For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் கோவமாக இருக்கும்போது இத மட்டும் பண்ணுங்க... உடனே கூல் ஆகிடுவாங்க...

By Mahibala
|

ஆண்கள் எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுகிறவர்களாக இருந்தாலும் கூட, பெண்களின் சில வேடிக்கையான நடவடிக்கைகள் அவர்களை கூலாக்கும். அதிலும் குறிப்பாக, ஆணு், பெண் இரண்டு பேருமே தங்களுடைய ஈகோவின் காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அந்த ஈகோவை விட்டுக் கொடுத்துவிட்டால் பெண்கள் ரொம்ப ஈஸியாக ஆண்களைத் தங்கள் வசமாக்கிவிடுவார்கள். அப்படி வேறு இன்னும் என்ன மாதிரியான வேடிக்கையான விஷயங்களைச் செய்தால், ஆண்களின் கோபம் உடனடியாகக் குறையும்

Women Should Do These Funny Things To Bring Down Husbands Anger

ஆண்களை தாஜா பண்ணி, அவர்களுடைய கோபத்தை சுக்குநூறாக உடைப்பதற்காகவே பெண்கள் சில டெக்னிக்குகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைச் சாதிக்க வேண்டுமானால் எப்படியெல்லாம் தாஜா பண்ணுவார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூலாக்க...

கூலாக்க...

ஆண்களிடம் இருக்கும் ஒரு கெட்டப் பழக்கம் என்னவென்றால், தங்களுக்கு நண்பர்களிடம், அலுவலகம், பொது இடங்கள் என வெளியில் ஏற்படும் கோபத்தை எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் குழந்தைகளிடமோ அல்லது மனைவியிடமோ தான் காட்டுவார்கள். அது தவறுதான் என்றாலும் வீட்டில் உள்ள மனைவியின் கணவரின் சூழலைப் புரிந்து கொள்ளாமல் கோபப்பட்டால் என்ன ஆகும்? வீடு தான் ரெண்டாகும். அதனால் கொஞ்சம் பொறுமையாக இருந்து அந்த சூழலை தன்வசப்படுத்தினாலே எளிதில் பிரச்சினையை சரிசெய்துவிட முடியும்.

MOST READ: அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!

அறிவாளி புகழ்

அறிவாளி புகழ்

பெண்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் எப்படி மகிழ்ச்சி அடைவார்களோ அதேபோல தான் ஆண்களும் தங்களை அழகாக அறிவாக இருக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டால் போதும் பெருமை தாங்காது. அதனால் ஆண்கள் கோபமாக இருப்பது தெரிந்து விட்டால் உடனே இந்த ஆயுதத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். என் சமத்து, உங்கள மாதிரி வருமா என்று நாலு பிட்டுகளை அள்ளித் தெளியுங்கள். மனுஷன் சரி விடு விடு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று போய்விடுவார்.

பேச்சை குறைக்கலாம்..

பேச்சை குறைக்கலாம்..

ஆண்களை அளவுக்கு அதிகமாக கோபப்படுத்தும் விஷயமே பெண்கள் அளவுக்கு அதிகமாகப் பேசுவது தான். ஆனால் அந்த கோபத்தையும் அதிகமாகப் பேசித்தான் சரி செய்ய பெண்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது தான் இதில் பெரிய காமெடியே. பெண்களுக்கு ஐஸ் வெக்கச் சொல்லித் தரணுமா என்ன? அதெல்லாம் சிறப்பான சம்பவமா செஞ்சு முடிச்சிடுவாங்க.

பர்சனாலிட்டி

பர்சனாலிட்டி

தன்னுடைய கணவர் எப்போது மற்ற ஆண்களை விடவும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதில் பெருமையும் அடைவார்கள். ஆண்களுக்கும் அப்படி தன்னைத் தானே நினைத்து பெருமைபட்டுக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது என்றாலும்கூட, அவர்கள் வெளிப்படையாகப் பேச கொஞ்சம் கூச்சப்படுவார்கள். இதுவே தன்னுடைய மனைவி தன்னைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசி பெருமைப்படுவதை காதில் கேட்டால் போதும், அதிலும் மாமியார் வீட்டுப்பக்கம் உள்ளவர்களிடம் பேசினால், எவ்வளவு பெரிய கோபக்காரராக இருந்தாலும் கூலாகிவிடுவார்.

MOST READ: கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட... செல்வம் பெருக இதை முக்கியமா செய்யுங்க

அந்நியன்

அந்நியன்

பெண்கள் அடிக்கடி தங்களுக்குள் இருக்கும் சுயரூபத்தை மாற்றி மாற்றி ஆண்களுக்குக் காட்டுவார்கள். அதில் அதிகபட்சமாக காதலையும் அன்பையும் மாறிமாறி காட்டினால் இந்த பிரச்சினையே பெரிதாக இருக்காது. அன்பால் சாதித்துக் கொள்ளும் கலை ஆண்களை விடவும் பெண்களுக்கே அழகாக வரும். திறமை இருக்கும்போது அதை ஏன் பயன்படுத்தாமல் இருக்கணும்.

ஞாபக மறதி

ஞாபக மறதி

ஆண்களின் மிகப்பெரிய பலம், பலவீனம் இரண்டுமே அவர்களுடைய ஞாபக மறதி தான். தாங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களே ஆண்களுக்குப் பெரிதாக நினைவில் இருக்காது. அதுபோன்ற சமயங்களில், தனக்குச் சம்பந்தப்பட்ட இனிமையான தினங்களையும் முக்கிய தினங்களையும் நினைவுபடுத்தினால் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். பெண்களுக்கு இது கைவந்த கலை தான். அதனால் கவலைப்படத் தேவையில்லை.

பட்டால் படட்டும்

பட்டால் படட்டும்

ஆண்கள் கோபமாக இருக்கும்போது பிடிக்காத விஷயங்களை விட்டுவிட்டு, நீங்கள் அவர்களிடம் எதையெல்லாம் ரசிப்பீர்களோ அதை உங்கள் முன் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். சில பெண்கள் எந்த முயற்சியும் எடுக்காமல், அவராக கோபம் குறைந்து திரும்பி வரட்டும் என்று விட்டுவிடுவார்கள். இந்த வகையான பொறுமைசாலி பெண்கள் மிக மிகக் குறைவு.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

கட்டில் வைத்தியம்

கட்டில் வைத்தியம்

ஆண்களின் கோபத்தைக் குறைக்க தங்களிடம் இருக்கும் எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்திய பின்னரும் வழிக்கு வரவில்லை என்றால், அவர்களிடம் இருக்கவே இருக்கிறது, ஒரு பிரம்மாஸ்திரம். அது என்ன தெரியுமா? கட்டில் வித்தை தான். இதில் எப்பேர்ப்பட்ட ஆணும் மட்டையாக மடங்கிவிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Should Do These Funny Things To Bring Down Husband's Anger

A good friend of mine is married to a man with a quick temper. She says it’s not easy when he gets angry, especially because she still has children in her home. She describes her husband like this: “If I say something he disagrees with, or if I broach a subject he doesn’t want to talk about, he immediately loses it.
Story first published: Wednesday, August 28, 2019, 17:56 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more