For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான பெண்கள் 'வேறொரு' உறவில் ஈடுபடப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

திருமணமாகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் மீது உங்கள் மனைவிக்கு எப்பொழுதும் அன்பு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பும், அக்கறையும் காலப்போக்கில் மறையலாம்.

|

கணவன்-மனைவி உறவு என்பது மனித உறவுகளில் மிகவும் முக்கியமானதாகும். திருமணம் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களின் உறவு தொடங்கியபோது எப்படி அன்பு நிறைந்ததாக இருந்ததோ அதேபோல் இறுதிவரை இருக்க வேண்டும். சிலசமயங்களில் உங்கள் துணைக்கு உங்கள் மீதிருக்கும் அன்பு மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம், மேலும் உங்கள் துணை இன்னும் நேசிக்கிறாரா என்பதை விரைவில் கண்டுபிடிப்பது முக்கியம்.

Signs Your Wife Doesnt Love You Anymore

திருமணமாகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் மீது உங்கள் மனைவிக்கு எப்பொழுதும் அன்பு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பும், அக்கறையும் காலப்போக்கில் மறையலாம். இது உங்களின் இல்லறத்தில் பல உறவுச்சிக்கல்களை உருவாக்கும். இதனால்தான் பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இந்த பதிவில் உங்கள் மனைவிக்கு உங்கள் மீதிருந்த அன்பு காணாமல் போயிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பகிர்ந்து கொள்வதை நிறுத்துவது

பகிர்ந்து கொள்வதை நிறுத்துவது

உங்கள் மனைவி உங்களுடன் பகிர்வதை நிறுத்த முடிவு செய்யும் போது, உங்கள் உறவு வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. உங்கள் பணத்தில் அவர்கள் எதையும் செய்ய விரும்பாமல் அவர்களின் தேவைகளை குறைத்துக் கொண்டாலோ அல்லது அவர்களின் பணத்திலேயே தேவைகளை பூர்த்தி செய்து கொண்டால் அவர்கள் உங்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்று அர்த்தம். அதேபோல உங்கள் தேவையை உங்கள் பணத்திலேயே செய்து கொண்டால் அவர் உங்களை காதலிக்கவில்லை என்று அர்த்தம்.

அரட்டையடிப்பது குறைவது

அரட்டையடிப்பது குறைவது

நீங்கள் பேச விரும்பாத நாட்கள் உண்மையில் இருக்கலாம். ஆனால் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த உங்கள் மனைவி திடீரென அமைதியாக மாற தொடங்கினால் அவர் பிரிவுக்கு தயாராகிவிட்டார் என்று புரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்கள் ஆண்களை விட அதிகம் பெண்கள் அதிகம் பேசுவார்கள். பெண்கள் எப்போதும் பேசுவதற்கு காரணம் தேடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உங்கள் மனைவி திடீரென தங்களின் அரட்டை பேச்சை குறைத்துக் கொண்டால் உங்கள் மீதான காதல் இப்போது இல்லை என்று அர்த்தம்.

உங்களிடம் மட்டும் எரிச்சலாக நடந்து கொள்வது

உங்களிடம் மட்டும் எரிச்சலாக நடந்து கொள்வது

உங்களின் மனைவி உங்களிடம் மட்டும் எப்பொழுதும் எரிச்சலாக நடந்து கொண்டால் அவர்கள் உங்களை காதலிக்கவில்லை என்று அர்த்தம். இது அவர்கள் வேறொரு உறவுக்கு தயாராக இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். பொதுவாக நமக்கு பிடித்த ஒருவரிடம் நாம் எப்போதும் எதிர்மறையாக நடந்து கொள்ளமாட்டோம். மாறாக அவர்களை உற்சாகப்படுத்தவும், சிரிக்க வைக்கவும்தான் முயலுவோம். உங்களின் சிறிய செயல்களுக்கு கூட அவர்கள் எல்லையில்லாத கோபம் அடைந்தாலோ அல்லது உங்களின் வழக்கமான செயல்களுக்கு கூட எரிச்சல் அடைந்தால் உங்கள் மனைவி உங்கள் மீது தீராத வெறுப்பில் உள்ளார் என்று அர்த்தம்.

MOST READ: ஆண்களை வசியம் செய்ய அவர்கள் குடிக்கும் பானத்தில் மாதவிடாய் இரத்தத்தை கலக்கும் விசித்திர பழக்கம்...!

நீங்கள் பேசுவதை வேண்டுமென்று தவிர்ப்பது

நீங்கள் பேசுவதை வேண்டுமென்று தவிர்ப்பது

ஆரோக்கியமான திருமணத்தில், ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்க நீங்கள் கடுமையாக முயற்சி செய்கிறீர்கள். எனவே, ஒரு துணை அவர்கள் இனி கேட்க விரும்பவில்லை என்று முடிவு செய்தால், உறவு உணர்வுகள் மோசமாக மாறியிருப்பதற்கான அறிகுறியாகும். கணவண் சொல்வதைக் கேட்பதற்கும், அதனை செய்ய முயற்சிப்பதற்கும் ஒரு மனைவி எப்போதும் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இனிமேல் கேட்க விரும்பவில்லை என்று திடீரென்று முடிவு செய்தால், அவர் கணவனை இனி காதலிக்க விரும்பவில்லை என்று நினைக்கத் தொண்டங்கிவிட்டார். ஆரோக்கியமான உறவில் உள்ள அனைத்துமே மேலும் இது இரு வழிகளிலும் செயல்பட வேண்டும்.

