For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பொண்ணும் பையனும் பேசினா உங்களுக்கெல்லாம் என்னதாண்டா தோணும் My story #134

பெண்ணொருத்தி ஒரு ஆணுடன் சென்றாலே இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கான சாட்சியும் அதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்களும்

|

அடுத்த மாதம் திருமணம். இன்று ஊரிலிருந்து வந்தவர் ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஓரு கதையைச் சொன்னார். அந்தக் கதையிலிருந்தே அவரை நேசிக்கத் துவங்கிவிட்டேன். ஆம், இதுவரையிலும் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை இனி என் வாழ்க்கை எல்லாம் முடிந்தது இவர் எப்படிப்பட்டவராக இருக்கப்போகிறாரோ என்ற எண்ணற்ற ஏக்கங்களுடனும் வருத்தங்களுடனும் நாட்களை நகர்த்தினேன் .

ஆனால் அவர் அன்றைக்கு சொன்ன கதை வாழ்க்கைக்கான பாடமாக எடுத்துக் கொண்டதாலோ என்னவோ திருமணத்திற்கு முழு மனதுடன் தயாரானேன். இங்கே எல்லாருக்கும் திருமணங்கள் விரும்பியவர்களோடு.... விருப்பப்படி நடப்பதில்லை மாறாக பிறரது விருப்பங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகிறோம்.

What the Society thinks When You go with a guy.

இந்த திருமணமும் அப்படித்தான். பெற்றோர் விருப்பத்திற்காக என்று ஆரம்பித்து இதோ இங்கே வந்து நிற்கிறது. இப்போது என் வருங்கால கணவரை முழுவதுமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன். பெற்றோர் விருப்பத்திற்காக என்றால் உன் விருப்பம் என்ன? என்கிறீர்களா அந்தக் கதையையும் சொல்கிறேன் தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவரின் காதல் :

அவரின் காதல் :

இவர் கல்லூரி முடித்து வேலை பார்த்துக் கொண்டிருந்த போது தான், அதே அலுவலகத்தில் இண்ட்ர்ன்ஷிப் என்று சொல்லி சில மாணவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் ஒருத்தியாக வந்த நிலோஃபர் பார்த்ததும் இவருக்கு காதல். ஆனாலும் சொல்லத்தயக்கம். அவளுக்கு தொடர்ந்து நிறைய உதவிகளை செய்திருக்கிறார். அலுவலகத்தில் ப்ராஜெக்டுக்கு பெரும்பாலான வேலையை இவரே செய்து கொடுத்திருக்கிறார். இண்ட்ரன் வந்தவர்களில் இருவருக்கு பணியும் வழங்கப்பட்டிருக்கிறது. இவரின் தயவால் வேலை உறுதியான இருவரில் நிலோஃபரும் ஒருவர்.

என் காதல் :

என் காதல் :

நானும் ஆகாஷும் கல்லூரியிலிருந்தே நண்பர்கள். ஆனால் அவ்வளவாக நெருங்கிப் பழகியதில்லை. நிறைய விஷயங்களை சேர்ந்து பேச ஆரம்பித்தோம். இருவரும் சேர்ந்து சிறியதாக ஒரு பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம் என்றும் திட்டமிட்டோம்.

எங்களால் முதலீடாக பெரிய தொகையை இதில் போட முடியவில்லை. அதுவும் அப்போது தான் நாங்கள் கல்லூரி முடித்திருந்தோம். எந்த முன் அனுபவமும் கிடையாது. எங்களை நம்பி பெற்றோர் பெரிய தொகை எதுவும் கொடுக்க முன் வரவில்லை. எங்களுக்கு அப்போதிருந்த ஒரே வழி கடன்.

நானும் பார்ட்னர் :

நானும் பார்ட்னர் :

ஆகாஷின் நண்பனுக்கு கொடுக்கல் வாங்கல் மூலமாக அறிமுகமான நபர் என்று சொல்லி ஒரு சைக்கோ எங்களுக்கு அறிமுகமானான். ஆம், அவன் ஒரு சைக்கோ தான் ஆனால் அப்போது அது எங்களுக்கு தெரியவில்லை.

மிகவும் பவ்யமாக நடந்து கொண்டான், அலுவலகத்திற்கு வர வைத்து நாங்கள் ஸ்டார் செய்யப்போகிற பிஸ்னஸ் குறித்து விலாவரியாக கேட்டு தெரிந்து கொண்டான். அதற்கான விளம்பரங்கள், வியாபார யுக்திகள்,முதலீடுகள் குறித்து எல்லாம் எக்கச்சக்க ஐடியா கொடுத்தான். அப்பாட்டா.... எங்களை வழிநடத்த ஒரு காட்ஃபாதர் போல இவர் கிடைத்து விட்டார் என்று சந்தோஷப்பட்டோம்.

காதலைச் சொல்லிட வேண்டும் :

காதலைச் சொல்லிட வேண்டும் :

ஒரு கட்டத்தில் வருங்கால கணவரின் நண்பர்கள் நிலோஃபருடனான காதலை முகர்ந்து விட்டார்கள். என்ன அந்தப் பொண்ணு பக்கம் அடிக்கடி காத்து வீசுது போல.... என்று ஆரம்பிக்க, எப்படி விஷயத்தை என்று முழிக்க அவரின் நண்பன், நாளைக்கு எல்லாத்துக்கும் லீவு. காலையில வெளிய போகலாம்னு கூப்டு மொதோ வர்றாலான்னு பாரு....

அவ உன்னைய நம்பி வந்தான்னாலே பாதி ஓ.கேன்னு வச்சுக்கோ . அப்பறம் கொஞ்சம் கூட யோசிக்காம பட்டுனு விஷயத்த உடச்சுரு. என்ன முறைப்பாளுக நீயும் கொஞ்சம் வீராப்பா நின்னா ஆட்டோமெட்டிக்கா வந்துருவாங்க என்று சொல்லியிருக்கிறான்.

அதோடு அதை செய்யச் சொல்லி நிர்பந்தப் படுத்த அவருக்கு அதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்திருக்கிறது.

விருந்து :

விருந்து :

என்னையும் ஆகாஷையும் ஒரு நாள் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தான் அந்த சைக்கோ. அவரை நாங்கள் இருவருமே மிகவும் மரியாதையாக தான் நினைத்திருந்தோம்.

அப்பறம் எப்போ கல்யாணம்.... என்று பேச்சுவாக்கில் கேட்டுவிட்டார்.

இருவரும் ஒரு கணம் திடிக்கிட்டு முழிக்க... இல்ல சார் நாங்க ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ் என்றான் ஆகாஷ். இப்டி தான் வெளிய சொல்லிக்கிறது என்று சொல்லி பலமாக சிரித்துக் கொண்டே மிகவும் கேவலமான கமெண்ட் அடிக்க எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. சுருக்கென்று கோபம் தலைக்கெற அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

ஆண்களின் புத்தி :

ஆண்களின் புத்தி :

ச்சை.... எல்லா ஆண்களின் புத்தியும் இப்படித் தானே இருக்கிறது. யாரென்றே தெரியாத முன் பின் பழகாத பெண்ணிடமே இப்படி பேசலாம் என்று ஒரு ஆண் நினைக்கும் போது.... ஆகாஷுக்கு இந்த நினைப்பு வந்திருக்காதா என்ன? அப்போ ஆகாஷ் என்னுடன் தவறான எண்ணத்தில் தான் பழகிக் கொண்டிருக்கிறானா....

ஒரு பெண் தைரியமாக வெளியே வர வேண்டும் என்று நினைக்கும் போது அவளைச் சுற்றியிருக்கும் கூட்டம் குறிப்பாக ஆண்கள் கூட்டம் இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் செய்கிறது.

ஒன்று அவர்களை பறக்கவிடாமல் அவர்களின் சிறகுகளை முறிக்கிறது. இன்னொன்று உதவி செய்கிறேன் என்ற பெயரில் அந்த பறவையின் அணலில் குளிர்காய்கிறது. ஆக எப்படியோ அவள் நம்மை விட மேலே சென்று விடக்கூடாது என்பதாகத்தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

 உண்மைய சொல்லு :

உண்மைய சொல்லு :

இரண்டு நாட்கள் ஆகாஷுடன் பேசவேயில்லை. அன்றைக்கு க்ளைண்ட் மீட்டிங் இருப்பதாகவும் நமக்கு கிடைத்திருக்கிற முதல் ஆர்டர் என்பதால் வீண் வம்பு செய்யாமல் வந்து சேருமாறு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தான்.

கால் செய்தேன்.

நான் கோவிச்சுட்டு வந்தா திரும்பி என்னன்னு கேக்கமாட்டியா? அப்டியே போன்னு விட்ருவியா....

தேவையில்லாத விஷயத்துக்கு நீ கோச்சுட்டா நான் என்ன பண்ண முடியும்,

எது தேவையில்லாத விஷயம் ... இப்படியாக அந்த விவாதம் தொடங்கி சண்டையில் முடிந்தது. பின்னர் பிஸ்ன்ஸ் விஷயத்தை நினைவுக்கு கொண்டு வர சமாதானமானோம்.

உனக்கு அறிவில்லையா? :

உனக்கு அறிவில்லையா? :

அந்த க்ளைண்ட் உடனான சந்திப்பு முடிந்து இருவரும் பீச்சுக்கு போணும். நடுவில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பீச்சில் சென்று உட்கார்ந்து கடலையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஏய் லூசா நீ.... அந்தாள் எதோ உலரினான்றதுக்காக இப்டியா பண்ணுவ?

அவன் மேல இருக்குற கோபத்த எதுக்குடீ என் மேல காட்ற.... அவன் நமக்கு பத்துலட்சம் வரைக்கும் கொடுக்குறேன்னு சொல்லியிருந்தான், நம்ம சீக்கிரமாவே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணப் போறோம்னு நினச்சுட்டு இருக்குற நேரத்துல.....ச்ச

அப்போ அவன் பேசினது. அது தப்பில்லையா? கோபத்த கூட பொண்ணுங்க வெளிப்படுத்தக்கூடாதுல என்று கத்தினேன்.

குற்றவுணர்வு :

குற்றவுணர்வு :

என்ன பேசிட்டான், அவன் யாரு நம்மள சொல்றதுக்கு நம்ம எப்டி இருக்கோம் எப்டி பழகுறோம்னு நமக்கு தெரியாதா? யாரோ சொன்னான்னு நீ கோச்சுப்பியா.... சரி கோவப்படு வேணாம்னு சொல்லல.... உன்னோட கோபத்துக்கு மேல ஏன் நீயா மவுனத்த திணிச்சுக்குற... அங்கயே அந்த நிமிஷமே அவன் முன்னாடியே நாங்க எப்டி இருக்கோம்னு தெரியும்.... தேவையில்லாத விஷயத்துல மூக்க நுழைக்காதீங்கன்னு சொல்லியிருக்க வேண்டியது தான.

அந்த ஆளு அங்கயே ஆஃப் ஆகியிருப்பான். நீ அன்னக்கி செஞ்சதப் பாத்தா எதோ நீ பண்ண தப்ப ஒத்துக்கிட்ட மாதிரியும், அவன் கண்டுபிடிச்சு சொன்னதும் குற்றவுணர்சி தாங்காம எழுந்து வந்தமாதிரியும் இருக்கு.

மன்னிப்பு :

மன்னிப்பு :

அவன் சொன்ன வார்த்தைகள் என்னுள்ளே கேட்டுக்கொண்டேயிருந்தது. திரும்ப திரும்ப அன்று நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்டேயிருந்தேன். கோபத்தில் நிதானத்தை இழந்து என்ன காரியம் செய்து விட்டேன்.

ஆகாஷ் சொல்வதில் நியாயம் இருக்கிறது. சொன்ன மறுகணமே நான் பேசியிருக்க வேண்டும்.... நான் ஏன் அமைதியாக எழுந்து வந்து விட்டேன் என்று குழப்பமாய் இருந்தது அதை விட ஆகாஷ் மீது தான் தவறு என்று நினைத்து விட்டேனே என்று மிகவும் உறுத்தலாக இருந்தது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவனுக்கு போன் செய்தேன் எடுக்கவில்லை.

கிளம்பி அவன் வீட்டிற்கே சென்றுவிட்டேன். ஆளில்லை எங்கோ சென்றிருக்கிறான். பேச்சிலர் ரூமில் என்ன இருக்கப்போகிறது என்று நினைத்தானோ என்னவோ கதவை தாளிட்டிருந்தான் பூட்டவில்லை. நான் உள்ளே சென்று அவன் வீட்டில் காத்திருந்தேன்.

மன்னிப்பும் :

மன்னிப்பும் :

பார்த்தவன் திடுக்கிட்டான். லூசு சொல்லிட்டு வரமாட்டியா. இருட்டுல என்னடி பண்ற என்று கேட்டு லைட்டை ஆன் செய்தான்.

நினைத்தைச் சொன்னேன். அதோடு அவனிடம் மன்னிப்பும் கேட்டேன். மன்னிப்பு கேட்கிற போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. சரி ஏன் அழற இதுல என்ன இருக்கு நான் ஒண்ணும் நினைக்கல.... நீ சாரி கேக்கணும்னு கூட நினைக்கல எதோ தெரியாம பண்ணிட்ட கோவத்துல பண்ணதயெல்லாம் நான் மனசுலயே வச்சுக்கல என்று என்னை சமாதானப்படுத்தினான்.

முகம் வெளிப்பட்டது :

முகம் வெளிப்பட்டது :

அதன் பின்னர் அந்த சைக்கோவுடனான டீலிங் பேச்சுவார்த்தை எல்லாவற்றையும் ஆகாஷ் தான் கவனித்துக் கொண்டான். ஒருநாள் எங்கள் அலுவலகத்தில் ஆகாஷ் கலெஷனுக்காக சென்றிருந்த போது இந்த சைக்கோ வந்தான்.

அவனை வா என்று அழைப்பதா? உபசரிப்பதா எதுவும் புரியவில்லை. முழித்துக் கொண்டிருந்தேன். அவனாக என்ன மேடம் இன்னும் உங்க கோபம் போகலையா? ஆகாஷ்ட்ட நிறையவாட்டி உங்கள வந்து மீட் பண்ண சொன்னேனே.... அவன் சொல்லலயா அவன் நீ எதோ படிக்கப்போற ஊர விட்டு போய்ட்ட்னு சொன்னான் இங்க தான் இருக்கியா?

என்று தோலில் கை வைத்தான். கையை தட்டிவிட்டு..... வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினேன். நிலை குலைந்து கீழே சரிந்தான்.

மன்னித்து விடு ஆகாஷ் :

மன்னித்து விடு ஆகாஷ் :

அவனை உள்ளே வைத்து பூட்டி விட்டு நான் வெளியே ஓடி வந்து பக்கத்து கடைகளில் இருக்கும் ஆட்களை உதவிக்கு அழைத்தேன். அவர்கள் போலீசுக்கு அழைத்தார்கள். போலீஸ் வந்து கதவைத்திறந்து உள்ளேயிருந்த அந்த சைக்கோவை அடித்து இழுத்துச் சென்றது.

எல்லார் முன்னாலும் இப்படி அடித்து இழுத்து செல்ல வைத்து விட்டாள் என்று அவனுகு என் மீது பயங்கர கோபம். உன்னைய நாசமாக்காம விடமாட்டேண்டீ என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தான்.

ஆகாஷுக்கு இவ்வளவு கலேபரம் நடந்தது தெரிந்தால் என்ன சொல்வானோ.... என்று பயந்து கொண்டேயிருந்தேன். அவன் வருவதற்குள்ளாகவே தகவல் போயிருந்தது. பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான். கீழே விழுந்த பொருட்கள், கிழிந்து தொங்கிய திரைச்சீலைகளை பார்த்தபடி.... என்ன மேடம் ஸ்டண்ட் காமிச்சுட்டீங்க போல என்று சிரித்தான். சாரி என்று சிரிக்க....

இதெல்லாம் சாதரணம் டீ, இன்னும் எத்தனையோ பேர நீ ஃபேஸ் பண்ணனும் என்று அட்வைஸ் ஆரம்பிக்க நான் அவன் பேசுவதை வீடியோ எடுக்க ஆரம்பித்தேன்.

திருமணப் பேச்சு :

திருமணப் பேச்சு :

எனக்கு வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கப்பட்டது. நிச்சயத்திற்கு தேதி குறித்தவர்கள் திடீரென்று திருமணமே வேண்டாம் என்றார்கள். கேட்டதற்கு ஜாதகம் சரியில்லை என்றார்கள் அப்பா நம்பாமல் துருவி துருவிக் கேட்க நானும் ஆகாஷும் காதலித்துக் கொண்டிருப்பதாகவும் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர் வர்புறுத்தலில் இந்த திருமணம் நடப்பதாகவும் தங்களுக்கு மொட்டைக் கடுதாசி வந்ததாக சொன்னார்கள்.

திடுக்கிட்டுப் போனோம். அப்பாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அன்றைக்கு இரவு ஆகாசை அழைத்து அப்பாவிடம் பேசச் சொன்னேன்.

பிரிந்து விடுங்கள் :

பிரிந்து விடுங்கள் :

அப்பா ஒரே ஒரு வார்த்தையைத் தான் திரும்ப திரும்பச் சொன்னார். என் பொண்ணோட வாழ்க்கைய கெடுத்துறாத.... கஷ்டப்பட்டு கடன் வாங்கி இந்த கல்யாணத்த பண்றேன். இவளுக்கு அடுத்து இன்னொருத்தியும் நிக்கிறா அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்.

இந்த பிஸ்னஸ் கருமாந்தரம் எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிபட்டு வராது இதுவரைக்கும் பட்டதெல்லாம் போதும் நிச்சயம் பண்ணி திரும்பிட்டா அப்பறம் என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்குறதே கஷ்டம் என்று அவன் காலில் விழச் சென்றுவிட்டார்.

அவன் மறுப்பேச்சு ஏதும் பேசவில்லை எழுந்து சென்றுவிட்டான். அரைமணி நேரத்தில் வீட்டுக்கதவை தட்டினான். நான் தான் திறந்தேன். கையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை வைத்தான். இனி உனக்கும் இந்த பிஸ்னஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... நீ இன்வெஸ்ட் பண்ண மூணு லட்சம் இதுல இருக்கு. பிஸ்னஸ் மட்டுமில்ல உனக்கும் எனக்கும் கூட என்று சொல்லி விட்டு அழுதபடியே அங்கிருந்து நடந்து சென்றான். அரை மணி நேரத்தில் இந்த பணத்திற்கு எங்கே ஏற்பாடு செய்தான் எதை விற்றான் எதுவும் தெரியவில்லை.

விபத்து :

விபத்து :

அவர் நிலோஃபருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அவர் ஆரம்பித்த பீடிகையிலேயே நிலோஃபர் காதலைச் சொல்லத்தான் அழைக்கிறார் என்பதை யூகித்து விட்டாளாம். அவளும் வருகிறேன் என்று சொல்லிவிட்டாள்.

ஹோட்டலுக்கு வரச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் முன்னதாகவே இவர் போய் காத்திருந்திருக்கிறார். அவள் வந்தால் எப்படி உபசரிப்பது, எப்படி ஆரம்பிப்பது, எப்படி காதலைச் சொல்வது என திரும்ப திரும்ப தனக்குள்ளேயே தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டு முறை போன் செய்து வழி கேட்டு அவள் டூ வீலரில் வந்து கொண்டிருந்தாள். மேலே நான்காவது மாடி ஹோட்டலில் இருந்து இவர் நின்று பார்க்க நிலோஃபர் சொன்னபடியே சிக்னல் தாண்டி ஹோட்டல் வாசல் அருகில் வந்துவிட்டாள். இன்னும் சில விநாடிகளில் அவள் இங்கே வந்துவிடுவாள் என் காதலைச் சொல்லப்போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே டமார்.... என்றொருசத்தம். நிலோஃபர் வந்த வண்டி மீது ஒரு கார் மோதி விட்டது.

திருமணத்திற்கு சம்மதம் :

திருமணத்திற்கு சம்மதம் :

கூட்டம் கூடியது. ஒருவரும் நிலோஃபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று யோசிக்கவில்லை. இவர் தான் பதறியடித்துக் கொண்டு ஓடினார். ஒற்றை ஜீவனை பிடித்துக் கொண்டு நிலோஃபரின் உயிர் துடித்துக் கொண்டிருந்தது.

இவர் தூக்கி மோதின காரிலேயே வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் விதி இந்த காதலர்களை சேர்ந்து வாழ விடவில்லை. நிலோஃபரின் உயிரை தன் காதலனின் மடியிலிருந்தே போகுமாறு சபித்திருக்கிறது.

அவ போய்ட்டா..... லைஃப்னா என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடியே நாங்க பிரிஞ்சிட்டோம். அவளுக்கு கொடுக்க நினச்ச காதல் இன்னும் என் மனசுல அப்பிடியே இருக்கு உனக்காக.... மொட்டக்கடுதாசி.... அப்பா அம்மா எதையும் யோசிக்காத உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்னா சொல்லு இல்லன்னா என்று வாயெடுப்பதற்கு முன்பே சொன்னேன்... என்னுடைய காதலும் அப்படியே இருக்கிறது என்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What the Society thinks When You go with a guy.

What the Society thinks When You go with a guy.
Story first published: Monday, January 8, 2018, 16:26 [IST]
Desktop Bottom Promotion