For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கணவருக்கோ மனைவிக்கோ வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

|

உறவு என்பது ஒரு அழகான பந்தம். இதில் ஏமாற்றம் வந்தால் கண்டிப்பாக சிக்கலாகி விடும். இந்த நவீன காலத்தில் கணவனும் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், பழகுகிறோம். அப்படிப்பட்ட மனிதர்கள் அதோடு நின்றால் பரவாயில்லை உறவுக்குள் வரும் போது தான் ஏமாற்றமும் உறவில் நெரிசலும் உண்டாகிறது. சில பேர்கள் இந்த மாதிரியான உறவில் இருப்பதை தங்கள் மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள்.

5 Signs your partner might be cheating on you

என்ன தான் அவர்கள் உங்களிடமிருந்து மறைத்தாலும் அவருடைய சில நடவடிக்கைகள் அதை காட்டிக் கொடுத்திடம். உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்பதை சில செயல்களைக் கொண்டு நாம் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இதை அறிந்து கொண்டு செயல்படுவது உங்கள் எதிர்கால உறவிற்கு வழி வகுக்கும். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினசரி வேலையில் மாற்றம்

தினசரி வேலையில் மாற்றம்

கண்டிப்பாக கூடவே வாழும் உங்கள் துணையின் தினசரி வேலைகளை அறிந்து வைத்திருப்பீர்கள். தினசரி வேலைகளில் எதாவது மாற்றம் ஏற்பட்டால் கொஞ்சம் உஷாராக அவர்களை கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்களாக கூட இருக்கலாம்

MOST READ: தினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும்

வழக்கத்தை விட உங்கள் துணை கவனமாக செயல்படுதல்

வழக்கத்தை விட உங்கள் துணை கவனமாக செயல்படுதல்

புதியதாக ஒரு பொழுதுபோக்கை கையில் எடுத்தல்

உங்கள் இருவருக்கிடையே உரையாடல் குறைதல்

திடீரென்று தனியாக வெளியே செல்ல நினைத்தல்

முன்னாடியை விட அதிகமாக சண்டை இடுதல்

இப்படி அவர்களை அணுகாதவாறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ரெம்ப ரகசியமாக சில செயல்களை கையாள ஆரம்பிப்பார்கள்.

மொபைல் போன் செயல்கள்

மொபைல் போன் செயல்கள்

உங்கள் துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் அவரின் மொபைல் போன் நடத்தை மாறியிருக்கும். வழக்கத்தை விட அதிகமாக மொபைல் போன் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். மெசேஜ், சேட்டிங் இப்படி எல்லாவற்றிற்கும் பாஸ்வேர்ட் போட்டு மறைக்க முயல்வார்கள். வலைதளங்களில் அதிக நேரம் நேரத்தை செலவு செய்வார்கள். அவர்களுடைய போனை தொடும் போதெல்லாம் கத்த ஆரம்பிப்பார்கள்.

MOST READ: "நான் ஒரு ஏமாந்த கோழி" தன்னை பற்றி புட்டு புட்டு வைக்கும் கவர்ச்சிப்புயல் ஷகீலா

விருப்பமின்மை

விருப்பமின்மை

உங்களுடன் நேரம் செலவு செய்ய விரும்பமாட்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் கவனத்தில் வேறு ஒருவர் இருப்பது தான். முன்னாடி இருந்த மாதிரி உங்கள் உறவில் முழு ஈடுபாட்டை காட்ட மாட்டார்கள். உங்கள் தீர்மானங்களுக்கு உதவ மாட்டார்கள்.

தங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுதல்

தங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுதல்

அவர்களுடைய தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். முன்னாடி இருந்ததை விட தங்கள் ஆடைகளை அணிவதில் மெனக்கெடுவார்கள். பேஷன் மற்றும் பெர்மியூம் போன்றவற்றின் சைடு சாய ஆரம்பித்து விடுவார்கள்.

ஏமாற்றுவதை அறிந்தால் என்ன செய்ய வேண்டும்

ஏமாற்றுவதை அறிந்தால் என்ன செய்ய வேண்டும்

உங்கள் துணை உங்களை ஏமாற்றுவது உண்மை என தெரிந்து கொண்டால் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் மறுக்க வாய்ப்புள்ளது.

MOST READ: 40 வயதை தாண்டும் ஆண்கள் எந்த நோயும் அண்டாம இருக்க இந்த 5 பொருளையும் சாப்பிடணும்

இப்பொழுது சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம்

இப்பொழுது சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம்

உங்கள் துணையுடன் அமர்ந்து இது குறித்து பேசுங்கள். வாக்கு வாதமாக இல்லாமல் உங்கள் எதிர்காலத்தை பற்றிய ஒரு நிதானமான பேச்சுவார்த்தையாக இருக்கலாம்.

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இருவருக்கும் ஏற்றவகையில் ஒரு முடிவை எடுங்கள். முடிவை எடுப்பதற்கு முன் கவனமாக செயல்படுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Signs your partner might be cheating on you

here we are talking 5 Signs your partner might be cheating on you.
Story first published: Friday, January 11, 2019, 17:50 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more