கருக்கலைப்புக்கு பின் உடலுறவில் ஈடுபடுகிறீர்களா? அப்போ கட்டாயம் இத தெரிஞ்சிக்கணும்.

Posted By: Vivek Sivanandam
Subscribe to Boldsky

அமெரிக்காவில், 2014 ஆண்டில் மட்டும் 6,50,000 க்கும் மேலான கருகலைப்புகள் (சமீபத்திய கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி) சட்டபூர்வமாக நடைபெற்ற நிலையில், கருக்கலைப்பு என்பது விலக்கப்பட்ட ஒன்று என, நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறிவருகிறது.

health

கருக்கலைப்பை பற்றியும், அதற்கு பின்பான காலத்தை பற்றியும் எண்ணற்ற தவறான தகவல்கள் உலாவருகின்றன. அத்துணை சந்தேகங்களுக்கும் விடை இதோ..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுறவு

உடலுறவு

எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? உடலுறவு கொள்வது ஆபத்தானதா? குழந்தை பிறப்பதை கட்டுபடுத்த வேண்டுமா? என பல கேள்விகளும் மிக அந்தரங்கமானவை. நெருங்கிய நண்பர்களிடம் கூட கேட்க முடியாதவை. அதனால் தான் வல்லுநர்களின் நேரிடையான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

அந்த கேள்விகளுக்கு பதில் கூறும் முன்பு, முதலில் 2 விதமான கருக்கலைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்வது அவசியம்.

CDC யின் அறிக்கை, பதிவு செய்யப்பட்ட கருகலைப்புகளில், மருந்து மூலம் செய்யும் கருகலைப்பு கால் பங்கு தான் என கூறுகிறது. மெஃபிபிரிஸ்டன் மற்றும் மிசோபிராஸ்டல் என்ற மருந்துகளை கலந்து பயன்படுத்துவதன் மூலம், இயற்கையான ப்ரோஜஸ்ட்ரோன் வெளியேற்றத்தை தடுத்து, கருப்பையில் இருந்து கருவை பிரிக்க செய்து மருந்து முறையில் கருகலைப்பு செய்யப்படுகிறது.

அறுவை சிகிச்சை மூலமான கருகலைப்பில், கர்ப்பபை வாயை திறந்து, கருப்பையில்லுள்ள கரு வெளியேற்றப்படும். "கர்ப்பப்பையின் வாய், பென்சில் முனையை விட குறுகலானது, ஆனால் அதை பென்சில் அகலத்திற்கு திறக்க நேரிடும்" என்கிறார், யாலே மருத்துவமனையின் பேராசிரியர் மேரி ஜேன் மின்கின்.

உடலுறவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

உடலுறவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

அது மருந்து மூலமோ அல்லது அறுவை சிகிச்சையோ! கருகலைப்பிற்கு பின் உடலுறவு கொள்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது,

2 வாரங்கள்

2 வாரங்கள்

உடனடியாக உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது

இரண்டு வாரம் வரை உடலுறவு கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். ஏனெனில், இருவிதமான கருகலைப்பு முறையிலும், இரத்தப்போக்கு மற்றும் தசைபிடிப்புகள் இருக்கும். எனவே, உடல்நிலை சீராக குறைந்தபட்சம் இரண்டு வாரம் தேவைப்படும்.

அறுவை சிகிச்சை முறையில், கர்ப்பப்பை வாய் நீட்டிக்கப்படுவதால் கூடுதலாக நோய் தொற்று அபாயமும் உள்ளது. " கோடிக்கணக்கான பாக்டீரியாக்கல் பிறப்புறுப்பு பகுதியில் இருப்பதால் நோய்தொற்று ஏற்படும், அதனால் கர்ப்பப்பை வாய் இயல்பு நிலையை அடையும் வரை கவனம் வேண்டும் "என்கிறார் மின்கின். எனவே, ஏதேனும் வலி, இரத்தப்போக்கு, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இரண்டு வாரத்தில் உடல்நிலை இயல்பாக இருந்தால் உடலுறவு கொள்ள தடையில்லை.

கருத்தடை சாதனங்கள்

கருத்தடை சாதனங்கள்

உடனடியாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும். கருகலைப்பு செய்தபின்பு, உடனடியாக கூட மீண்டும் கர்ப்பமடையலாம். "கருக்கலைப்பு செய்தவுடன் ஒரு மாதவிடாய் சுழற்சி முடிவடைவதால், 4வாரத்தில் அடுத்த மாதவிடாய் வரலாம்" என்கிறார் ஸ்டேன்ட் போர்டு மருத்துவர் லே மில்ஹெசர். எனவே, உடனடியாக கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

கருத்தடைக்கு காத்திருக்க தேவையில்லை

கருத்தடைக்கு காத்திருக்க தேவையில்லை

கருகலைப்பின் போதே கருத்தடைக்கான முன்னேற்பாடுகளையும் செய்துவிடலாம். " கருக்கலைப்பு செய்யும் மருத்துவரிடமே என்னவிதமான கருத்தடை முறையை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்க கூறலாம்" என்கிறார் மின்கின். அது மாத்திரையோ அல்லது பிற கருத்தடை முறையோ(IDU போன்றவை), முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

பிற முறைகளை பயன்படுத்தியும் கருவுற்றவர்களுக்கு , IDU முறை சிறந்ததாக இருக்கும் என்கிறார் மில்ஹெசர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

what you need to know about having sex after an abortion

Doctors officially recommend waiting two weeks after an abortion to have sex. Here's why: With both medical and surgical abortions, you’ll experience some bleeding and maybe some discomfort similar to cramps. Two weeks gives your bod a nice cushy window to get back to normal.