Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
உங்க கணவன் அல்லது மனைவியின் EX- பத்தி நீங்க ஏன் தெரிஞ்சிக்கக்கூடாது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
உங்கள் கணவன் அல்லது மனைவி அவர்களின் கடந்த கால காதல் உறவை பற்றிய சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். அதனால், அவர்களின் தனியுரிமை மற்றும் எல்லைகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம்
இங்கு எல்லாருக்கும் முதல் காதல் கைகூடுவதில்லை. இன்று உறவில் அல்லது திருமண உறவில் இருக்கும் பெரும்பாலான மக்களுக்கு கடந்த கால உறவு என்று ஒன்று இருந்திருக்கும். அது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகவும் அல்லது அவர்களை அதிகமாக காயப்படுத்தியதாகவும் இருக்கலாம். எதுவாக இருப்பினும், அது அவர்களின் கடந்த காலம். பெரும்பாலான தம்பதிகள் தங்கள் கணவன் அல்லது மனைவியின் முன்னாள் காதலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அல்லது தங்கள் முன்னாள் பற்றி தங்கள் துணையிடம் கூற சிலர் விரும்பலாம். ஆனால், இது முற்றிலும் தவறான யோசனை. கடந்த காலத்தை நீங்கள் கடந்த வந்ததால்தான், நிகழ்காலத்தில் ஒருவருடன் உறவில் இருக்கிறீர்கள். மீண்டும் இதில் கடந்த கால உறவை கொண்டு வருவது, பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

கடந்த காலங்கள் கடந்ததாகவே இருக்கட்டும். தற்போதைய தருணத்தில் ஒருவருடன் அழகான வாழ்க்கையை வாழ விரும்புங்கள், அவர்களுடன் எப்படி மகிழ்ச்சியாக வாழலாம் என யோசியுங்கள். இருப்பினும், பலர் தங்கள் துணையின் கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர், இது உங்கள் உறவில் தீங்கு விளைவிக்கும். நீங்கள் உங்கள் துணையின் முன்னாள் காதலை பற்றி தெரிந்துகொள்ள எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும் கடந்த காலத்திற்கு செல்லக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஏன் என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

நம்பிக்கை பிரச்சினைகள்
கடந்தகால உறவு அல்லது காதலை பற்றி நீங்கள் உங்கள் துணையிடம் தெரிவிப்பதால் நம்பிக்கை பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஒரு உறவில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் உங்கள் துணையிடம் உங்கள் கடந்த கால உறவை பற்றி கூற நினைக்கலாம். அவ்வாறு நினைப்பது முற்றிலும் தவறு. இது உங்கள் உறவையே அழிக்கக்கூடும். உங்கள் துணை உங்களிடம் தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்து கொண்டால், அதை நீங்கள் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அல்லது அதை சண்டை வாதங்களின்போது கொண்டு வந்தால், அது உங்கள் உறவில் உள்ள நம்பிக்கையை சேதப்படுத்தும். உறவில் மிகவும் முக்கியமானது நம்பிக்கை. இது தம்பதிகளுக்குள் இல்லையென்றால், உறவு நீண்ட காலம் நிலைக்காது.

பாதுகாப்பின்மை மற்றும் பொறாமை
உங்கள் துணையின் கடந்தகால உறவுகள் அல்லது அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வது பொறாமை அல்லது பாதுகாப்பின்மைக்கு வழிவகுக்கும். கடந்த கால உறவுக்கும் தற்போதும் எந்த சம்பந்தமில்லை என்றாலும் கூட, இது உங்கள் உறவில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். கடந்த காலங்களில் உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலிக்காக செய்த விஷயங்களை உங்கள் துணை நிகழ்காலத்தில் ஒப்பிடத் தொடங்குவார்கள். இது உறவை மிகவும் சிக்கலானதாக மாற்றலாம். மேலும், உங்கள் துணையிடமிருந்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை நீங்கள் வைத்திருக்கலாம்.

தேவையில்லாத டென்ஷன்
உங்கள் துணையின் கடந்த கால உறவைப் பற்றி தற்போது கூறுவது, உறவில் பதற்றத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக அது ஒரு முக்கியமான தலைப்பாக இருந்தால் அல்லது அவர்களின் விருப்பங்களை நீங்கள் ஏற்கவில்லை என்றால், எல்லா விஷயங்களுக்கும் உங்க கடந்த கால வாழ்க்கையை உங்கள் துணை பேசக்கூடும். இதனால் உறவில் சிறு சிறு சண்டைகள் வரலாம். இது உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை குறைக்கும். இப்படி தேவையில்லாத டென்ஷனை அடைய, கடந்த கால வாழ்க்கையை பற்றி ஏன் உங்கள் துணையிடம் கூற வேண்டும்.

புண்படுத்தும் உணர்வுகள்
உங்கள் துணை தவறுகள் செய்திருக்கலாம் அல்லது அவர்களின் கடந்த காலத்தில் எதிர்மறையான அனுபவங்களைப் பெற்றிருக்கலாம், அதை அவர்கள் மீண்டும் பார்க்கவோ அல்லது விவாதிக்கவோ விரும்பாமல் இருக்கலாம். அந்த விஷயங்களை பற்றி பேசுவது உங்கள் துணையை புண்படுத்தும். உங்கள் துணையின் கடந்த கால உறவை பற்றி தெரிந்துகொள்ள நினைப்பது மனரீதியாக துன்புறுத்தக்கூடியது. மேலும், இது உங்கள் இருவருக்குள்ளும் ஒரு முக்கியமான பிரச்சினையாக வெடிக்க வாய்ப்புள்ளது.

நியாயமற்ற விஷயம்
உங்கள் கணவன் அல்லது மனைவி அவர்களின் கடந்த கால காதல் உறவை பற்றிய சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். அதனால், அவர்களின் தனியுரிமை மற்றும் எல்லைகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம். அவர்களிடம் உங்கள் கடந்த கால உறவை பற்றி கூறுங்கள் என்று நச்சரிப்பது நியாயமற்ற விஷயம்.

இறுதிக்குறிப்பு
உறவில் சில விஷயங்கள் ரகசியங்களாக இருப்பது தம்பதிகள் இருவருக்கும் நல்லது. எல்லா விஷயங்களையும் உங்கள் துணையிடம் நீங்கள் கூற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஏனெனில், இது நன்றாக இருக்கும் உங்கள் உறவில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும், இது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் துணை இருந்தால், உங்கள் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கலாம். இல்லையெனில், உங்கள் திருமண வாழ்க்கையே சிக்கலாகிவிடும். ஆதலால், உங்கள் கடந்த கால உறவை பற்றி உங்கள் கணவனிடமோ அல்லது மனைவியிடமோ கூற வேண்டிய அவசியமில்லை மற்றும் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.



Click it and Unblock the Notifications