For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா ஆண்களுக்கும் பெண்களைப் பற்றி ஒரு மகா ஞானி எழுதிய கடிதம்... மிஸ்பண்ணாம படிங்க...

தான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது

|

தான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது. அந்த மனைவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் வலிகளை இங்கு எழுதுகிறேன். நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த பெண்களுக்கான கடிதம் இது.

relationship

சிலருக்கு இந்த கடிதம் கொடுமையான ஒன்றாக தோன்றலாம். ஆனால் அந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை.. இது அனைவருக்குமே தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனைவி

மனைவி

பெண் என்பவள் உங்களுடைய நிலமோ அல்லது உங்களுடைய வீரத்தை நீச்சல் அடித்து காட்ட ஆறோ இல்லை. அல்லது நீங்கள் தினமும் சாப்பிடும் உணவும் இல்லை. பெண் என்பவள் வெறும் மனைவி, சகோதரி அல்லது மகள் மட்டும் இல்லை. அவர்களும் வலி மற்றும் சந்தோஷங்கள் கொண்ட மனிதர்கள் தான். மகிழ்ச்சியாக இருப்பது அவர்களுடைய உரிமை.

சில ஆண்கள் தன்னுடைய மனைவி தனக்கு அடிமையாக இருக்க மட்டுமே பிறந்தவள் என்பது போல் நடத்துகிறார்கள். இரக்கமே இல்லாமல் அவர்களை நடுத்தெருவில் எரிக்கிறார்கள். வேடிக்கை பார்க்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் உதவி செய்ய ஒருவரும் முன்வருவதில்லை. கண்களில் நிறைந்த வெறியுடன் பூட்டிய அறையில் கேட்க ஆள் இல்லாத அப்பாவி பெண்களை அடிக்கிறீர்கள்.

இதற்காக தான் அவளை திருமணம் செய்தீர்களா? உங்களுடைய இரக்கமற்ற சாகசங்களை அவளிடம் காண்பிக்க... இனி அவள் உங்களுக்கு அடிமை இல்லை. இனி அவள் வாழ்ந்தால் பெருமையுடன் வாழ வேண்டும் அல்லது வீழ்ந்தாலும் வீர கர்ஜனையுடன் வீழ வேண்டும். அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நீங்கள் செய்யும் செயல்கள் இனி ஒரு போதும் அவளை கஷ்டப்படுத்த போவதில்லை.

எடை போடாதீர்கள்

எடை போடாதீர்கள்

முழுமையான அன்புடன், அழகிய ஆறுதலுடன் எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்பிக்கையில் அவள் உங்களை திருமணம் செய்கிறாள். ஆனால் நீங்கள் அவளுக்கு செய்தது என்ன?

அவளின் உணர்ச்சிகளை எடை போடுகிறீர்கள். உங்கள் சுய விருப்பத்திற்காக அவளின் இயல்பான குணங்களை மாற்ற வற்புறுத்துகிறீர்கள். அவள் செய்யும் எல்லா விஷயங்களிலும் குறை காணும் நோக்கில் நீங்கள் ஆராய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் அவள் செய்யும் விஷயங்களில் கூட குறை தேடி அவளை எளிதாக காயப்படுத்தி விடுகிறீர்கள். சந்தோஷத்திற்காக ஏங்க வைக்கிறீர்கள். அவள் கணவு கண்ட, உங்களுடன் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு தர, இந்த குறை காணும் போக்கை நீங்கள் கண்டிப்பாக விட வேண்டும். அன்பு காட்டி அன்பை அடையுங்கள் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்.

வற்புறுத்துதல் கூடாது

வற்புறுத்துதல் கூடாது

உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்டி வைக்க உங்கள் மனைவி ஒன்றும் பொம்மை கிடையாது. அவர்களின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பம் இருந்து, உங்கள் மனைவிக்கு இல்லை என்றால் கட்டாயப்படுத்த கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.

அவளுக்கு தேவையான இடைவெளி கொடுக்க வேண்டும். அவளுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வார்த்தைகளால் அவளை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களை போல் சுய விருப்பங்கள் கொண்ட சாதாரண மனுஷி தான் அவளும். உங்களுடைய கற்பனைகளை அவளின் மேல் திணிக்காதீர்கள். உங்களுடைய கற்பனைகள் நிறைவேற்ற அவளின் விருப்பமும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கெட்ட வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளால் தாக்குதல்

கெட்ட வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளால் தாக்குதல்

வார்த்தைகளாலும், உணர்ச்சிகளாலும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக தொல்லை கெடுப்பது மிகவும் அதிகரித்து உள்ளது. அவர்களை அடித்து உடல் ரீதியாக கஷ்டப்படுத்துவதை விட இது கொடுமையானது. உடல் ரீதியாக பெண்கள் அடையும் வலிகளை விட மனஉளைச்சல் மற்றும் இழிமானங்கள் அதிக வலிமிக்கது. காயப்பட்ட பெண்கள் திரும்ப திரும்ப என்ன செல்கிறார்கள் என்று தெரியுமா? தனிமைப்படுத்துதலும், மனரீதியாக அடையும் அவமானங்களுக்கு உடல் வலி எவ்வளவோ பரவாயில்லை என்று. உங்களை நம்பி திருமணம் செய்த மனைவியிடம், உங்கள் வாழ்வின் சரிபாதியாக நீங்கள் ஏற்று கொண்ட பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்வது நியாயமா?

உடல் ரீதியாக தாக்குதல்

உடல் ரீதியாக தாக்குதல்

நீண்ட காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் போன்று இதுவும் கடினமான தண்டனைக்குரியது. எந்த காரணத்திற்காகவும் உங்கள் மனைவியை நீங்கள் அடித்து துன்புறுத்துவதையோ அல்லது கொடுமைபடுத்துவதையோ ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. குடும்பத்தில் வன்முறை என்றாலே பெரும்பாலான மக்களுக்கு உடனே தோன்றுவது அடி உதை தான். மனரீதியாக பெண்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகளை விட இந்த மாதிரியான உடல் ரீதியாக துன்புறுத்துதல் வெளிப்படையானது என்பதால் இதை எளிதாக மறைக்க முடியாது. பெண்களை பலவீனப்படுத்தவும், உறவு முறைகளில் அதிகாரத்தை காட்டவும் இரக்கமின்றி இது நடத்தப்படுகிறது.

உறவு முறைகளில் உள்ள பிரச்சனைகள்

உறவு முறைகளில் உள்ள பிரச்சனைகள்

குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளை பற்றி பேசும் போது, உறவு முறைகளில் உள்ள மனிதர்களால் வரும் பிரச்சினையை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எல்லா பெண்களுக்குமே இந்த உறவுகளினால் வரும் பிரச்சினை குறித்த பயம் இருக்கும் என்பதை உங்களால மறுக்க முடியாது. திருமணம் அடைந்த பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினையே இந்த உறவுகள் தான். உங்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் தாய் உங்கள் மனைவியை துன்புறுத்தலாம். உங்கள் தாயின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் காரணமாக அவள் இந்த கொடுமைகளை உங்களிடம் கூறாமல் தன்னுள்ளே புதைத்து கொள்கிறாள். இனியாவது வலியோடு போராடும் அவள் வாழ்க்கைக்கு வசந்தம் தர முயற்சி செய்யுங்கள்.

