Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
ஏ.எல்.விஜயக்கு ரெண்டாவது கல்யாணமாம்... பொண்ணு யார்னு தெரியுமா?
இயக்குனர் ஏ.எல். விஜய் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் பற்றி ஓரளவுக்கு நமக்குத் தெரியும் தான் என்றாலும் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். தன்னுடைய எல்லா படங்களிலும் ரசிகர்களின் மன உணர்வுகளைக் கிளறி விடுவது போல் காட்சிகள் இருக்கும்.

தன்னுடைய எல்லா படங்களையும் வெற்றிப் படங்களாகவும் தந்திருக்கிறார். அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏ.எல்.விஜய் பிறப்பு
தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஏ.அழகப்பன் அவர்களுடைய மகனாக 1979 ஆம் வருடம் பிறந்தார். தற்போது அவருக்கு வயது 40. இவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருடைய பெயர் உதயா. அவரும் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.

விளம்பரப் படங்கள்
திரைப்படத் துறையில் பெரும் ஆர்வம் கொண்ட விஜய் ஆரம்ப காலகட்டங்களில் விளம்பரப் படங்கள் எடுத்து வந்தார். கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை எடுத்திருக்கிறார். 2009 ஆம் அதற்காக சிறந்த கார்ப்பரேட் விளம்பர இயக்குநர் விருதைப் பெற்றார்.

திரைப்பட நுழைவு
2007 ஆம் ஆண்டு முதன் முதலில் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே யார் கூட தெரியுமா? நம்ம தல அஜித்த வெச்சு தான் பண்ணாரு.

இயக்கிய படங்கள்
கிரீடம் படத்தை அடுத்து பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். அதில் அத்தனை படங்களும் ஹிட்டை கொடுத்தது இவருக்கு.

காதலும் திருமணமும்
தெய்வத் திருமகள் படத்தை எடுத்துக் கொண்டிருந்த வேளையில் அதில் நடித்த அமலா பால் மீது இவருக்கு காதல் ஏற்பட்டது. பிறகு 2014 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து சில ஆண்டுகளில் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

ஜெ. வாழ்க்கைப்படம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப் படத்தை எடுக்க விரும்பி அதற்கான வேலையில் மிக பிஸியாக இருந்து வருகிறார் விஜய்.

சாய் பல்லவியுடன்
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, சாய் பல்லவியுடன் விஜய்க்கு காதல் இருப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் அது வதந்தி என்றும் அதில் உண்மையில்லை என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

2 வது திருமணம்
ஆனால் தற்போது விஜய்யே தன்னுடைய இரண்டாவது திருமணத்தைப் பற்றி அவரே சொல்லியிருக்கிறார்.
தான் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் ஒரு எம்பிபிஎஸ் டாக்டர் என்றும் அறிவித்திருக்கிறார். அவருடைய திருமணம் ஜூலை இரண்டாம் வாரத்தில் திருமணம் நடக்க இருக்கப் போவதாகவும் இது முழுக்க முழுக்க குடும்ப விழாவாக நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விஜய்.



Click it and Unblock the Notifications











