Just In
- 4 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 15 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 16 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
Don't Miss
- News
"மாப்பிள்ளை".. எகிறி அடிக்கும் எடப்பாடி.. கோட்டையில் என்னாச்சு.. அப்ப ஓபிஎஸ்.. பரபரக்கும் பிளான்
- Finance
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து ரசிகர்களின் ஃபேவரைட் 'அர்ஜுன் சார்' சிபு சூரியன் விலகல்...கவலையில் ரசிகர்கள்
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதி.. இங்கிலாந்து தொடரில் அடுத்தடுத்த சர்ச்சை.. எப்படி பரவியது??
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆண்களே! முதலிரவில் தெரியாம கூட 'இந்த' தவறுகளை செஞ்சிடாதீங்க... இல்லனா 'அது' சரியாவே நடக்காதாம்...!
ஆண், பெண் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. இருவேறு நபர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் வாழ்க்கையை தொடங்கும் நாள் மிகவும் சிறப்பானது. திருமணம் முடிந்ததும் அடுத்தது முதலிரவுதான். முதலிரவு அல்லது திருமண இரவு செக்ஸ் எப்போதும் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலிரவில் ஆண்கள் அதிக செயல்திறன் அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை எடுத்துக்கொள்கிறார்கள், அதே நேரத்தில் பெண்கள் அந்த ஒற்றை மனிதனிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். ஆண், பெண் இருவருக்கும் தங்கள் முதலிரவை பற்றி பல ஆசைகள், கனவு மற்றும் எதிர்பார்ப்புகள் இருக்கும். சில நேரங்களில் இருவரும் சில தவறுகளை செய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் இங்கே நாம் ஆண்கள் செய்யும் தவறுகளைப் பற்றி பேசலாம். முதலிரவில் ஆண்கள் செய்யும் சில விஷயத்தால் அவர்களின் திருமண இரவு செக்ஸ் சரியாக அமையாது. முதலிரவில் ஆண்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் முக்கிய நாளில் தோல்வியைத் தவிர்க்க இவற்றை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

அதிகப்படியான ஆல்கஹால்
உங்கள் திருமண நாளில் நீங்கள் குடித்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆம், எனில் இது மிகவும் தவறானது. இது மிகவும் மோசமான சோதனையாக உள்ளது. இதை நீங்கள் செய்யும்போது, பின்விளைவுகளை மனதில் கொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது நிறைய மது அருந்துகிறார்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இந்த விஷயத்தில் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். இது திருமண இரவு உடலுறவை முற்றிலும் பாதிக்கும். இது படுக்கையில் உங்கள் செயல்திறனை பாதிக்கிறது எனவே நீங்கள் உட்கொள்ளும் அளவு கவனமாக இருக்கவும்.

திரைப்படங்களுடன் ஒப்பிடுவது
இது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட தங்கள் திருமண இரவு அனுபவத்தை திரைப்படங்களில் பார்ப்பதை ஒப்பிடுவதில் தவறை செய்கிறார்கள். திரைப்படங்கள் உண்மையற்றவை. அவை பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட பல கற்பனைகள். திரைப்படங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை உயர்த்த முனைகின்றன. அங்குதான் நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடும். எதுவும் சரியானது மற்றும் குறைபாடற்றது என்றில்லை. எனவே, நீங்கள் அத்தகைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால், உங்கள் திருமண இரவு உடலுறவு உங்களுக்கு சரியாக அமையாது. திரைப்படங்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்து உண்மையான முறையில் வாழ்க்கையை தொடங்குங்கள்.

அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்
நீங்கள் இரவை முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கி, உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய உங்களைத் தூண்டும் தருணத்தில், நீங்கள் தேவையற்ற அழுத்தத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். இந்த அழுத்தம் உங்கள் செயல்திறனையும் பாதிக்கிறது. இதனால், நீங்கள் எளிதாகத் தவிர்க்கக்கூடிய தவறுகளைச் செய்கிறீர்கள். தம்பதிகள் இருவரும் ஒருவரின் விருப்பத்தை ஒருவர் தெரிந்துகொள்ளுங்கள். அதுபோன்று செயல்படுங்கள். உங்கள் துணையை உற்சாகப்படுத்துங்கள்.

மிகவும் அவநம்பிக்கையான நடிப்பு
பெரும்பாலான ஆண்கள் திருமண இரவில் வெட்கப்படுவார்கள். அவர்கள் உண்மையில் அவநம்பிக்கையுடன் நடந்துகொள்கிறார்கள். இதற்கு முன்பு ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை, பேசியதில்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு அமைதியாகவும், அழகாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள். சிறிது நேரம் மனம் விட்டு இருவரும் பேசுங்கள். உங்கள் மனைவியின் சம்மதத்துடன் நிதானமான முறையில் செயலை தொடங்க ஆரம்பியுங்கள். விரைவாக செல்வதையும், உடனே குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். நேரம் எடுத்து பேசி உங்கள் முதலிரவை விளையாட்டாக தொடங்குங்கள்.

கவனம் சிதறுகிறது
எந்த திருமணத்தில் சில சிக்கல்கள் இல்லை? கேக் மற்றும் உணவில் குளறுபடியாகலாம், ஏற்பாடுகள் பொய்த்து போகலாம், சில வாக்குவாதங்களும் நடக்கலாம். இருப்பினும், இந்த சிக்கல்களை எல்லாம் உங்கள் திருமண இரவில் படுக்கையறைக்கு உங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது. கவனச்சிதறல்களிலிருந்து விலகி இருங்கள்.ஏனென்றால் சற்று மோசமான மனநிலை கூட முழு திருமண இரவையும் அழித்துவிடும். இதனால், உங்கள் முதலிரவை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது.