For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எவ்ளோ பெரிய குடும்பமா இருந்தாலும் மாமியார்- மருமகள் பிரச்னை ஓயாது... அப்படியென்ன டிஸ்யூம்?

மாமியார் மருமகள் உறவு பற்றியும் இவர்களுக்கு இடையே பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தொகுப்பு தான் இது.

|

மகனுக்கு திருமணத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்கும் தாய், திருமணம் முடிந்து மருமகள் வீட்டிற்கு வந்தவுடன் அவருடன் இயல்பாக பழக முடியாமல், இருவருக்கும் இடையில் கோபதாபங்கள் ஏற்படுகிறது. இதனால் வீட்டின் ஒட்டுமொத்த சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது.

Understanding the New Age Mother-in-Law and Daughter-in-Law Relationships

இந்த மாமியார் மருமகள் பிரச்சனை காலம்காலமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இன்றைய நவீன கால நிலையில் இந்த பிரச்சனை இன்னும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மாமியார் மருமகளிடையே ஒரு இணக்கமான சூழல் அமையும் வீடுகள் எண்ணிக்கையில் மிவும் குறைவாக உள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாமியார் - மருமகள்

மாமியார் - மருமகள்

நவீன கால பெண்கள் சுதந்திரமாக வாழ நினைக்கின்றனர். நிறைய சம்பாதிக்கின்றனர். நிறைய படித்திருக்கின்றனர். அவர்கள் நிதி நிலைமையை கையாளும் அளவிற்கு அவர்களுக்கு வருமானம் வருகிறது. இதற்கிடையில் அதிகரித்து வரும் மாமியார் மருமகள் பிரச்சனைகள், பல விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன. பொது இடத்தில் சண்டை சச்சரவுகளுக்கு வழி விடுத்து, சட்ட தலையீடு அவசியமாகிறது.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

ஒரு மாமியாரை ஒரு மருமகள் கையாளுவது எப்படி என்று எந்த ஒரு பாடசாலையிலும் கற்பிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மருமகளுக்கும் அவர் மாமியார் பற்றி சொல்வதற்கு பல கதைகள் உண்டு. ஒவ்வொரு கதை திகில் நிறைந்ததாக இருக்கும். ஒவ்வொரு கதை சிரிப்பு மழையை பொழியும்.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

சின்ன சின்ன விஷயத்திலும் மாமியாரின் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாத மருமகள், தன் கணவன் அல்லது பெற்றோரிடம் உதவியை நாடுகிறாள். அந்த தேவையை உணர்ந்து கொள்ளாத கணவன் அல்லது பெற்றோர் அமையும்போது திருமணம் தொடர்பான பிரச்சனை மேலும் பெரிதாகிறது.

மாமியார் குறித்து திருமண ஜோடிகள் பேசும்போது, தன்னுடைய மாமியார் திருமண வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்க விடுவதில்லை என்றும் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறார் என்றும் புலம்புகின்றனர். ஒரு மருமகள் எப்படி இருக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன விரும்ப வேண்டும் என்று எல்லாவற்றையும் மாமியார் மட்டுமே முடிவெடுப்பதாகக் குறை கூறுகின்றனர்.

MOST READ:தொடர்ந்து 7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? தெரிஞ்சிட்டு குடிங்க...

 இடையில் மாட்டிக் கொண்டு

இடையில் மாட்டிக் கொண்டு

மாமியாரை இது குறித்து கேட்கும்போது, இவர்கள் இப்படி செய்வது நல்ல நோக்கத்திற்காக மட்டுமே என்று கூறுகின்றனர். இவர்களின் பிள்ளைகள் வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் தவறாக எடுக்கக் கூடாது என்று அவர்கள் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் இப்படி செய்வதாகக் கூறுகின்றனர். முடிவெடுப்பதில் கட்டுப்பாடு விதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.

பிரச்சனைக்குரிய தளங்கள்

பிரச்சனைக்குரிய தளங்கள்

பொதுவாக முதன்முதலில் மாமியார் மருமகள் பிரச்சனை தொடங்குவது தேனிலவிற்கு பிறகான காலகட்டத்தில். குறிப்பாக இந்த நேரம் பிரச்சனை தொடங்குகிறது என்று வரையறுக்க முடிவதில்லை என்றாலும் திருமணம் செய்த முதல் சில ஆண்டுகளில் பிரச்சனை தலை தூக்குகிறது. புதிய அனுபவம், புதிய சமையல், புதிய வாழ்க்கை முறை என்று இந்த விஷயங்களில் பிரச்சனை வேரூன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனை உண்டாக மற்றொரு முக்கிய காரணாம், வீட்டு நிர்வாகம் குறித்த கட்டுப்பாடு மற்றும் பங்களிப்பு குறித்ததாக உள்ளது.

ஒருவேளை மாமியார் மருமகள் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று சம்பாத்திப்பவர்கள் என்றால் வீட்டு நிர்வாகத்தில் இருவரின் எதிர்பார்ப்பும் மிக அதிகமாக இருக்கும். மேலே கூறிய எல்லா பிரச்சனைகளையும் பொறுத்துக் கொண்டு அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வது என்பது ஒரு கடினமான செயல்பாடு ஆகும். நீங்கள் மாமியாருடன் இல்லாத சூழ்நிலையிலும், என்றாவது ஒரு நாள் அவர் வீட்டிற்கு வந்து போக இருந்தாலும் இந்த பிரச்சனைகள் தலை தூக்கும்.

