Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
மனைவிய சந்தோஷமா வைச்சுக்கறது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே...!
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறுவது உண்மைதான். ஆனால் அது எந்த மாதிரியான மாற்றம் என்பதை உங்களின் வாழ்க்கைத்துணையே முடிவு செய்கிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்கையிலும் திருப்பு முனையாக இருப்பது திருமணம்தான். ஏனெனில் அதுவரை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கை அதற்கு பின் முற்றிலுமாக வேறுபாதையில் பயணிக்கத் தொடங்கும். புது உறவு, கூடிய பொறுப்புகள், சின்ன சின்ன சந்தோஷங்கள் என திருமண வாழ்க்கை பல சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகும்.

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறுவது உண்மைதான். ஆனால் அது எந்த மாதிரியான மாற்றம் என்பதை உங்களின் வாழ்க்கைத்துணையே முடிவு செய்கிறார்கள். ஏனெனில் திருமணம் ஒருவரின் வாழ்க்கையை சொர்க்கமாகவும் மாற்றும், நரகமாகவும் மாற்றும். திருமண பந்தத்தின் வேறாக கணவன் இருந்தாலும் அதில் பூக்கும் மலராக இருப்பது என்னவோ மனைவிதான். மனைவியை நேசிக்கும் கணவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் இருக்காது. மனைவியின் மகிழ்ச்சியே அவர்கள் இல்லறத்தின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கிறது. இந்த பதிவில் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

காதல் கடிதம்
கடிதங்களை விட காதலை அழகாக சொல்லும் ஊடகம் வேறெதுவும் இல்லை. என்னதான் நேரில் சொன்னாலும் அந்த கணம் கடந்து விடும். ஆனால் உங்கள் காதலை சுமந்து செல்லும் காதல் கடிதம் அதனை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உங்கள் மனைவி மீதான உங்கள் காதலை அவர்களுக்கு உணர்த்தும். அது நிச்சயமாக உங்களுக்கிடையேயான அன்பை வலுப்படுத்தும்.

அழகை வர்ணியுங்கள்
சிறு வயது முதலே பெண்கள் அனைவரும் மற்றவரிடம் கேட்கும் கேள்வி " நான் அழகாக இருக்கிறேனா? " என்பதுதான். அவர்கள் அழகைப் பற்றி நீங்கள் காலையில் கூறும் ஒரு வார்த்தை அவர்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் மனைவியின் கண்களை பார்த்து " நீ அழகாக இருக்கிறாய் " என்று காதலுடன் சொல்லுங்கள். அந்த வார்த்தையே அவர்களை அழகாக மாற்றும்.

புன்னகை
புன்னகையை விட சிறந்த பதில் எதுவுமில்லை. உங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடு உங்கள் புன்னகையில்தான் இருக்கிறது. அடிக்கடி உங்கள் மனைவியைப் பார்த்து சினேகமாக புன்னகையுங்கள். புன்னகைக்கும் போது அவர்களின் கண்களைப் பார்க்க மறந்து விடாதீர்கள். சிலசமயம் உங்களின் அமைதியான புன்னகை அவர்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியை வேறு எந்த பொருளாலும் கொடுத்துவிட முடியாது.

காதலுடன் காபி
இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் மனைவியாக இருந்தாலும் சரி மாலை வேலையில் அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள். ஒரு காபியுடன் அன்று நாள் முழுவதும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லுங்கள். வெளிப்படையான கணவரைத்தான் எந்த மனைவியும் விரும்புவார்கள். உங்கள் காதலை காபியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மன்னிப்பு கேளுங்கள்
ஆண் என்ற அகந்தையை வீட்டிற்குள் வரும்போதே கழட்டி வைத்துவிடுங்கள். உங்கள் மீது தவறு இருந்தால் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். மனைவியிடம் தோற்றுப்போகிறவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஜெயித்து விடுவார்கள்.

சொல்வதை கவனியுங்கள்
பெண்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க மிகவும் எளிய வழி அவர்கள் சொல்வதை கவனிப்பதும், அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதும்தான். நாள் முழுக்க ஒரு விஷயத்தை உங்களிடம் கூறுவதற்காக அவர்கள் காத்திருக்கும் போது நீங்கள் அதனை புறக்கணிப்பது அவர்களை மனதளவில் காயப்படுத்தும். அவர்கள் கூறுவதை கேட்டுவிட்டு உங்கள் வேலையை தொடர்வது இருவரின் மகிழ்ச்சிக்கும் நல்லதாகும்.

பாராட்டுகள்
உங்கள் வாழ்க்கையின் பாதியாக இருக்கும் உங்கள் மனைவி உங்களின் முழுகவனத்தை பெறுவதற்கு அனைத்து தகுதிகளும் உடையவர். எனவே அவரின் செயல்கள், தோற்றங்கள், சமையல் என அனைத்திற்கும் அவர்கள் பாராட்டை எதிர்பார்ப்பார்கள். நேர்மையான பாராட்டு எப்பொழுதும் பெண்களின் மகிழ்ச்சியை இருமடங்காக்கும்.

சிறிய ஆச்சரியங்கள்
உங்கள் காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க சின்ன சின்ன ஆச்சரியங்கள் எப்பொழுதும் அவசியமானவை ஆகும். அடிக்கடி பூக்கள் வாங்கிக்கொடுங்கள், குட்டிக் குட்டி பரிசுகள், எதிர்பாராத நேரத்தில் கொடுக்கும் முத்தம் என அனைத்தும் உங்கள் மீதான அவர்களின் காதலை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications