For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PUBG’யினால ஏற்பட்ட விபரீதம்… கணவன், மனைவி அதிர்ச்சி… - My Story #330

By Anba
|

சமீபத்துல அடிக்ஷன் பத்தி நீங்க எழுதுன கதை ஒன்னு படிச்சேன். அப்ப தான் எனக்கு என் வாழ்க்கையில நடந்து ஒரு சம்பவத்த பத்தி சொல்லணும்னு தோணுச்சு.

என் வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா தான் போயிட்டு இருந்துச்சு. ஒரு மனுஷனோட வாழ்க்கையில அந்தந்த கட்டத்துல என்னென்ன விஷயம் எல்லாம் நடக்கணுமோ அதெல்லாம் கரெக்ட்டா நடந்துச்சு.

real life story pubg creates negative impact in relationship

இது லக்குல நடந்ததுன்னு சிலர் சொல்லுவாங்க. ஆனா, கஷ்ட்டப்பட்டு படிச்சேன்... அதுக்கான பலனை தான் நான் அனுபவிக்கிறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். சின்ன வயசுல நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகளுக்கு வரக்கூடாதுன்னு நான் நிறையா உழைக்க ஆரம்பிச்சேன்.

கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கணும், அமைச்சு கொடுக்கணும்னு நெனச்ச நான்... கூட இருந்து பொறுப்பான அப்பாவா இருக்கணும், நல்லது சொல்லிக் கொடுக்கணும்,அவங்க தப்பான வழியில போறாங்களான்னு கவனிக்கணும்..

ஒரு சின்ன விளையாட்டு தானேன்னு நெனச்சது.. இன்னிக்கி எங்களையும் என் மகனையும் பிரிச்சுடுமோனு என்னையும், என் மனைவியையும் பயப்பட வெச்சுருக்கு. சிலருக்கு இதெல்லாம் ஓவர்.. இப்படி எல்லாம் நடக்குமான்னு தோணலாம். ஆனா, இது என் வாழ்க்கையில நடந்த உண்மையான சம்பவம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3 வருஷம் கழிச்சு…

3 வருஷம் கழிச்சு…

எங்களுக்கு கல்யாணமாகி மூணு வருஷம் கழிச்சு தான் எங்க மகன் பிறந்தான். அவன் பொறந்ததுல இருந்தே எனக்குள்ள இருந்த ஒரே விஷயம்... நான் பட்ட கஷ்டம் எல்லாம் அவன் அனுபவிக்கவே கூடாதுங்கிறது தான். ஆனா, அது எவ்வவளோ பெரிய தப்புன்னு இப்பதான் உணர்தேன்.

என் வாழ்க்கை!

என் வாழ்க்கை!

இன்னிக்கி நான் வீடு, காருன்னு இருக்குறது பொறாமையா பாக்குறவங்க தான் அதிகம். ஆனா, இவங்க யாருமே நான் என் சின்ன வயசுல எவ்வளோ கஷ்டப்பப்பட்டேனு பார்த்தது இல்ல. பொதுவா குறைந்தபட்சம் தீபாவளி, பொங்கலுக்காவது புது துணி கிடைக்கும், ஆனா அதுவே ரொம்ப கஷ்டம் தான். பல தீபாவளிக்கு நான் பட்டாசு வெடிக்கிறத வேடிக்கை மட்டும் தான் பார்த்திருக்கேன். இப்படியான சூழலல்ல இருந்து படிப்ப மட்டுமே நம்பி வாழ்க்கையில வளர்ந்தவன் நான்.

தப்பு!

தப்பு!

இன்னிக்கி நாம பண்ற பெரிய தப்பே.. நாம அனுபவிச்ச கஷ்டம் நம்ம குழந்தைங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைக்கிறது தான். அவங்களுக்கு கஷ்டத்த காட்டாட்டியும், அது எப்படியானதுங்கிற புரிதல் ஏற்படுத்தனும். கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்குறோம்... மூணு வயசுல ஸ்மார்ட் போன் யூஸ் பண்றான்னு பெருமையா பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி சந்தோஷம் படுறோம். ஆனா, அவங்களுக்கு வாழ்க்கைனா என்ன, வாழ்க்கையில முக்கியமானது என்னங்கிறது தெரியறது இல்ல.

பப்ஜி!

பப்ஜி!

பல சமயம் பப்ஜி பத்தி கேள்விப்பட்டிருக்கேன். என் டீம்லயே பலர் அந்த கேம் விளையாடுவாங்க. மத்த ஆன்லைன் கேம்ஸ் தான் அதுவும்னு நெனச்சேன். ஆனா, என் 11 வயசு பையன் மனசுல அது ஒரு ஆக்ரோஷமான எண்ணத்தையும், மத்த எல்லாரையும், எல்லாத்தையும் விட பப்ஜி கேம் தான் முக்கியம்ங்கிறது மாதிரியான மாற்றம் உண்டாகும்ன்னு நான் நினைக்கல.

