For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா? காரணம் இதுதான் ?

மணமுடித்து விட்டால் ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தனக்கு சொந்தமான பொருளாக கருதிக் கொள்கிறார்கள். அது தன்னிடம் இருந்து பிரிக்கமுடியாத பொருள் என எழுதப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு ஒருவர் பிறிதொ

By Haribalachandar.b
|

ஒருதலைக் காதல் தோல்விகளைப் போல் இன்று திருமண தோல்விகளும் அதிகரித்து விட்டன. ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகி இருவரும் ஒத்துதான் தான் காதலிக்கிறார்கள். காதலித்து மணமுடிப்பதோடு இன்றைய கால இளைஞர்களின் காதல் அந்நியோனியம் முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். 12ம் வகுப்பு முடித்தால் தான் கல்லூரியில் சேர முடியும் என்பதைப் போல் திருமணம் செய்ய காதலையும் ஒரு ஆயுதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய காலத்து இளைஞர்கள். மணமுடித்து விட்டால் ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தனக்கு சொந்தமான பொருளாக கருதிக் கொள்கிறார்கள். அது தன்னிடம் இருந்து பிரிக்கமுடியாத பொருள் என எழுதப்படாத ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஒருவர் பிறிதொருவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதன் விளைவு தான் ஈகோ எனும் ஜீரணிக்க முடியாத வியாதிக்கு வழிவகுக்கிறது. இதுபடிப்படியாக வைரஸ் போல் பல்கிப் பெருகி கடைசியில் விவாகரத்தில் போய் முடிகிறது. சரி முதல் வாழ்க்கையைத் தான் தவறாக தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள் என்றால் இரண்டாவது கணவரையும்/ மனைவியையும் ஏன் விவாகரத்து செய்கிறார்கள். இங்கு பிரச்சினை குறிப்பிட்ட ஆணோ பெண்ணோ இல்லை. பின்ன என்னவாகும் இருக்கும் என்று ஆழ்ந்து சிந்திக்கிறீர்களா? அப்போ இதைப் படியுங்கள். உங்களது நீண்ட நெடிய மனப்போராட்டத்திற்கு இந்த கட்டுரை எளிய மருந்தாக இருக்கும்.

விவாகரத்து எப்போதும் தற்செயலாக நடந்துவிடாது. இது ஒரு நெடுந்தூரப் பயணம். ஒரு விஷயத்தை முக்கியமாக நெடுங்காலமாக கவனிக்கும் போது இது நோய்க்கிருமிகளைப் போல் மெதுவாக வளர்கிறது. அதே சமயத்தில் விவாகரத்து என்பது எரிமலைக் குழம்புகளில் இருந்து வெடிக்கத் தயாராக இருக்கும் குமிழி அல்ல. மேலும் விவாகாரத்து எல்லாரும் கருதுமளவுக்கு அதிர்ச்சிக்கரமான சம்பவமாக கணவன் மனைவிக்குள் ஒருபோதும் இருந்ததும் இல்லை. இது நெடுங்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட தொடர் சண்டைகளின் வழி எட்டப்பட்ட நிரந்தர தீர்வாகவே கணவன் மனைவிகளால் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது இருவீட்டார் குடும்பத்துக்கு வேண்டுமானால் அதிர்ச்சிகரமான விஷயமாக இருக்கலாம்.

Divorced

ஏன் இதைக் கவனிக்கவில்லை?

விவாகரத்து திடீரென ஒருபோதும் நடக்காது. வாழ்வின் எல்லா தளங்களிலும் சிக்கல்கள் உருவாகின்றன. அப்படி உருவாகின்ற சிக்கல்களில் தவிர்க்க முடியாத மனக்கசப்புகளை தம்பதியினரிடையே ஏற்படுத்திவிடுகின்றன. இந்தத் தொடர் குற்றச்சாட்டு அல்லது யாரோ ஒருவர் செய்கிற பிழை திருமணத்தின் அடித்தளத்தை தவுடு பொடியாக்கிவிடுகிறது.

