For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் கணவருடன் சேர்ந்து முதல் கணவரை என்ன செய்கிறார் பாருங்கள்!

விபத்தினால் முற்றிலும் படுத்தபடுக்கையான கணவரை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் முதல் கணவரை என்ன செய்தார் என்று

By Staff
|

இங்கு மிகவும் புனிதத்தன்மையுடன் அணுகப்படும் ஓர் விஷயம் திருமணம், திருமணத்திற்கு பிறகு மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகித்து மனைவியை அடித்து துன்புறுத்தும் கணவர்களைப் பற்றிய கதையை நிறையவே கடந்து வந்திருப்போம்.

அதோடு, கள்ளக் காதலுக்காக தன்னுடைய கள்ளக் காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்யும் மனைவியின் கதையையும் கடந்து வந்திருப்போம். ஆக, திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு துணையைத் தேடிச் செல்வது என்பது மிகவும் தவறான ஓர் விஷயமாக கருதப்படுகிறது.

இங்கே முற்றிலும் மாறுபட்ட ஓர் கதையை கேட்கப் போகிறீர்கள், கணவனின் அனுமதியுடன் தன்னுடைய நீண்ட நாள் நண்பனை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் மனைவி அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று பார்த்தால் இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சீனாவைச் சேர்ந்த யக்‌ஷி க்சிபிங் கணவர் க்‌ஷூ க்‌ஷியானுடன் வசித்து வந்திருக்கிறார் 2002 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்து குடும்பத்தையே முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிட்டிருக்கிறது.

Image Courtesy

#2

#2

இவர்களுக்கு 1996 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது 97 ஆம் ஆண்டு மகள் பிறந்திருக்கிறாள் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து ஒரு மகனும் பிறந்திருக்கிறார்கள் மிகவும் சந்தோஷமாக நகர்ந்த இவர்களது வாழ்க்கை ஒர் விபத்து முடக்கும் என்று அவர்கள் சற்றும் எதிர்ப்பார்த்திற்க்கவில்லை.

Image Courtesy

#3

#3

க்‌ஷூ சீனாவின் ஷிக்குவான் நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய பாராங்கல் ஒன்று க்‌ஷூ மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைக்கப்பட்டது.

Image Courtesy

#4

#4

ஆனால் க்‌ஷூ படுத்த படுக்கையாகிவிட்டார். அவரால் எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாது. முற்றிலுமாக முடங்கிய நிலையில் வாழ்க்கையை நகர்த்த பெரும் சிரமப்பட்டார்கள். கணவரையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு யக்‌ஷி பணிக்குச் செல்ல ஆரம்பித்தார்.

Image Courtesy

#5

#5

எப்படியும் இன்னும் சில வருடங்களில் நான் இறந்து விடுவேன் என்று நினைத்த க்‌ஷூ மனைவியை இரண்டாவது திருமணம் செய்து கொள் நீயாவது சந்தோஷமாக இரு, என்னால் உனது சந்தோஷம் கெட்டுவிடக்கூடாது என்று சொல்கிறார். அதோடு விவாகரத்து கொடுக்கவும் தயாராக இருக்கிறார்.

Image Courtesy

#6

#6

ஆரம்பத்தில் யக்‌ஷி மறுத்துவிட தொடர்ந்து அவரை வற்புறுத்தி 2009 ஆம் ஆண்டு சம்மதிக்க வைக்கிறார். இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று கொள்கிறார்கள். இதன் பிறகு இன்னொரு திருமணம் செய்து கொள் உனக்கான வாழ்க்கையை நீ அமைத்துக் கொள் என்று மனைவியை மீண்டும் நச்சரிக்கத் துவங்குகிறார் க்‌ஷூ

Image Courtesy

#7

#7

ஒரு வழியாக யக்‌ஷியின் நீண்ட நாள் நண்பரும் உடன் பணியாற்றி வந்த லியூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். லியூவிற்கு யக்‌ஷியைப் பற்றிய முழு விவரங்களும் தெரியும்.

Image Courtesy

#8

#8

இதுவரை தன்னை பார்த்துக் கொண்ட மனைவி இன்னொருத்தனுக்கு சொந்தமாகிவிட்டாள் இனி நாம் என்ன செய்யப்போகிறோம், படுக்கையை விட்டு எழக்கூட முடியாத நான் எப்படி குழந்தைகளை காப்பாற்றவது முதலில் என்னை நானே எப்படி காப்பாற்றிக் கொள்ள முடியும். சுயமாக எழுந்து சாப்பிடக்கூட முடியாதே என்று மிகவும் வருத்தத்துடன் படுத்திருந்தார் க்‌ஷூ

Image Courtesy

#9

#9

புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் இதோ கிளம்பிடுவார்கள், அதோ கிளம்பிடுவார்கள் என்று நினைத்து படுத்திருந்த க்‌ஷூவிற்கு இரவு வரையில் அவர்கள் கிளம்பாதது ஆச்சரியமாய் இருந்து. கிளம்புங்கள் என்றும் சொல்ல முடியவில்லை, சரி எப்போது வேண்டுமானாலும் கிளம்பட்டும் என்று நினைத்துக் கொண்டார்.

Image Courtesy

#10

#10

பார்த்தால் வழக்கம் போல மனைவி கிட்சனில் உணவு தயாரிக்கிறார், குழந்தைகளுக்கு ஊட்டி விடுகிறார். க்‌ஷூ சாப்பிட வசதியாக பவுலில் சூப் கொண்டு வரப்படுகிறது. எப்போதும் மனைவியை தூக்கி உட்கார வைத்து ஊட்டி விடுவாள். இப்போது மனைவி சூப் கொண்டு மனைவியின் இரண்டாவது கணவன் லியு க்‌ஷூவை தூக்கி உட்கார வைக்கிறான்.

Image Courtesy

#11

#11

யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, மனைவி ஊட்ட முழுவதும் குடித்து முடிக்கிறார். எதிரில் மனைவி, தான் விழுந்து விடாதபடி அணைத்து பிடித்திருப்பது மனைவியின் இரண்டாவது கணவன், அவன் பிடித்திருப்பது ஒன்றும் மனைவியின் நண்பனையல்ல அவளது முதல் கணவனை.

Image Courtesy

#12

#12

சரி நாமே கேட்டுவிடலாம் என்று நினைத்து, நாளை எப்போது கிளம்பப்போகிறீர்கள் என்று கேட்க... யக்‌ஷி, இனி நாங்கள் எங்கும் போவதாய் இல்லை லியுவும் நானும் இங்கேயே இருக்கப் போகிறோம் என்கிறார். ஆம், நானும் யக்‌ஷியும் உங்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறோம். இதில் எனக்கும் சம்மதம் தான் என்று சொல்லிவிட்டார்.

க்‌ஷூ பல முறை மறுத்தும் யக்‌ஷியும் லியுவும் உறுதியாக இருந்து விட்டபடியால் க்‌ஷூவால் எதுவும் சொல்ல முடியவில்லை

Image Courtesy

#13

#13

2012 ஆம் ஆண்டு லியுவுக்கும் யக்‌ஷிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.இப்போது ஆறு பேருமே ஒரேவீட்டில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். காதலையும், திருமண பந்தத்தையும் வெறும் உணர்வுப்பூர்வமாக அணுகாமல் அன்பை உளப்பூர்வமாக உணர்ந்து வாழுகின்ற இந்த குடும்பத்திற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Women Divorce His Paralyzed Husband

Women Divorce His Paralyzed Husband
Story first published: Monday, March 19, 2018, 16:08 [IST]
Desktop Bottom Promotion