டேப்லெட்!

டேப்லெட்!

என் மகனுக்குன்னு தனி டேப்லெட் இருக்கு. அதுல அவன் என்ன பண்றான் எது பண்றான்னு எதுவும் எனக்கு தெரியாது. எப்ப பார்த்தாலும் ஏதாச்சும் கேம் விளையாடிட்டு இருப்பான். அது மட்டும் தான் எனக்கு தெரியும். அப்படி தான் அவன் பப்ஜினு ஏதோ கேம் விளையாடுறான்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா, சில வாரங்களுக்கு முன்னாடி நடுராத்திரி கனவுல புலம்புன வார்த்தைகள் எனக்கும், என் மனைவிக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துச்சு.

அப்பாவாவது… அம்மாவாவது…

அப்பாவாவது… அம்மாவாவது…

மணி 12, 1னு இருக்கும்னு நினைக்கிறன்... திடீர்னு எங்களுக்கு நடுவுல படுத்து தூங்கிட்டு இருந்த என் பையன் எழுந்து.. எனக்கு அப்பா அம்மா என்கூட பேசலன்னா கூட எந்த பிரச்னையும் இல்ல... ஆனா பப்ஜியில தோக்குறது மட்டும் தாங்கிக்க முடியாதுன்னு ஏதேதோ உளறிட்டு படுத்துட்டான். எனக்கும் என் மனைவிக்கும் இதக்கேட்டு ஒரு மாதிரி ஆயிடுச்சு.

தாங்க முடியல…

தாங்க முடியல…

என் மனைவி உடனே என் மகன தூக்கத்துல இருந்து எழுப்பி என்னடா ஆச்சுன்னு கேட்டா... இல்ல, இல்ல நீயும் எனக்கு முக்கியம் தான்னு உளறிட்டு திரும்பி படுத்துட்டான்.

விளையாட்டுன்னு நெனச்சது வினையா போச்சோனு தோணுது. அப்பறம் தான் சமீப காலமா எங்களுக்கும், என் மகனுக்கும் நடுவுல இருக்க உறவு பத்தி ஆராய ஆரம்பிச்சேன்.

டீம்மேட்!

டீம்மேட்!

முதல்ல என் டீம்ல இந்த பப்ஜி விளையாடுற பசங்க கிட்ட எல்லாம் கேட்டேன். ரியலிஸ்டிக் கேம்னு சொல்லிட்டு இவ்வளவு ரியாலா ஒரு கேம் வேணுமான்னு தான் எனக்கு தோணுச்சு. அவ்வளவு ஆக்ரோஷம், அடிக்ஷன்... எல்லாத்துக்கும் மேல, இதைவிட வேற எதுவுமே பெருசு இல்லன்னு நினைக்கிறாங்க.

வெறுப்பு?

வெறுப்பு?

என் டீம்மேட் ஒருத்தன்... பப்ஜி விளையாடும் போது அவனுக்கு ஏதாவது கால் வந்தா கால் பண்றவங்கள அப்படி திட்டுறான். ஒருத்தன் பொண்டாட்டி கால் பண்ணா கூட கட் பண்ணிவிடுறான். திருப்ப, திருப்ப கால் பண்ணா... ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றனு திட்டுறான், சண்டை போடுறான்... இதெல்லம் என்ன மாதிரியான அடிக்ஷன்?னு எனக்கு தெரியல.

மாற்றங்கள்!

மாற்றங்கள்!

இப்ப எல்லாம் அவனுக்குள்ள கோபம் அதிகமா வருது., முன்ன எல்லாம் நான் ஆபீசுவிட்டு வந்தா ஆசையா வந்து கட்டி பிடிச்சு விளையாடிட்டு இருந்தான். இப்ப எல்லாம் அவன்கிட்ட நிறைய மாற்றங்கள்... பேசுறதுல இருந்து பழகுறது வரைக்கும். இதுக்கெல்லாம் பப்ஜி மட்டும் தான் காரணாமானு எனக்கு தெரியல.

அவன் கூட இருந்து, அவன் என்ன பண்றான், ஏது பண்றான், அவனுக்கு ஒரு அப்பாவா பக்கத்துல இருந்து நான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் தவற்றிட்டேன்கிறதும் பெரிய தப்புன்னு மட்டும் தெரியுது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

real life story pubg creates negative impact in relationship

My 11YO Kid is addicted to PUBG. And I thought it is just game. But, Day by day Negativity and Aggressiveness increases in him. Few days back, in midnight my son blabbers that Playing PUBG is important than us. It really hurts me.
Desktop Bottom Promotion