இதற்கு என்ன தீர்வு?

இதற்கு என்ன தீர்வு?

ஒவ்வொரு பிரச்சனைக்கும் இரண்டு பரிமாணம் இருக்கும். மாமியார் ஒரு விதத்தில் சொல்லுவார். அதே நிலையை மருமகள் வேறு விதத்தில் விவரிப்பார். ஆகவே இதற்கு என்ன தீர்வு என்று பார்த்தால், ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையில், இருவருக்குமான உறவில் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். காலம் செல்லச்செல்ல, ஈகோவைத் தள்ளி வைத்து அல்லது மாற்றிக் கொண்டு, வீட்டின் நன்மதிப்புக்காக சில விஷயத்தை செய்ய முன்வர வேண்டும்.

ஒரு மணமுடித்த ஜோடியாக ஒரு சிலருக்கு கவுன்சிலிங் தேவைப்படலாம். இதன் மூலம் நீங்கள் இந்த பிரச்சனையின் எந்த நிலையில் இருகிறீர்கள், இதனை எப்படி அணுகுவது இருவரும் சேர்ந்து எப்படி பயணிப்பது என்பது குறித்த ஒரு புரிதல் ஏற்படலாம்.

MOST READ:சுப்பிரமணியன் கருப்பையா கவுண்டமணி ஆன கதை தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க...

கவுன்சிலிங்

கவுன்சிலிங்

கவுன்சிலிங் பெரும் பெண்களுக்கு இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் சிறியதாக தோன்றும். ஆனால் மாமியார் தன்னுடைய மற்றும் தன் கணவரின் தனிப்பட்ட விஷயத்தில் உட்புகுந்து முடிவெடுப்பது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்களை சவாலாக எடுத்துக் கொள்வதால் எந்த ஒரு நன்மையையும் ஏற்படப்போவதில்லை. ஒருவரோடு மற்றவர் அமர்ந்து பேசி, இதற்கான தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பெஸ்ட் பிரண்ட்ஸ்

பெஸ்ட் பிரண்ட்ஸ்

ஒரு மாமியாரும் மருமகளும் சிறந்த தோழிகளாவது மிகவும் கடினம். மாமியாரை தாய் போல், மருமகளை மகள் போல் பார்ப்பதும் கடினம் திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவன் மனைவியின் பேச்சைக் கேட்பது என்பது நடக்காத விஷயம். காரணம், இது போன்ற பிரச்சனைகளை அவர் இதற்கு முன் இந்த வீட்டில் கண்டிருக்க மாட்டார். மேலும், அவருடைய தாயின் முடிவு தவறு என்பதை ஒரு மகனால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே மனைவியிடம் கோபம் ஏற்படலாம்.

இதனால் அவர் ஆதரவு மனைவிக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் கணவன் மனைவி மனம் விட்டு பேசி , அவர்களின் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். இரண்டு பக்கமும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் முடிவெடுக்க பழக வேண்டும்.

மரியாதை

மரியாதை

மாமியார்களுக்கு கூற வருவது என்னவென்றால், அவர்களின் எதிர்பார்ப்புகளை எளிமையான வழியில் மருமகளுக்கு புரிய வைக்க வேண்டும். வீம்பாக செய்ய விரும்பும் காரியம் வெற்றி பெறாது. அது தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கப்படும். உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு தக்க விளக்கம் கொடுங்கள். தற்போதைய மாமியார்களுக்கும், இனி வரப்போகும் மாமியார்களுக்கும் ஒன்றை மட்டும் முக்கியமாக சொல்லிக் கொள்ள விழைகிறோம், மற்றொரு பெண்ணின் விருப்பத்திற்கும் முடிவுகளுக்கும் மரியாதை கொடுங்கள். அவர்களுடைய விருப்பம் உங்களுடன் பொருந்தவில்லை என்றாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

MOST READ:30 வயசுக்கு மேல இந்த 4 உணவையும் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்... எதுவும் ஆகாது...

பொறுமை

பொறுமை

கடைசியாக சொல்வது என்னவென்றால், பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே சமாளிக்கும் திறனை கற்பிக்க வேண்டும். இதனால் இன்னும் எளிதாக ஒரு பிரச்சனையை கையாள முடியும். ஒரு விஷயத்தை ஆக்ரோஷமாக கையாளுவதை விட சாந்தமாக கையாளுவதால் பிரச்சனையின் முடிவு வேறுபடலாம். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு பொறுமையாக இருப்பதை பழகிக் கொள்ளலாம். முக்கியமாக, சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக மாற்றாமல் இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Understanding the New Age Mother-in-Law and Daughter-in-Law Relationships

The Mother-in-law Daughter-in-law Syndrome occurs when the two ladies of the house do not get along, resulting in tension, affecting the overall atmosphere at home. These issues have always been present, but it has become even more prominent in today's changing times. The phrase‘And they lived happily ever after’ should have come with a clause of ‘the in-laws lived happily ever after’!
Desktop Bottom Promotion