For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் 'இந்த' பிரச்சினைகளை எப்படி சரி பண்ணலாம் தெரியுமா?

கடினமான உணர்வுகள் எதுவும் ஏற்படாதவாறு நீங்களும் உங்கள் மனைவியும் வீட்டு மற்றும் பிற வேலைகளை சமமாகப், பிரிக்க வேண்டும். உறவில் சமநிலையை பராமரிக்க வேலைகளை ஒதுக்குவது அவசியம்.

|

திருமணமான புதிதில் முதல் சில மாதங்களில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக அந்த நாட்களைக் கடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் அது ஹனிமூன் பீரியட் அதனால், அப்படித்தான் செல்லும். காலம் செல்ல செல்ல உங்கள் உறவில் சில பிரச்சனைகள், சலிப்பு மற்றும் சண்டைகள் ஏற்படலாம். திருமணமான பிறகு, புதுமணத் தம்பதிகள் நிறைய சமாளிக்க வேண்டும். அது புதிய உறவினர்களைச் சந்திப்பதா அல்லது திருமணம் மற்றும் குடும்பத்தின் புதிய பொறுப்புகளைக் கையாள்வது போன்றவற்றால் ஏற்படலாம். இது மிகவும் சிக்கலானதாகவும் கடினமாகவும் இருக்கலாம். அதனால்தான் திருமணமான முதல் வருடம் பெரும்பாலும் திருமணமான தம்பதிகளுக்கு ஒரு சோதனையாக கருதப்படுகிறது.

Smart ways newlyweds can deal with marriage problems in tamil

அவர்கள் அதை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பது திருமணத்தின் எதிர்கால போக்கை தீர்மானிக்கும். ஆனால், இதுபோன்ற குழப்பத்தில் இருக்கும் பல புதுமணத் தம்பதிகளுக்கு உதவ, திருமண பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த சில புத்திசாலித்தனமான, பயனுள்ள உதவிக்குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திட்டமிடத் தொடங்குங்கள்

திட்டமிடத் தொடங்குங்கள்

உங்கள் புதிய திருமண வாழ்க்கையின் முதல் சில மாதங்களில் மகிழ்ச்சியாக இருப்பது பரவாயில்லை. ஆனால், உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்கள் இரண்டையும் பற்றி திட்டமிடத் தொடங்குவது நல்லது. உங்கள் இருவருக்குமான நேரத்துக்கு இடமளிக்கும் வழக்கத்தில் ஈடுபடுங்கள். இது நிறைய மன அழுத்தத்தையும் தவறான நிர்வாகத்தையும் குறைக்கும். இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களுக்கும் இருவரும் முக்கியத்துவம் கொடுங்கள்.

நீங்கள் இருவரும் சண்டையிட்ட பிறகு நினைவு கூருங்கள்

நீங்கள் இருவரும் சண்டையிட்ட பிறகு நினைவு கூருங்கள்

திருமணமான முதல் சில மாதங்களில் சண்டைகள் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, நீங்கள் இருவரும் உங்கள் முதல் பெரிய சண்டைக்குப் பிறகு, நீங்கள் இருவரும் அமைதியாக உட்கார்ந்து, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அழகான நினைவுகளை நினைவுபடுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வெளியே சென்றது, சமைத்து சாப்பிடுவது, திருமண நிகழ்வுகள் போன்றவைகளை பற்றி பேசுங்கள். இது பரிச்சய உணர்வுகளைத் தொடங்க வழிவகுக்கும்.

உங்கள் குடும்பத்துடன் பிணைப்பு

உங்கள் குடும்பத்துடன் பிணைப்பு

நீங்கள் இருவரும் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது உங்கள் குடும்பத்தை ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். அவர்கள் உங்கள் இருவருக்கும் ஒரு திசையைப் பெற உதவலாம். ஆனால் அவர்களை ஈடுபடுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றாதீர்கள், இல்லையெனில் அவர்கள் அதிகமாக தலையிடலாம். உங்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தலாம். எதையும் ஒரு அளவாக வைத்துக்கொள்ளுங்கள்.

பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள்

பொறுப்புகளை பிரித்துக் கொள்ளுங்கள்

கடினமான உணர்வுகள் எதுவும் ஏற்படாதவாறு நீங்களும் உங்கள் மனைவியும் வீட்டு மற்றும் பிற வேலைகளை சமமாகப், பிரிக்க வேண்டும். உறவில் சமநிலையை பராமரிக்க வேலைகளை ஒதுக்குவது அவசியம். இல்லையெனில் நீங்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்ட ஆரம்பிக்கலாம். ஆதலால், உங்கள் பொறுப்புகளை இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளுங்கள்.

அன்பை பொழிந்து கொள்ளுங்கள்

அன்பை பொழிந்து கொள்ளுங்கள்

நீங்கள் பெற்ற அன்பை உங்கள் துணையிடம் பொழிவதை எதிர்க்காதீர்கள். உங்கள் துணையின் மீதும் அன்பு செலுத்துங்கள். உங்கள் மனைவியிடம் காதலை அல்லது அன்பை வெளிப்படுத்த இதுவே சிறந்த வழியாகும். உங்கள் பங்குதாரர் உங்கள் தேவைகள் மற்றும் ஆசைகளை நிறைவேற்ற முடியும் மற்றும் நேர்மாறாக இருக்க வேண்டும். ஏனெனில் நம்பிக்கை, நேர்மை மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை உறவில் இணைப்பது மிகவும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: marriage
English summary

Smart ways newlyweds can deal with marriage problems in tamil

Here we are talking about the Smart ways newlyweds can deal with marriage problems in tamil.
Story first published: Friday, January 21, 2022, 18:20 [IST]
Desktop Bottom Promotion