For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் துணையுடன் நீங்கள் இதை செய்தால் உங்களுக்குள் பிரிவே ஏற்படாது…!

திரைப்படங்கள் ஒரு பாரம்பரிய திருமண ஆலோசனை முறையாகச் செயல்படுகிறது.

|

இன்றைய நாளில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. விவாகரத்து பெரும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் நவீன உலகில் இருவருக்குமான அன்பு, நெருக்கம், காதல், விட்டுக்கொடுக்கும் மனம், உணர்வுகளை புரிந்துகொள்ளாதது என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோன்ற பல காரணங்கள் விவாகரத்துக்கு வழிவகுக்கும். ஆண்-பெண் உறவு, குடும்ப உறவுகள் என்பதும் சிக்கல் நிறைந்ததாகத்தான் உள்ளது.

Watching romantic movies with your partner can save you from a divorce

இந்த சுரங்கப்பாதையின் முடிவில் உள்ள வெளிச்சம் என்னவென்றால், மக்கள் தங்கள் திருமண வாழக்கையை உயிர்ப்போடு வைத்திருக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள். சமீபத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில், திருமணமான தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரைப்படம் பார்ப்பது

திரைப்படம் பார்ப்பது

அமெரிக்காவின் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, ஐந்து தம்பதிகளைத் தேர்வு செய்து ஒரு மாதத்திற்கு நல்ல காதல், ரொமாண்டிக் திரைப்படங்களைப் பார்க்க வைத்தனர். பின்னர், அவர்களின் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளைத் திரைப்படம் பார்த்ததற்குப் பிறகு விவாதிப்பது போன்றவற்றை மேற்கொள்ளச் செய்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விவாகரத்து விகிதங்களைப் பாதியாகக் குறைக்கிறது

விவாகரத்து விகிதங்களைப் பாதியாகக் குறைக்கிறது

திரைப்படத்தைப் பார்த்ததற்குப் பின்னர் விவாதிக்கப்படும் அவர்களின் திருமண வாழ்க்கை அவர்களின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தவில்லை. காதல் திரைப்படத்தைப் பார்ப்பதால் விவாகரத்து விகிதங்கள் பாதியாகக் குறைக்கிறது என்கிறது ஆய்வு முடிவுகள். மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவினை விகிதத்தை 24% முதல் 11% வரை குறைக்கிறது. இந்த ஆய்வு ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் டாக்டர் ரொனால்ட் ரோஜ் தலைமையிலான குழு மேற்கொண்டது.

MOST READ: மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா...!

பாரம்பரிய திருமண ஆலோசனை

பாரம்பரிய திருமண ஆலோசனை

திரைப்படங்கள் ஒரு பாரம்பரிய திருமண ஆலோசனை முறையாகச் செயல்படுகிறது. கணவன்-மனைவி இருவரும் தங்கள் உறவுகளில் நல்ல உணர்வைக் கொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, உணர்வுகளை புரிந்துகொள்வது உள்ளிட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கு புதிய திறன்களை கற்பிக்கத் தேவையில்லை.

நிறைகுறைகளை கவனிக்க உதவுகிறது

நிறைகுறைகளை கவனிக்க உதவுகிறது

திரையில் உள்ள தம்பதிகளின் சண்டைகளைப் பார்ப்பது அவர்களின் நிறை குறைகளைக் கவனிக்க உதவும். திரைப்படத்தை காணும்போது, அதில் உள்ள கேரக்டராகவே நாமும் மாறிவிடுவோம். நோயாளிகளை மருத்துவர் எப்படி கவனித்துக்கொள்கிறார் என்ற அணுகுமுறையைப் போலவே திரைப்பட முறையையும் திறமையாக்குவது என்னவென்றால், தம்பதியினரின் நடத்தையைப் பற்றி கடினமாகப் பார்க்க உதவுகிறது.

புறநிலை பார்வை

புறநிலை பார்வை

திரையில் உள்ள தம்பதிகள் வாதங்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைப் பார்த்து, நிஜ வாழ்க்கையில் உள்ள தம்பதிகள் தங்கள் திருமணத்துடன் தொடர்புபடுத்தலாம். இது குறைவான களங்கம் மற்றும் குறைந்தளவு பிரச்சனைகளை மட்டுமே கொண்டிருக்கும். உங்கள் துணையுடனான உங்கள் உறவை ஒரு புறநிலை பார்வைக்கு எடுத்துக்கொள்வது எல்லா ஜோடிக்கும் உதவியாக இருக்கும்.

MOST READ: உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி?

