Just In
- 38 min ago
அதிரடி தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போதே அமேசானில் ஆடர் செய்யுங்கள்!
- 1 hr ago
அமேசானில் 60% தள்ளுபடி விற்பனையில் உடற்பயிற்சி மற்றும் வீட்டை நவீனமாக்கும் பொருட்களை வாங்குங்கள்...!
- 1 hr ago
வெஜ் சால்னா
- 1 hr ago
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை.... விழுப்புரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்!
- Sports
"ஃப்ளவர்னு நினைச்சியா.. ஃபையரு".. ஆசியக்கோப்பை குறித்து இஷானின் ஆதங்க பதிவு..ஏன் சேர்க்கப்படவில்லை?
- Automobiles
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
- Movies
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா செய்த அதிரடி.. அதிர்ச்சியில் எழில்!
- Technology
எதிர்பார்த்ததை விட ரூ.3,000 கம்மி விலைக்கு அறிமுகமான தரமான Camera Phone!
- Finance
பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. இது தான் சரியான நேரம்.. !
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா... உங்க வாழ்க்கை நரகமாம் தெரியுமா?
பொதுவாக உறவு என்றாலே, பல சிக்கல்கள் மற்றும் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். உறவில் அவற்றை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்தே நம்முடைய உறவு வாழ்க்கை அமையும். சில சமயங்களில் நாம் என்ன செய்தாலும், நம்முடைய துணை புரிந்துகொள்ளாமல் அவர்களுடைய விருப்பத்திற்கு செய்வார்கள். இவர்கள் உறவில் நச்சு பழக்கங்களை கொண்டிருக்கலாம். நச்சுத்தன்மையுள்ள மற்றும் நிராகரிக்கும் கூட்டாளியாக இருப்பது எல்லா நிலைகளிலும் தவறானது. உங்கள் துணையை கையாள்வது உங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறதா? ஆம். எனில், நச்சு நடத்தையின் பண்புகளை எளிதில் அடையாளம் காண முடியும். சில பழக்கவழக்கங்கள், குறிப்பாக காதல் மற்றும் உறவின் வழிகளில் மிகவும் மங்கலானதாகவும், அடையாளம் காண முடியாததாகவும் இருக்கும்.
மக்கள் முற்றிலும் இயல்பானவை என்று நினைக்கும் சில பழக்கங்கள் உள்ளன, அவை உண்மையில் இயல்பானவை இல்லை. இதன் விளைவாக, தம்பதிகள் தாங்கள் செய்யும் தவறான செயல்கள் முற்றிலும் இயல்பானவை என்று தெரிந்தும் உறவுகளில் விவரிக்க முடியாதபடி பாதிக்கப்படுகின்றனர். மக்கள் சாதாரணமாக கருதும் நச்சு உறவு பழக்கங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உறவில் நச்சுப் பழக்கங்கள்
ஒரு நச்சு உறவில், உங்கள் துணையுடன் நேரத்தைச் செலவிட்ட பிறகு நீங்கள் தொடர்ந்து சோர்வாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவராகவோ உணரலாம் என்று உறவு சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். நச்சு உறவில் நீங்கள் பல விஷயங்களை மாற்ற வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்கள் துணையை இன்னும் நேசிக்கிறீர்கள் என்றாலும், நச்சு உறவு சுவாரஸ்யமாக இருக்காது. அந்த பழக்கங்களை நீங்களோ உங்கள் துணையோ மாற்றும்போது, உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

நச்சு உறவு சாதாரணமா?
ஆரோக்கியமான உறவு என்பது பாதுகாப்பான உறவு, பயமின்றி நாமாக இருக்கக்கூடிய உறவு. நாம் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணரும் உறவு தான் ஆரோக்கியமானது. ஒரு நச்சு உறவு, உங்களுக்கு பாதுகாப்பான இடம் அல்ல. ஒரு நச்சு உறவு பாதுகாப்பின்மை, சுயநலம், ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது உங்களுக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கையையும், மன அழுத்தத்தையும் கொடுக்கும்.

மதிப்பெண் அட்டையை வைத்திருத்தல்
உங்கள் பங்குதாரர் என்ன செய்தார் என்பதை பின்னர் அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக கணக்குகளை வைத்திருப்பது சரியானது இல்லை. இது உறவு வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது அல்ல. யார் அதிக எண்ணிக்கையிலான தவறுகளைச் செய்தார்கள், குறைந்தளவு தவறு செய்தார்கள் போன்றவற்றைப் பார்க்க மதிப்பெண் அட்டையை வைத்திருப்பது பிற்காலத்தில் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக மாறும். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத விஷயங்களை எடுத்து பேசுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் துணையை குறை கூறுதல்
உங்களுக்கு ஒருநாள் மோசமான நாளாக அமைந்தால், அதற்காக உங்கள் துணையின் மீது சாதாரணமாக பழி போடுவது சரியல்ல. நாள் முழுவதும் உங்களிடம் அனுதாபமாக இருப்பதற்கு அவர்கள் பொறுப்பல்ல. வெவ்வேறு திட்டங்களை நீங்கள் வைத்திருப்பதற்கு அவர்களை வசைபாடாதீர்கள். நீங்கள் சுற்றி உட்கார்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்புவதால், அவர்கள் எப்போதும் அதையே விரும்புவார்கள் என்று அர்த்தமல்ல.

மிகவும் பொறாமையாக இருப்பது
உங்கள் பங்குதாரர் மற்றவர்களுடன் பேசும்போது, அவர்களின் கைகளைத் தொடும்போது, அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது நீங்கள் ‘அதிக பொறாமை' காட்டினால், அது ஆரோக்கியமானது இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்தச் செயல்கள் உண்மையானவை மற்றும் அழகானவை என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால், அது சரியில்லை. இது உங்களிடம் மிகவும் உடைமை மற்றும் பொறாமை கொண்ட பக்கத்தை மட்டுமே காட்டுகிறது.

பரிசுகள் மற்றும் நல்ல விஷயங்களால் பிரச்சினைகளை மறைத்தல்
ஒரு உறவில் சிக்கல்கள் இருக்கும்போது, அதை பரிசுகள் மற்றும் நல்ல நேரத்துடன் தீர்ப்பது எந்த நன்மையையும் செய்யப்போவதில்லை. நீங்களும் உங்கள் கூட்டாளியும் ஒருவரையொருவர் தொடர்புகொள்வதன் மூலமும் தீர்வுகளைக் கொண்டு வருவதன் மூலமும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். மன்னிப்புக் கேட்கும் விதமாக வைரம் அல்லது கடிகாரத்தை பரிசாகக் கொடுப்பதன் மூலம் பிரச்சனை தீராது.