For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு இரவில் செய்த தவறுக்காக, வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் கண்ணீர் வடிக்கிறேன்... My Story #234

ஒரு இரவில் செய்த தவறுக்காக, வாழ்நாளின் எல்லா இரவுகளிலும் கண்ணீர் வடிக்கிறேன்... My Story #234

By Staff
|

பெண் பிறக்கும் போது 25% தான் பெண்ணாக இருக்கிறாள், பூப்பெய்தும் போது அது 50%, திருமணம் 75% என தாய்மை அடையும் போது தான் 100% ஒரு பெண் பெண்ணாகிறாள் என கூறுவார்கள். ஒவ்வொரு பெண்ணின் கனவு, எதிர்காலம், நம்பிக்கை அவர்களது பிள்ளைகள் தான்.

The Small Mistake I did in One Night, Makes Me Cry in All The Night!

எனக்கும் அந்த ஆசை இருந்தது. வரமும் கிடைத்தது. இந்த சமூகம் மற்றும் உலகறிந்த வரை எனக்கு இரண்டு குழந்தைகள். முதலாவது மகள் மற்றும் இரண்டாவது மகன். ஆனால், என்னைப் பொறுத்தவரை எனக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். முதலாவது குழந்தை என்ன பாலினம் என்று கூட எனக்கு தெரியாது. மனதை ரணமாக்கி கொண்டு கொலை செய்தேன்.

ஒரு இரவில் நான் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால்... இன்று ஒவ்வொரு இரவிலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க மாட்டேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கச்சிதம்!

கச்சிதம்!

என்னை பொறுத்த வரை ஒருவேலையை செய்ய வேண்டும் என்றால், அதை கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும். அரைகுறையாக செய்வதற்கு அந்த வேலையை பேசாமல், நன்கு செய்யத் தெரிந்தவர்களிடம் செய்து முடித்துக் கொள்ளலாம் என்றே நம்புபவள் நான்.

பள்ளி, கல்லூரி, வேலை இடம் என எல்லா இடத்திலும் எனக்கான தனித்துவமே என்னுள் இருக்கும் தலைமை ஏற்கும் குணமும், யாரிடம் எந்த வேலை கொடுக்க வேண்டும் என்ற அறிவும் தான் என எனது ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள் கூறியதுண்டு.

வேலை!

வேலை!

நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றி வந்தேன். அந்த நிறுவனத்தில் குறைந்த வயதில் டீம் லீடரான ஒருசிலரில் நானும் ஒருத்தி.

எப்போதுமே ஒரு நிறுவனத்தில் குறைந்த வருட அனுபவத்தில் யாராவது தலைமை பொறுப்புக்கு வந்தால் அவர்களை கட்டம்கட்டி தூக்க ஒரு கூட்டம் கழுகு போல வட்டமிடும். அதிலும், அந்த நபர் பெண் என்றால் கூறவே வேண்டாம். அவர்கள் கட்டும் முதல் கட்டம் அந்த பெண்ணுக்காக தான் இருக்கும்.

கவலையில்லை!

கவலையில்லை!

ஆனால், அவர்களை குறித்த கவலை எனக்கில்லை. எனது மேலதிகாரிகள் அனைவரும் என் மீது அதிக நம்பிக்கை மற்றும் தைரியம் வைத்திருந்தனர். ஆகையால், அவர்கள் கட்டிய கட்டம் எல்லாம் வீணாய் போனது.

என் வாழ்வில் அந்தந்த வயதில் என்னவெல்லாம் கடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கச்சிதமாக கிடைத்தன. அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. படிப்பிலும், வேலையிலும் அதிக கவனம் செலுத்திய காரணத்தால் நான் காதலிக்க மறந்துவிட்டேன்.

திருமணம்!

திருமணம்!

ஆகையால் என் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக நடந்தது. அன்பானவர், அழகானவர், என்னை போலவே எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற ஃபார்முலா கொண்டவர்.

எங்களுக்குள் பெரியதாக எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. அவரும் ஒரு பன்நாட்டு நிறுவனத்தில் மேலதிகாரியாக தான் பணிபுரிந்து வந்தார். ஆகையால், வேலை சார்ந்தும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

குழந்தை?

குழந்தை?

முதலிரவன்று அவர் என்னை எதற்கும் வற்புறுத்தவில்லை. எங்களுக்குள் எப்போது ஒருசேர அந்த எண்ணம் வருகிறதோ, அன்றே முதலிரவு என்று மிகவும் முதிர்ச்சியுடன் கூறினார்.

ஆனால், குழந்தைக்கும் மட்டும் இரண்டு வருடம் கால அவகாசம் வேண்டும். என்னை தனியே நிறையே காதலிக்க வேண்டும், எனது காதலை நிறைய தனியாக பெற வேண்டும் என்று அவர் ஒரு கோரிக்கை முன் வைத்தார். அதை முழு மனதுடன் ஏற்றேன்.

பல இரவு...

பல இரவு...

பல முறை நாங்கள் கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்தி உறவுக் கொண்டோம். ஆணுறையை காட்டிலும் கருத்தடை மாத்திரையை தான் நாங்கள் அதிகம் நம்பினோம். அனைவருக்கும் தேனிலவு ஒருமுறை எனில் எங்களுக்கும் ஓரிரு மாதங்களுக்கு ஒருமுறை என அமைந்தது.

சில சமயம் நான் வேலை விஷயாமாக வெளியூர் சென்றால், அவர் விடுப்பு போட்டு என்னுடன் வருவார். அவர் சென்றால் நான் விடுப்பு போட்டு அவருடன் சென்றுவிடுவேன்.

ஒரு இரவு...

ஒரு இரவு...

எதிர்பாராத விதமாக நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ள மறந்த காரணத்தால் நான் கருவுற்றேன். ஏறத்தாழ இது ஒரு வருடம் கழித்தே என்பதால், எப்படியாவது அவரை சமாளித்து விடலாம் என்றே கருதினேன்.

ஆனால், என் கணவர் அடம் பிடிப்பார் என்றும், இதற்காக என்னோட கோபித்துக் கொள்வார் என்றும் நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்குள் அந்த ஒரு வருட இல்லறத்தில் அப்படி ஒரு சண்டை வந்ததில்லை.

அபார்ட்!

அபார்ட்!

அபார்ஷன் செய்துக் கொள்வதில் என்ன அப்படி ஒரு கவலை. இதெல்லாம் இப்போது மிகவும் சகஜம். நான் இரண்டு வருடம் கால அவகாசம் கேட்டேன் அல்லவா என்று ஏதேதோ பேசி கடைசியாக மூன்று மாத கருவை என்னை அபார்ட் செய்ய வைத்தார்.

என் கண் முன்னே அந்த சிசு கொலை நடந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடல் ரீதியான வலியை காட்டிலும், மன ரீதியான வலி அதிகமாக இருந்தது.

ஆண்களுக்கு தெரியாது...

ஆண்களுக்கு தெரியாது...

அபார்ஷன் செய்வதன் வலி ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, அது திருமணமானவர்கள் செய்வதாக இருந்தாலும் சரி, காதலிக்கும் போதே கருவுறும் பெண்கள் செய்வதாக இருந்தாலும் சரி. அது ஒரு கொலை. அந்த வகையில் நான் ஒரு கொலைகாரி என்ற எண்ணம் என்னுள் அதிகரிக்க துவங்கியது.

ஒருசில மாதங்கள் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. அதற்காக வருந்தினேன். சில மாதங்களில் மனத தேற்றிக் கொண்டாலும், ஒவ்வொரு இரவும் அந்த கொலை பற்றிய நினைவு வந்துக் கொண்டே இருக்கிறது.

இரண்டு குழந்தைகள்!

இரண்டு குழந்தைகள்!

அதற்கு அடுத்த வருடமே எங்களுக்கு முதல் குழந்தையாக ஒரு தேவதை பிறந்தாள். பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஒரு ஆண் மகன். என் கணவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆசைக்கு பெண் குழந்தை, ஆஸ்திக்கு ஆண் குழந்தை என்று கடவுள் அவருக்கு வரம் கொடுத்துள்ளதாக அனைவரிடமும் கூறி மகிழ்வார்.

என்னால் அதை முழுமனதுடன் மகிழ்ந்து ஏற்க முடியவில்லை. தாய்க்கு தலை பிள்ளை தான் பெரிது என்பார்கள். என் தலை பிள்ளையை தான் நான் கொன்று விட்டேனே.

வற்றாத நதியாக...

வற்றாத நதியாக...

நான் என் தலை பிள்ளையை நினைத்து அழாத நாளில்லை. ஆரம்ப நாட்களில் எனக்கு ஆறுதல் கூறிய கணவர். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, இன்னும் ஏன் பைத்தியம் போல அதையே நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று கோபித்துக் கொள்கிறார்.

யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என அறிந்த எனக்கு, ஒரு உயிரை யார் எவ்வளவு வற்புறுத்தினாலும் கொல்ல கூடாது என்று மண்டைக்கு ஏறாமல் போனது எப்படி?

வற்றாத நதியாக கண்ணீர் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு இரவிலும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Small Mistake I did in One Night, Makes Me Cry in All The Night!

The Small Mistake I did in One Night, Makes Me Cry in All The Night!
Desktop Bottom Promotion