காதல் கூடும்

காதல் கூடும்

திரைப்பட விவாத முறை என்பது வேடிக்கையானது மற்றும் எளிமையானது என்று கூறுகிறார் எழுத்தாளர் ரொனால்ட் ரோஜ். உங்கள் வீட்டில் அமர்ந்து ஒரு காதல் திரைப்படத்தை உங்கள் துணையுடன் பார்க்கும்போது, பாப்கார்ன் எடுப்பது போன்று இடித்துக்கொள்வது, ஒரு போர்வைக்குள் இருவரும் இணைந்து கொண்டு திரைப்படம் பார்ப்பது போன்ற செயல்களின் மூலம் இன்னும் காதல் உங்களுக்குள் அதிகரிக்கும்.

காதல் காட்சிகள்

காதல் காட்சிகள்

திரைப்படங்களில் காதல் ஜோடிகள் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடிப்பதற்கும் நிஜ வாழ்க்கையில் காதல் காட்சிகளை பிரதிபலிப்பதற்கும் ஒரு அருமையான வழி திரைப்படம். ஆய்வின் படி, அழகான காதல் மற்றும் ரொமாண்டிக் திரைப்படங்களை ஒன்றாகப் பார்த்து, அவற்றைப் பற்றிப் பேசும் தம்பதிகள், இல்லாதவர்களைக் காட்டிலும் நிலையான உறவைக் கொண்டிருக்கலாம்.

MOST READ: உலகில் அழகான பெண்களை கொண்ட நாடுகள் எது தெரியுமா? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

நல்ல யோசனை

நல்ல யோசனை

தகவல்தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் ஒரு பெரிய சுவரை ஏற்படுத்தும். மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், உங்கள் விஷயங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது உங்களில் பெரும்பாலோருக்கு தெரியாது. அதனால், உங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவும் திரைப்படத்தைப் பார்ப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

குடும்ப திரைப்படங்களை பார்க்கலாம்

குடும்ப திரைப்படங்களை பார்க்கலாம்

திருமண நெருக்கடி அல்லது வாழ்க்கையில் பல நெருக்கடிகளை சித்தரிக்கும் திரைப்படங்களை நீங்கள் உங்கள் துணையுடன் பார்க்கலாம். இது உங்களுக்குள் ஒரு அற்புதமான நட்பை உருவாக்கும். உங்களுடைய பிரச்சனைகளை இருவரும் சேர்ந்தே கையாளுவீர்கள். உங்கள் திருமண வாழ்வை செழிக்கச் செய்வதற்கு நல்ல குடும்ப திரைப்படங்கள் பார்ப்பது சரியானது. ஒருவருக்கொருவர் பேசுவதற்கும் உங்கள் உணர்வுகளை சரியாகத் தொடர்புகொள்வதற்கும் இது உதவுகிறது.

MOST READ: பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுகிறதா?...அப்ப இத பண்ணுங்க...!

வயது முக்கியமல்ல

வயது முக்கியமல்ல

தம்பதிகள் எவ்வளவு காலம் ஒன்றாக சேர்ந்து இருந்தார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து திருமணங்களுக்கும் திரைப்பட முறை நல்ல பலன்களை தருகிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். உட்கார்ந்து ஒருவரின் நடத்தையைப் புதிதாகப் பார்ப்பது எந்த நிலையிலும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஒரு காதல் படத்தைப் பார்ப்பது ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு பின்னர் விவாதிக்கும்போது, உங்கள் உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல இது அருமையான வழியாகும்.

காதல் திரைப்படங்களைப் பார்க்க காரணம் தேவையில்லை

காதல் திரைப்படங்களைப் பார்க்க காரணம் தேவையில்லை

காதல் திரைப்படங்களை பார்ப்பதற்கு காரணம் தேவையில்லை. இது உங்கள் வாழ்க்கையில் காதலை கூட்டி, தாம்பத்திய வாழ்வையும் நன்றாக அமையச் செய்கிறது. திரைப்படம் பார்க்கும் நேரத்தை ஒருவருக்கொருவர் காதலால் அதை அலங்கரிப்பீர்கள். உங்கள் அன்புக்குரியவருடன் திரைப்படங்களைப் பற்றியும் விவாதிக்கலாம். இது உங்களுக்குள் ஏற்படும் விரிசல்களைச் சரிசெய்கிறது.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், நீங்கள் உறவுகளைக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்குவதும், மற்ற ஜோடிகளின் சண்டை மற்றும் காதல் பார்க்கும்போது கூட உங்களுக்குள் ஏற்படும் இடைவெளி குறைகிறது. உங்கள் திருமண உறவை காப்பாற்றத் தந்திரமாக செயல்பட வேண்டுமென்றால், திரைப்படங்கள் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Watching romantic movies with your partner can save you from a divorce

Read to know the Watching romantic movies with your partner can save you from a divorce.
Story first published: Saturday, December 7, 2019, 13:50 [IST]
Desktop Bottom Promotion