பொருளாதார சுதந்திரம்

பொருளாதார சுதந்திரம்

குடும்பத்தை கவனித்து கொண்டு குடும்ப தலைவியாக இருப்பதாலே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான பிரச்சினைக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுயமாக சம்பாதிப்பதில்லை என்பதால் அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏன் அவள் சம்பாதிப்பதில்லை? குடும்ப கௌரவம் என்ற பெயரில் உங்கள் மருமகளையோ அல்லது மகளையோ நீங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை அதனால் தானே. கௌரவம் என்ற பெயரில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அடிமையாக இருப்பது அல்லது வலிகளை தனக்குள்ளே புதைத்து கொள்வது தான் நீங்கள் சொல்லும் கௌரவமா? உங்கள் மனைவி வலிகளோடு மட்டும் தான் வாழ வேண்டுமா? உங்கள் மனைவியை நீங்கள் வேலைக்கு செல்ல அனுமதிப்பதால் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வது மட்டுமில்லாமல் உங்கள் மனைவிக்கும் இது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும். அவளுக்கு தேவையான சுதந்திரத்தை அவளுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். சங்கிலியால் கட்டி போட்டது போல் அவள் வீட்டுக்குள்ளே அடைந்து இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுடன் வாழ வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் அவளுக்கு, வலிகளை கொடுக்காதீர்கள்.

உங்கள் மனைவி ஒன்றும் மெஷின் இல்லை.

உங்கள் மனைவி ஒன்றும் மெஷின் இல்லை.

உங்கள் குடும்பத்தின் வாரிசுகளை பெற்றெடுக்க மட்டுமே அவளை திருமணம் செய்தது போல் நடத்தாதீர்கள். அவள் அதுக்காக மட்டுமே இந்த பூமியில் பிறந்தது போல் நினைக்காதீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு அவள் முக்கியத்துவம் தருவது போல் அவளுடைய விருப்பத்துக்கு நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தை பெருக்கும் மெசின் அல்ல அவள். அவள் இதற்காக மட்டும் தான் உங்களை திருமணம் செய்தாலா? எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் பக்கபலமாக நிற்பீர்கள், ஈடு இணையில்லாத நேசத்தை அவள் மீது காண்பித்து அவளுடன் கோர்த்த கையை எப்போதும் விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மணம் செய்து உள்ளாள்.

ஈகோ பிரச்சனைகள்

ஈகோ பிரச்சனைகள்

நீங்களும் உங்கள் மனைவியும் வேலை செய்கிறீர்கள் உங்கள் மனைவி உங்களை விட சிறப்பாக செயலாற்றினால் அதை சரியான முறையில் எடுத்து கொள்ளுங்கள். ஈகோ என்ற பெயரில் அவள் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். உங்கள் துணை இருப்பதால் தான் அவளால் சாதிக்க முடிகிறது. அவள் வெற்றி என்பது உங்கள் வெற்றியும் தான் என புரிந்து கொண்டாடுங்கள்.

மேற்கூறிய இந்த விஷயத்தை கவனித்து கொண்டாலே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம்.

காதல்

காதல்

அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் இந்த அழகான திருமண பந்தத்தில், பெண்கள் அடையும் கஷ்டங்களையும் துயரங்களையும் நினைத்தால் உள்ளம் வலிக்கிறது. திருமண வாக்குறுதி கொடுத்து கோர்க்கும் அவள் கரங்களை கடைசி வரை விடாதீர்கள். உங்களின் அன்பில் அவளை திளைக்க செய்யுங்கள். அவள் உங்களின் மனைவி தான் ஆனால் அவளுக்கும் சுய விருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது அவள் கொண்ட நம்பிக்கைக்கும் காதலுக்கும் எப்போதும் உண்மையாக இருங்கள். வாழ்க்கையில் வசந்தங்கள் வளரட்டும்.

அதெல்லாம் சரி... இந்த கடிதத்தை எழுதிய ஞானி யாா என்றுதானே கேட்கிறீர்கள்?... எந்த ஆண்மகன் இப்படியொரு கடிதத்தை எழுதியிருநு்தாலும்அவர் ஞானி தானே!...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wives Are Not Properties You Own. An Open Letter To The Indian Men

This letter is to all those men who are responsible for the problems caused to their wives.
Story first published: Monday, May 7, 2018, 11:01 [IST]
Desktop Bottom Promotion