். இதனால், எல்லாப் பணிகளையும் நீங்களே செய்து முடித்துவிடுகிறீர்கள். இதனால், உங்கள் கணவர் எந்த புகாரும் செய்யாமல் வேலைகள் அனைத்தையும் செய்ய உங்களை அனுமதிப்பார். எனவே, தம்பதிகள் உங்களுக்கான வேலைகளைப் பிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இறுதிக்குறிப்பு
ஆண், பெண் இருவரும் சமம் என்ற உண்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லா வேலைகளையும் சமமாக பிரித்து செய்யுங்கள். இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்லும்போது, பெண்கள் மட்டுமே அதிக வேலைகளையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வது, அவர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தையும் உடல் சோர்வையும் கொடுக்கும். ஆதலால், வீட்டு வேலைகள் முதல் எல்லா வேலைகளையும் இருவரும் சமமாக பிரித்து செய்யுங்கள். இது உங்கள் உறவும் வாழ்க்கையும் அழகாக மாற்றும்.



Click it and Unblock the Notifications