Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணா போதுமாம்... உங்களுக்கு ஏற்ற சரியான கணவன் அல்லது மனைவியை கண்டுபிடிக்கலாமாம்!
உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இது உங்கள் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய விஷயம். சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண்பது அந்த நேரம் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
வாழ்க்கையில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், உங்களுக்காக இருக்கும் ஒரு துணைக்கு நீங்கள் தகுதியானவராக இருக்க வேண்டும். அதேபோல அவரும் அல்லது அவளும் உங்களுக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை பயணம் முழுவதும் உங்கள் பக்கத்தில் இருக்கும் நபர் உங்களுக்குத் தேவை. நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட உங்களுடன் எந்த சூழ்நிலையிலும் உங்களுக்காக அவர் நிற்பார். குறிப்பாக நீங்கள் அழ விரும்பும் போது உங்களைச் சிரிக்க வைப்பார் மற்றும் உங்களை உள்ளிருந்து புரிந்துகொள்பவர். அப்படி ஒரு வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பது என்பது எப்போதும் எளிதானது அல்ல. அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படும்.

ஆதலால், உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிப்பதில் அவசரப்படாதீர்கள். தீவிர தேடலுக்கு பிறகு கிடைக்கும் உங்கள் வாழ்க்கை துணையை சந்திப்பது, விவரிக்க முடியாத உணர்வுகள் நிறைந்த ஒரு அற்புதமான தருணமாக இருக்கும். எனவே, இந்த காதலர் தினத்தில், நீங்கள் 'ஒருவரை' தேடுகிறீர்களானால், சரியான துணையை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்படுவதைக் கவனியுங்கள்
முரண்பாடாக, நம் உணர்ச்சிகளை நாம் வெளிப்படுத்தாமல் இருந்தால், அது ஆரோக்கியமற்ற உறவுகளில் நம்மை சிக்க வைக்கலாம். உறவுகளில் உணர்ச்சி ரீதியான பிணைப்பு என்பது மிக முக்கியம். உங்கள் உணர்ச்சித் தேவைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், உங்கள் விருப்பங்களைப் பற்றி உங்கள் துணையுடன் நீங்கள் பேச வேண்டியது முக்கியம். உங்கள் துணையின் கடினமான காலங்களில் நீங்கள் அவருக்காக உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் உறவை வலுப்படுத்தவும் உங்களிடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கவும் உதவும்.

'90-நாள் விதியை' கடைபிடிக்கவும்
சரியான துணையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று வரும்போது, புதிய உறவைத் தொடங்கும் போது மெதுவாக விஷயங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அவசரப்பட்டால் விஷயங்கள் தவறாக போக வாய்ப்புள்ளது. எனவே, குறுக்குவழிகளை எடுப்பதற்குப் பதிலாக, குறிப்பாக 90 நாட்களுக்கு சரியான காத்திருப்பைக் கொடுங்கள். இந்த நாட்களில் உங்கள் இருவரிடையே எல்லா விஷயங்களும் சரியாக ஒத்துபோகிறதா என்று பாருங்கள். இந்த காலக்கெடு நாட்களுக்கு பிறகும், நீங்கள் இருவரும் இணைந்திருந்தால், உறவு நிச்சயம் வலுவாக இருக்கும். மறுபுறம், சூழ்நிலைகள் மாறி, அது வேலை செய்யமால் போனால், உடனடியாக எல்லாவற்றையும் விட்டுவிடுவது நல்லது. ஏனென்றால் வாழ்க்கைத் துணையை நீங்கள் சரியாக தேர்ந்தெடுக்கவில்லையென்றால், அது உங்கள் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.

கடந்த கால பாடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
கடந்த காலம் அனுபவங்கள் மற்றும் பாடங்களின் அடிப்படையில் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது மிக முக்கியமானது. உங்கள் தவறுகளை நினைவில் வைத்து சரிசெய்து கொள்ளுங்கள். ஆனால், பழைய கோபங்களை வைத்திருப்பது அர்த்தமற்றது. உங்கள் அடுத்தடுத்த உறவுகளில் அதே தவறுகளைச் செய்யாமல் கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் தவறை உணர்ந்து உங்கள் நடத்தையை மேம்படுத்துங்கள். ஏனெனில் ஒரே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது அதே விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

சில நபர்களிடமிருந்து விலகியிருங்கள்
மிக முக்கியமானது, உங்கள் விரும்பத்தகாத கடந்த கால அனுபவங்களைப் பற்றி சிந்திக்க வைக்கும் நபர்களிடமிருந்து விலகி இருங்கள். எதிர்மறையான நிகழ்வுகளை நினைவில் கொள்வது அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் ஒரு அற்புதமான, மகிழ்ச்சியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்கலாம்.

எதில் கவனம் செலுத்த வேண்டும்?
சரியான துணையை கண்டுபிடிப்பதற்கு முன் சிறந்த துணையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களை மேம்படுத்தி, நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நடத்துவதில், அதை அடைய கடினமாக உழைக்கத் தொடங்கியவுடன், பொய்யர்கள் மற்றும் நாசீசிஸ்டுகள் உங்கள் கண்களுக்கு முன்பாக மறைந்துவிடுவார்கள். கூடுதலாக, இது உங்கள் மன நலத்தை மேம்படுத்தும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை வழங்கும் மேலும் அன்பான நபர்களைச் சந்திக்க உங்களுக்கு உதவும்.

எதையாவது ஏற்றுக்கொள்ளும் மனநிலை
உங்கள் வாழ்நாள் முழுவதும், நீங்கள் சோகம், தனிமை மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளை அனுபவிப்பீர்கள். சில சமயங்களில் குடும்ப அழுத்தங்களினாலோ, கடந்த காலத்தை கடந்து செல்ல வேண்டும் என்ற வெறியினாலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ, அவசரப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. நீங்கள் விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்வீர்கள் மற்றும் நீங்கள் விரும்பியதை விட குறைவாக ஏற்றுக்கொள்ளலாம். இந்த செயல்பாட்டின் விளைவாக நீண்ட காலத்திற்கு பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நன்றாக யோசியுங்கள். உங்களுக்கு நிறைய நேரம் கொடுங்கள்.

இறுதிக்குறிப்பு
உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இது உங்கள் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய விஷயம். சூழ்நிலைக்கு ஏற்ப தீர்வு காண்பது அந்த நேரம் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆனால் நீண்ட காலத்திற்கு, நீங்கள் எப்போதும் எதிர்பார்க்காத விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே, ஒரு சிறந்த துணையைத் தேடுவதற்கு, சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தகுதியானதை விட குறைவான எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்கள் மனம் ஒருபோதும் பொய் சொல்லாததால், அதில் கவனம் செலுத்துங்கள். மனம் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications