For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவரின் முன்னால் காதல் தொடர்வதாக நினைத்த மனைவியின் அதிர்ச்சி செயல்! my story #258

|

வாழ்க்கையில் எல்லா நாட்களுமே நமக்கு ஏற்றபடியே இருக்கிறதா என்றால்... எல்லாரும் இல்லை என்று தான் சொல்வோம். நாம் எதிர்ப்பார்க்காத சம்பவங்கள் எல்லாம் வரிசையாக நடந்தேறும் ஆனால் அதனை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவம் தான் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.

இது நாம் வாழ வேண்டிய வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால் திருமணத்திற்கு பின்னால் தான் வாழ்க்கையே இருக்கிறது. திரைப்படங்களில் காட்டுவது போல திருமணம் என்பது முடிவாக இருப்பதில்லை பல திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சேர்ந்து விட்டாலே அது தான் இறுதி முடிவாக இருக்கும். இரண்டு மணி நேர திரைப்படத்திற்கு வேண்டுமானாலும் அது முடிவாக இருக்கலாம். ஆனால் அதையே நம் வாழ்க்கைக்கு பொறுத்திப் பார்த்தால் எப்படி?

சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும் என்று கடந்து செல்பவர்கள் கூட தடுமாறச் செய்திடும் அளவிற்கு திருமண வாழ்க்கையில் சில நேரங்களில் சிக்கல்கள் வரத்தான் செய்கிறது. இங்கே அப்படிப்பட்ட ஓர் சிக்கலையும் அந்த சிக்கலால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தான் இங்கே கொடுத்திருக்கிறோம் படித்து உங்கள் கருத்தையும் பதிவு செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணம் :

திருமணம் :

கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு முடித்த நாளிலிருந்து பெண் பார்க்கும் படலம் துவங்கி அடுத்த ஆறு மாதங்களில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. உனக்கு பிடித்திருக்கிறதா? உனக்கு இதில் சம்மதமா என்றெல்லாம் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.

அவளுக்கு என்ன தெரியும்....பெத்தவங்களா பாத்து நல்லது செய்யணும் என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்கள்.

நான் எதுவும் கேக்க மாட்டேன் :

நான் எதுவும் கேக்க மாட்டேன் :

ஒரு வாரம் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. எனக்கு பேச தயக்கம் இருப்பது போலவே அவருக்கும் இருக்கும் என்று நினைத்து விட்டுவிட்டேன். அதைவிட அப்படியான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்க்கவில்லை. ஊரில் உள்ள சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு விருந்துக்கு, கோவிலுக்கு என்றே நாட்கள் நகர்ந்திருந்தது.

ஒரு வாரத்திற்கு பின்னர் இருவரும் தனியாக பேசும் சந்தர்ப்பம் வாய்த்தது. அப்போதும் அறைக்குள் போய் ஒளிந்து கொள்ளத் தான் நினைத்தேன். அவர் தான் அழைத்து அருகில் உட்காரச் சொன்னார்.

நீ போய்டு :

நீ போய்டு :

உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா? உன்னக்கு என்னைய பிடிச்சிருக்கா? இப்படி கேள்விகள் கேட்டார். இரண்டு முறை அழுத்தி கேட்ட பிறகு ம்ம்ம் என்று மட்டும் பதில் வந்தது. சரி நீ எதுவும் பேசுற மாதிரி தெரியல நான் சொல்றதையாவது கேளு....

எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல, வீட்ல எல்லாரும் ரொம்ப வர்புறுத்தினனால தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். இன்னொரு விஷயம் சொல்லணும்னா நான் ஊர்ல ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவங்க வேற சமூகம்ன்றனால தான்... என்று நிறுத்தினார்.

இனி வேற வழியில்லை :

இனி வேற வழியில்லை :

பதிலேதும் சொல்லத் தெரியவில்லை. ஏற்கனவே திருமணம் என்ற மாயை குறித்த சரியான புரிதல் இல்லாமல் இது தான் வாழ்க்கையா என்று மிரட்சியில் இருந்த நேரத்தில் அவர் சொன்ன இந்த வார்த்தைகள் எல்லாம் என் மனதில் இடியாய் இறங்கியது.

அழக்கூட முடியவில்லை. அப்போ நான் போய்டவா என்று கேட்டேன்.... இப்போது நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது. ஊரைக்கூட்டி பெற்றோர் தேடி கட்டி வைத்த மாப்பிள்ளையிடம் நான் முதன் முதலாக கேட்டது இது தான்.

அவர் யோசிக்கவில்லை உன் இஷ்டம் என்று சொல்லி எழுந்து சென்று விட்டார். விஷயம் பெற்றோருக்கு சொல்லவே கிளம்பி வந்தார்கள். வழக்கமான பஞ்சாயத்து இருவருக்கும் மாறி மாறி அட்வைஸ் செய்தார்கள் எல்லாருக்கும் நினச்ச வாழ்க்கை அமையிரதில்ல என்று தங்களுக்கு இஷ்டம் போல எதேதோ சொன்னார்கள்.

குழந்தை :

குழந்தை :

எங்கள் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் உரிமை எனக்கு வழங்கப்படவில்லை. அவருக்கும் அவருடைய காதலிக்கும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தது. காதலி வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு இருந்ததால் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஊரை விட்டுச் சென்றோம். அங்கே வேலை எல்லாம் இனி தன தேடி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த சூழலை மறக்க வேண்டும் என்பதற்காக எங்கள் குடும்பத்தார் தான் இந்த ஏற்பாடு செய்திருந்தார்கள். வாழ்க்கை ஓடத்துவங்கியது. எங்களுக்கு ஓர் மகள் பிறந்தாள்.

என்ன யோசிப்ப :

என்ன யோசிப்ப :

திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தது. மகளுக்கு நாங்கள் அன்பான பெற்றோராக இருக்கிறோமா என்றெல்லாம் தெரியவில்லை என்னுடைய பயத்தை அவளுக்கு கடத்தி விட்டிருக்கிறேன் என்று மட்டும் தெளிவாக எனக்கு உணர்த்தியது அந்த இரவு.

தனியாய் சோஃபாவில் உட்கார்ந்திருந்த மகளிடம் பாப்பா என்ன யோசிக்கிறீங்க என்று கேட்டேன். அம்மா நீ போய்ட்டா நான் எங்க போவேன் என்று கேட்டால்? முதலில் அவள் கேட்பதன் அர்த்தம் விளங்கவில்லை. நீண்ட நேரம் கழித்து தான் எனக்கு உரைத்தது.

கணவருடன் சேர்ந்து வாழத்துவங்கிய நாளிலிருந்து என் மனதில் எழுந்து கொண்டிருக்கும் கேள்வி இது.

ஊருக்கு போகணும் :

ஊருக்கு போகணும் :

அவரை நம்பி இங்க வந்துட்டோம். இப்போ திடீர்னு அவர் அந்த பொண்ணோட போய்ட்டா நான் எங்க போவேன்... என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. அதே கேள்வியை ஒர் குழந்தையும் கேட்கிறாள் என்றால் அவள் ஓர் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாகத்தானே நினைத்துக் கொண்டிருப்பாள்.

இதை நாம் மாற்ற வேண்டும். குழந்தையின் இந்த எண்ணத்தை மாற்றி அம்மா நம்மள விட்டு எங்கயும் போகமாட்டா அம்மா நம்மகூட தான் இருப்பா என்று அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று தோன்றியது. அவளுக்கு இது அவசியமோ இல்லையோ எனக்கு மிகவும் அவசியமாகப்பட்டது. குழந்தையின் பெயரைச் சொல்லி சொல்லியே பல நாள் என் சோகத்திலிருந்து மீண்டிருக்கிறேன்.

அன்றைக்கு இரவு கணவர் வீட்டிற்கு வந்ததும். நானும் பாப்பாவும் ஒரு வாரம் ஊருக்கு போய்ட்டு வரோம் என்றேன்.

இன்னும் மனசுல இருக்கா? :

இன்னும் மனசுல இருக்கா? :

அவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை. அங்கே எனக்கு இன்னொரு பயமும் இருந்தது. நான் ஊருக்குச் சென்ற நேரத்தில் இவர் தன் காதலியை அழைத்துக் கொண்டு வந்து விட்டால்.... அதெல்லாம் நடக்காது என்று நிச்சயம் சொல்ல முடியாது தானே...

இப்போது ஊருக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டோம் இனி என்ன செய்வது... மீண்டும் தவறு செய்கிறோமா என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்து என்னை குடைந்தது. பத்திரமா போய்ட்டு வா என்று அனுப்பி வைத்தார். நான் தான் ஊரிலிருந்தேன் ஆனால் என் மனம் முழுக்க கணவரின் வீட்டில் தான் இருந்தது. இந்நேரம் அவர் என்ன செய்து கொண்டிருப்பார் என்றே தோன்றியது. மூன்று வேலை தவறாமல் சாப்பிடுகிறேனோ இல்லையோ தவறாமல் போன் செய்தேன்.

அம்மா எங்க? :

அம்மா எங்க? :

கிட்டத்தட்ட பயித்தியம் பிடிப்பது போல இருந்தது. இதுக்கு எதுக்கு நீ புள்ளைய தூக்கிட்டு இங்க வரணும்... எங்கள பாக்கணும் போல இருக்குன்னு ஒரு போன் பண்ணியிருந்தா நாங்களே கிளம்பி வந்திருப்போம்ல என்றார் அப்பா. அவரை பிரிந்து வந்ததினால் அல்ல அவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார் என்ற பயத்தினால் தான் இந்த தவிப்பு என்று அவரிடம் சொல்லவுமா முடியும்?

திருமண வாழ்க்கை துவங்கியதிலிருந்து ஓர் மனப்போராட்டமாகவே தான் சென்று கொண்டிருக்கிறது. மனம் விட்டு பேச நானும் தயாராக இல்லை கேட்க அவரும் தயாராக இல்லை. எதோ நாட்கள் ஓடிக் கொண்டிருக்கிறது அதில் நாங்களும் கரைந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு வாரம் கடந்திருந்தது. ஊருக்கு எப்போ வர? நான் வரணுமா இல்ல நீயா வந்திடுவியா? டிக்கெட் போடவா என்று எந்த கேள்வியும் அவரிடமிருந்து வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் போன் கூட வரவில்லை.

என் வாழ்க்கை முடிந்தது :

என் வாழ்க்கை முடிந்தது :

நான் எப்போடா போவேன் என்று காத்திருந்திருப்பார். நான் சென்றதும் அவர் தனக்கான வாழ்க்கையை தேடிக் கொண்டார். என் மீதோ குழந்தை மீதோ அவருக்கு துளியும் விருப்பமில்லை அதனால் இன்னும் ஒரு போன் கூட எனக்கு செய்யவில்லை. வந்து அழைத்துச் செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

அதான் குழந்தையை இங்கே வந்து விட்டுவிட்டேனே... இனி குழந்தையை என் அம்மா அப்பாவே பார்த்து கொள்ளட்டும் நான் இல்லையென்றால் அவராவது விரும்பிய வாழ்க்கை வாழ்வார் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினேன். இந்த உலகத்தை விட்டு போய்விட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கியிருந்தது. குழந்தையைப் பற்றியோ அல்லது பெற்றோரைப் பற்றியோ எந்த சிந்தனையும் இல்லை. இப்படி சர்வ காலமும் தவிப்புடன் கடப்பதற்கு ஓரேயடியாய் போய் சேர்ந்துவிடலாம் என்று தோன்றியது.

நானும் வரேன் :

நானும் வரேன் :

யாரிடமும் குறிப்பாக கணவரிடம் கூட அதிகம் பேசாத நான் இங்கே வாழ்த் தகுதியே இல்லை என்று முடிவெடுத்துக்கொண்டேன். வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே உட்கார்ந்திருந்தேன். எதோ ஒரு தயக்கம். வருகிற ரயிலில் ஏறி எங்காவது சென்றுவிடலாமா அல்லது இதில் விழுந்து இறந்துவிடலாமா என்று யோசித்தேன். இனி என்ன வாழ வேண்டி கிடக்கு செத்ரலாம் என்று முடிவெடுத்து எழுந்து கொண்டேன்.

தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. அது சின்ன டவுன் என்பதால் சில நேரங்களில் தான் ரயில் நிற்கும். பெரும்பாலும் நிற்காது. வரப்போகிற ரயில் முன்னே பாய்ந்துவிட வேண்டியது தான் என்று முடிவெடுத்திருந்தேன்.

தயாராய் தண்டவாளத்திற்கு அருகில் போய் நின்று கொண்டேன். ரயில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கண்ணை இறுக்க மூடிக் கொண்டேன் குழந்தையின் முகம் வந்து வந்து மறைந்தது. ரயிலின் சத்தம் இன்னும் அதிகமாய் கேட்டது. பாயத் துணியும் போது என்னை உலுக்கியெடுத்தது போல ஓர் குரல்... என் பெயரை அழைத்தது. அந்த விநாடிக்குள் ரயில் என்னை கடந்து சென்று விட்டது.

கண்ணைத் திறந்தால் வந்து கொண்டிருக்கும் ரயிலின் கதவருகே கணவர் நின்று கொண்டிருக்கிறார். என்னைக் கடந்து வெகுதூரம் சென்று ரயில் நின்றது. அவர் தானா அல்லது அவர் அழைப்பது போல நானே கற்பனை செய்து கொண்டேனா என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே எதிர்திசையில் பார்த்தேன்.

இது கனவல்ல நிஜம், உண்மையிலேயே அங்கே என் கணவர் வந்து கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What happens When women knows her husband's past love

What happens When women knows her husband's past love
Story first published: Monday, May 28, 2018, 12:04 [IST]
Desktop Bottom Promotion