உடல்ரீதியான நெருக்கங்களை வெறுப்பது

உடல்ரீதியான நெருக்கங்களை வெறுப்பது

ஆரோக்கியமான இல்லறத்திற்கு உடல்ரீதியான நெருக்கங்கள் என்பது அடிப்படையான விஷயம் என்று ஆய்வுகள் கூறுகிறது. தம்பதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் இங்குதான் உருவாக்கப்படுகிறது. அன்பை வெளிக்காட்ட உடலுறவு, சின்ன சின்ன தீண்டல்கள் என உடல்ரீதியான நெருக்கம் அவசியம். உங்களிடம் அந்த நெருக்கமான உடல் தொடர்பு இல்லையென்றால், நீங்கள் நண்பர்களாக இருப்பீர்கள். உங்கள் மனைவி உங்களுடனான உடல்நெருக்கத்தை வேண்டுமென்றே தவிர்த்தால் உங்கள் மீது அவர்களுக்கு காதல் இல்லை என்று அர்த்தம்.

அலட்சியமாக நடத்துவது

அலட்சியமாக நடத்துவது

ஒரு திருமணத்தில், நீங்கள் எப்போதும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ஒருவருக்கொருவர் நேரத்தை ஒதுக்குவது. அவர்களுடைய வாழ்க்கையில் நீங்கள் இனி ஒரு முன்னுரிமை இல்லை என்பதை நீங்கள் உணரும்போது, உங்கள் மனைவி இனி உன்னை காதலிக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். பெண்கள் பொதுவாக அவர்கள் மதிப்பிடும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். தம்பதிகள் ஒன்றாக நேரம் செலவிடுவது முக்கியம். ஆனால் எப்போதும் தான் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்காமல் இருப்பது, தன்னுடைய விஷயங்களில் மட்டும் எப்பொழுதும் பிஸியாக இருப்பது உங்களுக்கு அவர்கள் முன்னரிமை அளிப்பதில்லை என்பதன் அர்த்தம்.

MOST READ: உங்க ராசிப்படி எந்த வயசுல கல்யாணம் பண்ணுனா உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவரும் தெரியுமா?

உங்களை அதிகம் சோதிக்காமல் இருப்பது

உங்களை அதிகம் சோதிக்காமல் இருப்பது

ஆண்களை விட பெண்களுக்கு பொஸசிவ் எண்ணம் அதிகமென்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய பொருட்கள் மீது பெண்களுக்கு எப்போதும் அதீத எச்சரிக்கை உணர்வு இருக்கும். இது கணவருக்கு மிகவும் சரியாக பொருந்தும். தங்கள் கணவர் என்ன செய்கிறார், எங்கு போகிறார், யாருடன் பேசுகிறார் என அனைத்தையும் பெண்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் திடீரென உங்கள் மனைவி இப்படி எந்த கேள்விகளையும் உங்களிடம் கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு இனி நீங்கள் தேவையில்லை என்று அர்த்தம்.

வேறொரு தொடர்பு

வேறொரு தொடர்பு

உங்கள் மனைவிக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பதை உணர்த்த இதைவிட சிறந்த அறிகுறி எதுவுமில்லை. வேறொருவருடன் தொடர்பில் இருப்பது உங்கள் மீது அன்போ, மரியாதையோ அவர்களுக்கு இல்லை என்று உணர்த்தும் அறிகுறியாகும். ஒருவர் மீது வலிமையான காதலை கொண்டிருப்பவர்கள் இன்னொருவரை முத்தமிடவோ அல்லது உடலுறவு வைத்துக் கொள்ளவோ வாய்ப்பில்லை.

உங்கள் கால் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது

உங்கள் கால் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது

பெண்கள் பொதுவாக உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்களிடம் எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் கூட அவர்கள் உங்களை அழைப்பார்கள், அதனால் அவர்கள் உங்கள் குரலைக் கேட்க முடியும். நீங்கள் உங்கள் மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது, அடுத்த சில மணிநேரங்களில் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அது உங்களை தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபராக அவர் பார்க்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் போன் பண்ணும்போது வேண்டுமென்றே அதனை தவிர்த்தால் அது வெளிப்படையான அறிகுறியாகும்.

MOST READ: அக்னி நட்சத்திரத்தில் உங்கள் வீட்டை செலவே இல்லாமல் எப்படி கூலாக வைத்திருக்கலாம் தெரியுமா?

உங்கள் குடும்பத்தை மதிக்காமல் நடப்பது

உங்கள் குடும்பத்தை மதிக்காமல் நடப்பது

திருமண உறவில் பிரச்சினைகள் வருவதற்கு முக்கிய காரணமே அவர்களின் புகுந்த வீடு பற்றி எழும் புகார்களும், விவாதங்களும்தான். ஒரு பெண் தன் கணவனை உண்மையாக நேசிக்கும்போது, அவருடைய குடும்பத்தை மதிப்பார்கள்.அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மரியாதையாக நடத்துவார்கள். மாறாக கணவரின் குடும்பத்தினரை அவமதிப்பது தான் அந்த குடும்பத்தில் இனியும் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை என்பதன் அர்த்தமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Wife Doesn't Love You Anymore

These are the clear signs that show your wife doesn't love you anymore
Story first published: Tuesday, May 5, 2020, 17:31 [IST]
Desktop Bottom Promotion