MOST READ: சுக்கிரன் உச்சத்துல ஓஹோன்னு இருக்கிற 2 ராசி எது? பணமழை யாருக்கு கொட்டப் போகுது?

இதைக் கேளுங்கள்:

தொடர்ச்சியாக நிம்மதியில்லாத திருமணவாழ்க்கையை அனுபவிக்கிறீர்களா இதைக் கட்டாயம் கேளுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் விவாகரத்து தவிர்க்க முடியாததாக இருக்கலாம் இருந்தபோதிலும் ஒரு சிறந்த திருமண வாழ்க்கையை நோக்கி வாழ முயற்சி செய்யுங்கள். விரும்பத்தகாத விஷயங்கள் கைமீறிப் போகும் போது அறிகுறிகளைப் பார்த்து உறவை மீண்டும் மகிழ்ச்சியான இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். இது கசப்பான அனுபவங்களிலிருந்து வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

புதுசா கல்யாணம் ஆனவங்க விவாகரத்து செய்ய இதான் காரணம்:

திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளுக்குள் இருப்பவர்களா நீங்கள் ? திருமண வாழ்க்கையில் கீழ் வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நிச்சயம் அனுபவிக்கப் போகிறீர்கள். கீழ்காணும் அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் அதை நீங்கள் ஒரு பார்வை எடுத்து உங்களுக்குள் விரிசல் ஏற்படும் முன் ஆராய்ந்து சரிசெய்துக் கொள்வதற்காகவே இந்தப் பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 தான் தான் சிறந்தவர் என நினைக்கிறீர்களா?

#1 தான் தான் சிறந்தவர் என நினைக்கிறீர்களா?

நம்மில் பலருக்கு தான் தான் சிறந்தவர் என்ற அதீத நம்பிக்கை இருக்கிறது. அதற்காகவே மற்றவர்களோடு நம்மை எடைப் போட்டுக் கொள்ள விரும்புகிறோம். உதாரணமாக பக்கத்து வீட்டுக்காரன் பைக்கில் தன் மனைவியை அழைத்துச் சென்றால் தானோ காரில் தன் மனைவியை அழைத்துச் சென்று தான், தான் சிறந்தவன் என்பதை அடிக்கடி நீருபிக்கும் மனநோய் கொண்டவர்களாக சிலர் இருக்கிறார்கள். ஆனால் இந்தக் கருத்தோடு குடும்பத்தை அணுகுவது என்பது தவறானது. இது உங்களுக்கு சாதாரண சிந்தனையாக இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் இது வளர்ந்து தன் மனைவி தன்னுடைய தகுதிக்கு ஏற்றவள் இல்லை என்று வேறொரு பெண்ணை மனம் தேட ஆரம்பிக்கும்.

என்ன செய்யலாம்?

உங்களைச் சிறந்தவர் என்பதைக் காண்பிப்பதற்காக உங்கள் மனைவியின் குறைகளை மட்டும் ஆராய்திருந்த உங்கள் மனதிற்கு சிறிது ஓய்வு கொடுங்கள். உங்கள் கைகளால் கருமேகங்களை விலக்கி பாருங்கள் உங்கள் மனைவியிடம் எண்ணற்ற நல்ல குணங்கள் இருந்திருக்கும். உங்களுக்காகவே தனது வாழ்வை அவள் அர்பணித்திருப்பாள். உங்களைத் தவிர பிறிதொன்றையும் எண்ணியிருக்க மாட்டாள். உங்களை மட்டும் எண்ணக்கூடிய ஜீவன் இனி கிடைக்க வாய்ப்பில்லை. இதை யோசித்தாலே செம்மண்ணில் கலந்த நீரைப் போல் தங்கள் மனைவியுடன் ஒன்றிப் போய்விடுவீர்கள்.

