இந்த புத்தாண்டுக்கு உங்க லவ்வருக்கு இந்த அழகான பரிசுகள கொடுத்து அசத்துங்க…!

உங்கள் வாழ்க்கை துணை, திட்டங்களை வகுத்து சரியாக இயங்கினால், அவருக்கு மிகவும் பயனுள்ள வகையில், ஒரு நிர்வாக நாட்குறிப்பை நீங்கள் பரிசாக கொடுக்கலாம்.

இப்போது நடப்பாண்டு காலண்டர்களை மாற்றுவதற்கும் வரவிருக்கும் புதிய ஆண்டை வரவேற்பதற்கும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த புதிய வருடத்தை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம் அதாவது கொண்டாடலாம் என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். இதில், கல்யாணம் ஆன புதிய தம்பதிகள் அல்லது உறவில் இருக்கும் காதலர்கள் என அனைவரும் தங்கள் துணையுடன் புதிய வருடத்தை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என்று நண்பர்களிடம் ஐடியா கேட்பீர்கள்.

new-year-gifts-ideas-for-couples

கவலைய விடுங்க...நீங்க உங்க துணையோட இந்த புத்தாண்டை சிறப்பாக கொண்டாட நாங்க ஐடியா கொடுக்கிறோம். உங்களுக்கு ரொம்ப பிடித்த ஒருவருக்கு இந்த புத்தாண்டில் நீங்க ஒரு சர்பைரஸ் கொடுத்தா இந்த புத்தாண்டை அவங்க எப்பவும் மறக்கமாட்டாங்க... சில அற்புதமான, இதயப்பூர்வமான பரிசு யோசனைகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம், அதில் இருந்து உங்கள் துணைக்கு பிடித்தவைகளைத் தேர்ந்தெடுத்து, இந்த புதிய ஆண்டில் அவருக்கு சிறப்பு பரிசை அளித்து புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைரி

டைரி

உங்கள் வாழ்க்கை துணை, திட்டங்களை வகுத்து சரியாக இயங்கினால், அவருக்கு மிகவும் பயனுள்ள வகையில், ஒரு நிர்வாக நாட்குறிப்பை நீங்கள் பரிசாக கொடுக்கலாம். இது உங்கள் கூட்டாளருக்கு பிடித்த விஷயங்களை டைரியில் எழுதி வைத்துக்கொள்ளவும், வரவிருக்கும் நிகழ்வுகளுக்கான திட்டங்களை உருவாக்கவும் உதவும். மேலும், இந்த பரிசு உண்மையில் உங்கள் துணையின் மீது நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை உணர வைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது பொருத்தமான டைரியைக் கண்டுபிடித்து அதை உங்கள் துணைக்கு பரிசாக கொடுக்க வேண்டும்.

ஃபோட்டோ ஃப்ரேம்

ஃபோட்டோ ஃப்ரேம்

உங்கள் அழகான தருணங்களை ஒரு அழகான ஃபோட்டோ ஃப்ரேமாக செய்து உங்கள் துணைக்கு நீங்கள் பரிசாக கொடுக்கும்போது அதைவிட வேறு எதுவும் அழகாக இருக்க முடியாது. ஒருவருக்கொருவர் உங்கள் உண்மையான அன்பையும் பாசத்தையும் நினைவுபடுத்தும் சில படங்களை நீங்கள் தேர்வுசெய்து அதை நன்றாக வடிவமைக்கலாம். உங்கள் துணைக்கு சில மேற்கோள்கள் அல்லது செய்திகளைச் சேர்ப்பதன் மூலம் தனிப்பட்ட தொடர்பையும் கொடுக்கலாம். இது உங்கள் துணைக்கு மிகவும் மகிழ்ச்சியை தரும் ஒரு பரிசு.

செராமிக் பூந்தொட்டி

செராமிக் பூந்தொட்டி

காலையில் தூங்கி எழுந்ததும் அழகான பூக்கள் அல்லது தாவரங்களைப் பார்ப்பதை யார்தான் விரும்பமாட்டார்கள். உங்கள் துணை ஒரு இயற்கை காதலன் அல்லது காதலியாக இருந்தால், அவர்களுக்கு பிடித்ததைப்போன்று ஏன் ஒரு செராமிக் பூந்தொட்டியை பரிசாக கொடுக்க கூடாது? நிச்சயமாக உங்கள் துணை இந்த பரிசை ஒரு தனித்துவமான பரிசாகக் காண்பார்கள். மேலும், அந்த தாவரங்கள் வளரும்போதும், அதில் பூக்கள் பூக்கும்போது உங்கள் அன்பை உங்கள் துணைக்கு நினைவூட்டுகின்றன.

உல்லன் ஆடைகள்

உல்லன் ஆடைகள்

குளிர்காலம் மற்றும் குளிர்ந்த இரவு பொழுதுகளில்தான் நாம் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடி வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, உங்கள் அன்பை வெளிபடுத்த சில வசதியான கம்பளிகளைப் பரிசாக கொடுத்து கொண்டாடலாம். இது அவர்களை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், குளிர்காலத்தை அனுபவிக்கவும் உதவும். உல்லன் குல்லா, ஜாக்கெட்டுகள், ஜோடி சாக்ஸ், அழகான கையுறைகள் அல்லது ஒரு மஃப்ளரை தேர்வு செய்து உங்கள் துணைக்கு நீங்கள் பரிசளிக்கலாம். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தையும் குளிர்காலத்தையும் மகிழ்ச்சியாய் கொண்டாட நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு டெனிம் ஜாக்கெட்டை பரிசாக வழங்கலாம்.

உலர் பழங்கள்

உலர் பழங்கள்

காதல் என்பது ஒருவருக்கொருவர் அன்பையும் அக்கறையையும் காண்பிப்பதாகும். மேலும் உங்கள் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தால், உலர்ந்த பழங்களின் பாக்கெட்டை ஏன் பரிசாக வழங்கக்கூடாது. இது உங்கள் கூட்டாளருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அன்பின் சிறந்த அடையாளமாக இருக்கும். மேலும், இது உங்கள் துணைக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

சாக்லேட் பாக்ஸ்

சாக்லேட் பாக்ஸ்

உங்கள் துணை சாக்லேட்டுகளை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால், அவருக்கு சாக்லேட் பாக்ஸ் வழங்குவது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். இந்த சாக்லேட் பாக்ஸ் பரிசு ஒரு சிறந்த சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் உங்கள் புத்தாண்டும் மிக இனிப்பாக இருக்கும். இது தவிர, அழகாக வடிவமைக்கப்பட்ட சில பெட்டிகளில் வைத்தும் நீங்கள் கொடுக்கலாம். அந்த பெட்டியில் சில மேற்கோள்கள் மற்றும் செய்திகளையும் கூட நீங்கள் சேர்த்து எழுதி பரிசாக கொடுக்கலாம்.

ஹெட்ஃபோன்

ஹெட்ஃபோன்

உங்கள் துணை இசையை விரும்பி கேட்பவராக இருந்தால், அவருக்கு ஹெட்ஃபோன்களை விட சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும். நீங்கள் கடையில் சென்றும் வாங்கலாம் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். பல்வேறு மாடல்களில் புதிய நிறைய ஹெட்ஃபோன்கள் சந்தையில் கிடக்கின்றன. உங்கள் துணை எடுத்துச் செல்ல எளிதான மற்றும் நல்ல தரத்தில் ஒலிகளை உருவாக்கும் ஹெட்ஃபோன்களை நீங்கள் தேர்வு செய்து கொடுக்கலாம்.

போன் கவர்

போன் கவர்

இக்காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. இந்நிலையில், ஒருவரின் ஸ்மார்ட்போன் தரையில் கீழே விழுந்து அதன் திரை உடைந்துபோனால் அந்த வேதனையை அவரால் தாங்க முடியாது. எனவே, உங்கள் துணைக்கு ஒரு பயனுள்ள மற்றும் தனித்துவமான ஒன்றை பரிசளிப்பதில் நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால், நீங்கள் ஒரு வலுவான மற்றும் அழகான ஸ்மார்ட்போன் பேக் கவரை தேர்வு செய்யலாம். இது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், அவரது ஸ்மார்ட்போன் உடைத்து கீறல்களைப் பெறுவதிலிருந்து காப்பாற்றப்படும்.

காபி கப்

காபி கப்

உங்கள் துணை காபி விரும்பி அருந்துபவராக இருந்தால், அவருக்கு தனிப்பட்ட ஒரு அழகான காபி கப்பை ஏன் பரிசளிக்கக்கூடாது? இது உங்கள் துணையின் முகத்தில் ஒரு பரந்த புன்னகையை வரவழைக்கும். இது மட்டுமல்லாமல், உங்கள் துணைக்கு சொல்ல விரும்பும் சில செய்திகளையும் சேர்க்கலாம். நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காபி கப்பில் அமைத்தும் நீங்கள் பரிசாக கொடுக்கலாம்.

ஸ்னீக்கர் ஷூக்கள்

ஸ்னீக்கர் ஷூக்கள்

குளிர்காலத்தில் காலையில் வசதியான ஸ்னீக்கர் ஷூக்களை போட்டுக்கொண்டு நடப்பதன் வசதியுடன் எதுவும் பொருந்தாது. எனவே, உங்கள் துணை வசதியாக நடந்துகொண்டு அவர்களின் பேஷன் சென்ஸை வெளிப்படுத்த விரும்பினால், அவருக்காக ஒரு ஜோடி ஸ்னீக்கர்களை நீங்கள் வழங்கலாம். இந்த நாட்களில் சந்தையிலும் ஈ-காமர்ஸ் தளங்களிலும் பல்வேறு ஸ்னீக்கர்கள் உள்ளன. உங்கள் துணைக்கு பொருந்தும் என்று நீங்கள் நினைக்கும் அளவை நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

நேரம் செலவிடுங்கள்

நேரம் செலவிடுங்கள்

பரிசுகள் அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் உங்கள் துணையின் முகத்தில் ஒரு புன்னகையை வர வைப்பதற்கான சிறந்த வழி அவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடுவதுதான். உண்மையின் அதைதான் உங்கள் துணையும் விரும்புவார்கள். இது உங்கள் உறவையும் பலப்படுத்தும், வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 26, 2019, 12:53 [IST]
Desktop Bottom Promotion