Just In
- 1 hr ago
சனிபகவானின் மோசமான பார்வை இந்த ராசிக்காரங்க மேல தான் இருக்கு தெரியுமா?
- 13 hrs ago
இளவரசராக பிறந்திருந்தும் அனுமன் ஏன் ஒருபோதும் மன்னராக கருதப்படவில்லை தெரியுமா?
- 14 hrs ago
காற்று மாசுபாட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கணுமா? அப்ப மறக்காம இத சாப்பிட கொடுங்க…
- 14 hrs ago
உலகறிந்த தமிழன் சுந்தர் பிச்சை பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!
Don't Miss
- News
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? திமுகவின் வழக்கு.. இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
- Finance
ஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..!
- Movies
அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது!
- Automobiles
வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் வழங்கும் புத்தாண்டு பரிசு!
- Sports
என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
- Education
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்
- Technology
பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொண்ணுங்க வருங்கால கணவர்கிட்ட எதிர்பார்க்குற தகுதிகள் இதுதானாம்... நோட் பண்ணுங்கப்பா....!
இந்த உலகத்தில் யாருமே பர்பெக்ட்னவர்களாக இருக்க முடியாது. அனைவருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்தவர்களாகத்தான் இருக்கிறோம். இதனை நாமும் நன்கு அறிவோம், இருப்பினும் திருமணம் என்று வரும்போது நாம் அனைத்து நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் துணையாக வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்,
அதிலும் திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாகும். எனவே அவர்கள் அவ்வளவு விரைவில் தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டார்கள். பெண்கள் தங்களுக்கான கணவரை தேர்ந்தேடுக்கும்போது அவர்களிடம் சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அது என்னென்ன குணங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர்மை
நேர்மை என்பது ஒவ்வொரு உறவின் அடிப்படையாகும், எனவே, உங்கள் துணைக்கு உண்மையாக இருப்பது மிகவும் முக்கியம். தங்கள் வருங்கால கணவரைத் தேர்ந்தெடுக்கும்போது, பெண்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஒரு துணையைத் தேடுகிறார்கள், இதனால் அவர்கள் அவரை நம்பி தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்.

பொறுப்பு
பெண்கள் பொதுவாகவே பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டார்கள், குறிப்பாக திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் போது பொறுப்பற்ற ஆண்களை பரிசீலனை கூட செய்யமாட்டார்கள். பொறுப்பு என்பது காதலில் மட்டுமின்றி குடும்பம் தொடர்பான விஷயங்கள், தொழில் விஷயங்கள் என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும். பொறுப்பானவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். நீங்கள் விரும்பும் பெண் அவளின் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் பொறுப்பானவராக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

அன்பும், அக்கறையும்
அனைவருக்குமே நேசிக்கப்படுவது என்பது மிகவும் பிடித்ததாகும். எனவே பெண்கள் தங்களின் குறைகளை பொருட்படுத்தாமல் தன்னை காதலிக்கும் ஒரு ஆணைதான் விரும்புவார்கள். தினமும் உடல்ரீதியாக நெருக்கமாக இருப்பதோ அல்லது பாராட்டுவது மட்டும் காதல் அல்ல. அவர்கள் மீது அக்கறையுடன், மரியாதை செலுத்துவதும் காதல்தான். இது தங்களின் கணவரை நினைத்து பெண்களை பெருமையடையச் செய்யும்.

நிதி நிலை
பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கும் ஒரு கேள்வி " பெண்கள் ஏன் திருமணத்தின் போது பணத்தை எதிர்பார்க்கிறார்கள்? " என்பதுதான். இந்த கேள்விக்கான பதில் என்னவென்றால், குடும்பத்தின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆண்களை பெண்கள் தேடுகிறார்கள். ஒரு தம்பதியினர் ஒவ்வொரு முறையும் ஒரு நிதி நெருக்கடியை அனுபவித்து வருகிறார்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லை என்றால், இது நிச்சயமாக நீண்ட காலத்திற்கு உறவின் வேர்களை உலுக்கும். பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் நிதிரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள்.

இலட்சியம்
இலட்சியம் மற்றும் குறிக்கோள் இல்லாத ஆண்களை பெரும்பாலும் பெண்கள் திருமணம் செய்ய விரும்பமாட்டார்கள்.சோம்பேறியாக இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. மாறாக, அவர்கள் சுய உந்துதல் மற்றும் அவர்களின் கனவுகளில் ஆர்வமுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் கூட, அவர்களும் தங்கள் கணவர்கள் தங்கள் தொழில் குறிக்கோள்களை அடைய விரும்புகிறார்கள்.

தன்னம்பிக்கை
பெண்கள் தன்னம்பிக்கை உடைய ஆண்களை நேசிக்கிறார்கள், ஏனெனில் தன்னுடைய கணவர் தன்னைப் பற்றி பாதுகாப்பான உணர்வு கொண்டவர் என்பதற்கான தெளிவான செய்தியை இது தருகிறது. நீண்ட காலத்திற்கு பாதுகாப்பற்ற உணர்வு ஆண்களை சமாளிப்பது கடினம் என்பது பெண்களுக்கு நன்கு தெரியும். மேலும் பெண்கள் தங்கள் கணவரிடம் இருந்து புத்திசாலித்தனமான அதேசமயம் உபயோகமான ஆலோசனைகளை எதிர்பார்ப்பார்கள்.
MOST READ: இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின் பாலியல் வாழக்கை செம்மையா இருக்குமாம் தெரியுமா?

இணக்கம்
பெண்கள் திருமணமான பிறகு தங்கள் கணவருடன் தங்குவதற்காக பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறுவதால், வேறு எதுவும் இல்லையென்றாலும், தங்கள் வருங்கால கணவர் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிடிவாதமான கணவன் தன் மனைவியின் எதிர்பார்ப்புகளை நிராகரிக்கிறான். பெண்கள் தனது கெட்ட பழக்கங்களை மாற்றக் கொள்ள விரும்பாத அல்லது சில நேரங்களில் சமரசம் செய்ய விரும்பாத ஆணை நிச்சயமாக புறக்கணிப்பார்கள்.

ஊக்குவிப்பது
முக்கியமான முடிவுகளில் அவர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் ஆண்களை பெண்கள் நேசிக்கிறார்கள். பெண்கள் அவர்களிடமிருந்து சிறந்ததை வெளிப்படுத்தும் ஆண்களை விரும்புகிறார்கள், மேலும் ஒவ்வொரு முறையும் தங்கள் கணவர்கள் தங்களுக்கு புதிதாக ஒன்றைக் கற்பிக்கவும், குறிக்கோள்களை அடைய உதவும் ஆணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள்.

நகைச்சுவை உணர்வு
நகைசுவை இல்லாத வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். தன்னை மனம்விட்டு சிரிக்க வைக்கும் ஆணை எந்த பெண்ணும் கட்டாயம் விரும்பத்தான் செய்வார்கள். அதற்காக ஆண்கள் எப்பொழுதும் கோமாளி போல நடந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. தளர்ந்திற்கும் சமயத்தில் ஒரு ஜோக் சொல்லி அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை வெளியே கொண்டுவர முயற்சிக்கும் ஆணை பெண்கள் நிச்சயம் விரும்புவார்கள்.
MOST READ: சர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

பாலியல் திருப்தி
ஆண்களைப் போலவே பெண்களும் பாலியல் உறவில் விருப்பம் கொண்டவர்கள்தான், எனவே திருமணத்தின் போது தன்னை திருப்திப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். உடலுறுவு மட்டுமின்றி உணர்ச்சிரீதியாகவும் தங்கள் மனைவியை எப்படி திருப்த்திப்படுத்த வேண்டும் என்று ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.