#2 உங்களை கட்டுப்படுத்துவதை உணர்கிறீர்களா

#2 உங்களை கட்டுப்படுத்துவதை உணர்கிறீர்களா

உங்களுடைய திறனை அடைவதிலிருந்து திருமணம் தடையாக இருந்ததாக எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அது தொழில் விருப்பமாக இருக்கலாம் அல்லது கட்டிலில் தங்கள் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்வதாக இருக்கலாம். உதாரணமாக திருமணத்திற்கு முன் நான் மிகச்சிறந்த ஓட்டப்பந்தய வீரர்/வீராங்கனை ஆனால் திருமணத்திற்கு பின்னான கட்டுப்பாட்டால் எனது கனவை நிர்கதியாகிவிட்டது. என ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருந்திருக்கும் அதற்கு முட்டுக்கட்டாக திருமணம் இருந்திருப்பதாக நாம் தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம். பெரும்பாலானோர் அதை கடந்துவந்துவிட்டோம் என வாயாறாக சொன்னாலும் கூட மனதார அதன் தாக்கம் தினந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

என்ன செய்யலாம்?

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கூண்டில் அடைக்கப்பட்டாலும் உங்கள் சிறகுகள் வெட்டப்படவில்லை. சரியான வாய்ப்புக்காக காத்திருங்கள். தங்களிடம் திறமை இருப்பதை இயல்பாக துணையரிடம் அறிவுறுத்துங்கள். கண்டிப்பாக அவர் உங்களுக்கானவர். எல்லாத் தடைகளையும் தாண்டி அவரே உங்களுடைய இலக்கை அடைய உதவுவார். இங்கே பிரச்சினை கூண்டுக்குள் அடைப்பட்டிருக்கிறோம் என நீங்கள் நினைப்பது தான். முட்டைக்குள் அடைப்பட்டிருக்கும் உயிரினம் அதை உடைத்துக் கொண்டு தான் இந்த உலகை சந்திக்கிறது. எனவே கூண்டிலிருந்து பறந்து செல்ல எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கிறது. எனவே திருமண வாழ்வை திருப்தியாக கொண்டாடுங்கள்.

#3 தொடர்பு கொள்வதில் சிக்கல்:

#3 தொடர்பு கொள்வதில் சிக்கல்:

திருமண வாழ்க்கையில் தொடர்பு என்பது ஒருவருக்கொருவர் தகவலைப் பரிமாறிக் கொள்வது மட்டும் அல்ல. மாறாக ஒருவரையொருவர் புரிந்துக் கொள்வது மற்றும் ஒருவர் மற்றொருவரைப் பற்றி மேலும் கற்றுக் கொள்வது. ஆனால் இங்கே பெரும்பாலான தம்பதியினர்கள் வெறுமனே பேசிக் கொள்கிறார்கள். ஆனால் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துக் கொள்ளவோ, புரிந்துக் கொள்ளவோ முற்படுவதில்லை.

என்ன செய்யலாம்?

புரியும்படி சொன்னால் உலகில் வாழும் 10ல் ஒருவராக தனது இணையரையும் நினைக்காமல் இருந்தாலே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணலாம். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் இல்லையென்றால் வெடிக்க காத்திருக்கும் குண்டைப் போல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

MOST READ: ஒரு பெண்ணுக்கு உங்களை பிடிச்சிருக்கு என்பதற்கான 11 அறிகுறிகள் இவைதான்... செக் பண்ணிப்பாருங்க...

#4ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புகள்

#4ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புகள்

தற்காலத்தில் சாதி, மதம் என எதையும் பாராமல் காதல் திருமணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. காதலர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவீட்டார் சம்மதத்தோடு ஒரதிருமணம் என்பது இனிமையான வாழ்க்கையின் அடுத்தப்படியாகும். ஆனால் எல்லாருக்கும் அப்படி அமைந்து விடுகிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண் பெண் இருவரும் காதலிக்கும் போதே தன்னுடைய கணவன்/ மனைவியின் மீது எதிர்ப்பார்ப்புகளை கொண்டிருக்க ஆரம்பிக்கிறார். அது திருமணம் ஆன பிறகு எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது. இது காதலிப்பவர்களுக்கு பெரிதாகத் தெரிவதில்லை. காரணம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் தான் திருமணம் என்ற நிலை நிலவுகிற சூழல் தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணங்களுக்கு இந்த வாய்ப்பு இருப்பதில்லை.

என்ன செய்யலாம்?

குறைந்தபட்சம் தாம்பத்தியத்திற்கு முன்பாகவாவது ஒருவருகொருவரான எதிர்பார்ப்புகளைப் பற்றி பேசிக் கொள்வது நெடிய நீண்ட திருமண வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும்.

வித குழப்பமான சூழலில் தான் திருமணங்கள் நடத்திக் கொள்கின்றனர். அந்தச் சூழலில் இருவீட்டார் கலாச்சாரங்களை பின்பற்றுவதில் ஒருவருக்கொருவர் மிக நீண்ட நெடிய பிரச்சினைகளை சந்திப்பதோடு மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு திருமணத்தில் அழிவை ஏற்படுத்த அடக்கப்பட்ட கருத்துக்களும் எதிர்க்கும் எண்ணங்கள் மட்டுமே போதுமானது.

என்ன செய்யலாம்?

எந்த ஒரு விசயமும் எதிர்பாரத போது நடந்தால், நடந்தது இன்னது தான் என்பதை உணர்ந்துக் கொள்ளவே நமக்கும் சில காலங்கள் ஆகும் போது. ஊறிப்போன சில விசயங்களில் இருந்து பெற்றோர்கள் வெளிவருவது என்பது சாதரணமானதல்ல. அப்படிப்பட்ட இந்தச் சூழலில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று இந்தச் சூழலை சமாளிக்கும் போது இந்த பிரச்சினை தவிடு பொடியாகிவிடும்

#5கலாச்சாரப் பிண்ணனியில் வேறுபாடு

#5கலாச்சாரப் பிண்ணனியில் வேறுபாடு

தற்காலத்தில் சாதி, மதம் என எதையும் பாராமல் காதல் திருமணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. காதலர்கள் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவீட்டார் சம்மதத்தோடு ஒருவித குழப்பமான சூழலில் தான் திருமணங்கள் நடத்திக் கொள்கின்றனர். அந்தச் சூழலில் இருவீட்டார் கலாச்சாரங்களை பின்பற்றுவதில் ஒருவருக்கொருவர் மிக நீண்ட நெடிய பிரச்சினைகளை சந்திப்பதோடு மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு திருமணத்தில் அழிவை ஏற்படுத்த அடக்கப்பட்ட கருத்துக்களும் எதிர்க்கும் எண்ணங்கள் மட்டுமே போதுமானது.

என்ன செய்யலாம்?

எந்த ஒரு விசயமும் எதிர்பாரத போது நடந்தால், நடந்தது இன்னது தான் என்பதை உணர்ந்துக் கொள்ளவே நமக்கும் சில காலங்கள் ஆகும் போது. ஊறிப்போன சில விசயங்களில் இருந்து பெற்றோர்கள் வெளிவருவது என்பது சாதரணமானதல்ல. அப்படிப்பட்ட இந்தச் சூழலில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பக்கபலமாக நின்று இந்தச் சூழலை சமாளிக்கும் போது இந்த பிரச்சினை தவிடு பொடியாகிவிடும்

#6 உங்கள் துணைக்கு உங்களுடைய தேவை அல்லது விருப்பங்கள் புரியவில்லையா?

#6 உங்கள் துணைக்கு உங்களுடைய தேவை அல்லது விருப்பங்கள் புரியவில்லையா?

தனிநபர்களாக இருக்கும் போது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த விருப்பங்களின் உச்சகட்டமாக, தான் இன்னவாக ஆக வேண்டும் என்ற கனவு கட்டாயமாக இருக்கும். அந்த விருப்பங்களையும், கனவுகளையும் உங்கள் துணையர் புரிந்துகொள்வதே இல்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுகிறதா? நிச்சயம் இது பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தும்.

என்ன செய்யலாம்?

தம்பதியினர் மனதார எதையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளாததற்கே இதற்கான காரணம். அதுமட்டுமல்லாது முந்தைய அனுபவங்களில் இருந்து நடப்பு பிரச்சினைக்கான தீர்வுகளை எடுப்பது இதைச் சரி செய்தாலே இந்தப் பிரச்சினை எளிதில் தீரும்.

#7 வாழ்க்கை முறையில் திடீர் மாற்றம்

#7 வாழ்க்கை முறையில் திடீர் மாற்றம்

திருமணம் என்பது கழுத்தைச் சுற்றியுள்ள தாலி மட்டுமல்ல. இது ஒரு புதிய வாழ்க்கை / புதிய வாழ்க்கை முறை. இருவருமே தனித் தனி வாழ்க்கை முறையில் வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவருக்கொருவர் உங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை முறையில் ஏற்படுகிற இடைவேளை வாழ்க்கையிலும் ஏற்படும்.

என்ன செய்யலாம்?

உணர்வுகளை பரிமாறிக் கொள்ள பழகுங்கள். துணையரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

#8 நம்பிக்கை

#8 நம்பிக்கை

திருமண வாழ்க்கையில் நம்பிக்கை என்பது தான் மிகப்பெரிய தூண். உங்கள் கணவர் / மனைவியை நீங்கள் நம்பத் தயாராக இல்லாவிட்டால் ஒருபோதும் உங்களுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையாது. இன்னும் சொல்லப்போனால் திருமணத்தைப் பற்றி நீங்கள் எண்ணாமலே இருக்கலாம்.

என்ன செய்யலாம்?

ஒருவேளை தவிர்க்க முடியாத சூழலில் சந்தேகம் எழுகிறது என்றால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய அந்தரத்தை ஆராய்வதைவிட நேரிடையாகவே சரியான விகிதத்தில் கேட்கலாம். நிச்சயம் பதில் இருந்தால் அவர்/அவள் கண்டிப்பாக தெரிவிப்பார்/ள்.

MOST READ: நாளை சந்திர கிரகணம்... உலகம் முழுக்க சொல்லப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன?

#9 பொறாமை / பாதுகாப்பின்மை

#9 பொறாமை / பாதுகாப்பின்மை

பாதுகாப்பின்மை என்பது ஒரு சிறிய புழு போல. அது நமது இதயத்தில் மெதுவாக வளர்ந்து காலப்போக்கில் வளரும்.இது உங்கள் மனைவி/ கணவர் தவறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த பய உணர்வு இயல்பாக இருக்க விடுவதில்லை. திருமண வாழ்க்கையில் ஸ்லோ பாய்சன் இந்த பாதுகாப்பின்மை என்ற உணர்வு. தனக்கு மட்டும்தான் என்ற உணர்வு ஆரம்பத்தில் நல்லதாக தோணலாம். காலப்போக்கில் அது கட்டாயம் எரிச்சலை உண்டாக்கும்.

என்ன செய்யலாம்?

தனிமையில் துணையரை ஒருபோதும் விடாதீர்கள். இக்கட்டான சூழலாக இருந்தாலும் நம்பிக்கை அளியுங்கள். பிரச்சினைகளை பெரிதுப்படுத்திக் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Divorced Within a Few Years of Marriage? Have You Noticed This?

When married, they consider the man or woman to be their own. It does not treat one person as another, by signing an unwritten contract, which is inseparable from him. The result is a digestive illness called ego. This is followed by the final stage of divorce. This article will look at the reasons for this.
Story first published: Tuesday, July 16, 2019, 16:46 [IST]
Desktop Bottom Promotion