For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய மாப்பிள்ளை தான் வேணும்னு செய்ற தில்லுமுல்லு வேலைய பாருங்க! my story #259

|

டீக்கடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காய் தலீத் இளைஞர்களை வெட்டி கொலை செய்த சம்பவம் நேற்றிலிருந்து பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் சாதிய வன்மம் மேலோங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது உங்களது முட்டாள்தனமின்றி வேறு இல்லை.

தமிழகத்தை ஏன் இந்தியாவை தாண்டியும் கூட இந்த சாதிய படிநிலை அப்படியே இருக்கிறது என்பதற்கு இந்த கதை ஓர் உதாரணமாய் அமைந்திருக்கும். நேபாளத்திலும் தலீத் மக்கள் அதிபட்ச வன் கொடுமைகளை சந்தித்து வருகிறார்கள். இன்னமும் வீட்டிற்குள் வரக்கூடாது, பொது இடத்தில் தண்ணீர் பிடிக்கக்கூடாது, பள்ளியில் பிற குழந்தைகளுடன் உட்கார்ந்து படிக்கக்கூடாது என்று ஏகப்பட்ட விதிமுறைகள். இந்த ஏற்றதாழ்வுகளுக்கு நடுவில் இந்த இரண்டு சாதியினருக்கு இடையில் காதல் முளைத்தால்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Courtesy

ஒரே தோட்டத்தில் வேலை பார்க்கும் போது அவள் எனக்கு பழக்கமானாள். பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என் காதலைச் சொன்னேன். அவள் என்னிடம் பதிலேதும் சொல்லாமல் ஓடிவிட்டாள். பின்னர் நான்கைந்து நாட்கள் கடந்த பிறகு மீண்டும் காதலைச் சொன்னேன்.

முதலில் தயங்கியவள் பின் சம்மதித்தாள். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன், அவள் மேல்சாதி. அவள் என்னிடம் பேசினாள் என்பது தெரிந்தாலே ஊரில் பெரிய பிரச்சனையாகிவிடும் இந்நேரத்தில் காதலிக்கும் விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான்.

#2

#2

Image Courtesy

போன் எல்லாம் கிடையாது, யாருக்கும் தெரியாமல் எப்போதாவது சிரித்துக் கொள்வது, மிஞ்சிப் போனால் பத்துநிமிடங்கள் வரை பேச கிடைக்கும் நேரத்தில் தான் எங்கள் காதலை வளர்த்துக் கொண்டோம். அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். தீடிரென்று ஒருநாள் அவள் வீட்டிலிருந்து ஓடி வந்துவிட்டாள் ஒரு நாள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தன் உடமைகளுடன் என் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்.

என்னை நம்பி வந்துவிட்டாள் இனி என்ன செய்ய முடியும் வரும் பிரச்சனைகளை சந்தித்து தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்து நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம்.

#3

#3

Image Courtesy

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளது பெற்றோர் மற்றும் சகோதர்கள் அவள் இங்கே வந்திருப்பாள் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்து என் வீட்டிற்கு வந்து விட்டார்கள். வந்தவர்கள் என் அம்மா அப்பாவை மிரட்டியிருக்கிறார்கள். என் மகள் எங்கே எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி செய்திருப்பான் உன் மகன் இருக்குமிடத்தை சொல் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்.

#4

#4

Image Courtesy

நாங்கள் மூன்று நாட்கள் பயணித்து காத்மாண்டு வந்தடைந்திருந்தோம். எங்கள் வழக்கப்படி நெற்றியில் திலகமிட்டால் திருமணம் ஆனதாக அர்த்தம். உடனடியாக கோவிலுக்கு அழைத்துச் சென்று நெற்றியில் திலகமிட்டேன். போலீஸிடம் எல்லாம் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. நான்காவது நாள் எங்களை போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள்.

தாழ்த்தப்பட்டவனுடன் எப்படி வாழ்க்கையை நடத்துவாய்? இது உனக்கு அவமானமாக இல்லையா என்று அவளிடம் போலீசார் கேட்டார்கள். அவளோ, நான் இவரை காதலிக்கிறேன் இவருடன் தான் வாழ்வேன் என்று சொன்னால்.... ஆனால் அவளின் பெற்றோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை சிறையில் அடைத்தார். அவளை பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

#5

#5

Image Courtesy

வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவளுக்கு பயங்கரமான அடி உதை கிடைத்திருக்கிறது. அதோடு எங்கும் சென்று விடக்கூடாது என்பதற்காய் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து என்னை சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள்.

அவள் என்ன ஆனாள், உயிருடன் தான் இருக்கிறாளா என்று எதுவும் தெரியவில்லை ஊருக்கு வந்த பிறகு தான் அவள் வீட்டினர் என் வீட்டிற்கு வந்து மிரட்டியது எல்லாம் தெரிந்தது. அவளை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னை நம்பி வந்தவளை இப்படி விட்டுவிட்டேனே என்று பெரும் கவலையாக இருந்தது.

#6

#6

Image Courtesy

எங்கு செல்வது, யாரிடம் அவளைப் பற்றி விசாரிப்பது என்று எதுவும் தெரியவில்லை, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னை அவர்கள் வீட்டுப் பக்கம் கூட சேர்க்கமாட்டார்கள்... திடீரென்று ஒரு நாள் என் கண்ணெதிரே வந்து நின்றாள் அவள். சந்தோசத்தில் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. நான் இருந்த அறையில் பெரிய ஜன்னல் இருந்தது அதில் யாரும் கவனிக்காத நேரமாய் பார்த்து தப்பித்து வந்து விட்டேன் என்றாள். எப்படியும் பின்னாடியே வந்துவிடுவார்கள் என்று தெரியும். அதனால் அவசர அவசரமாக மீண்டும் நாங்கள் ஊரை விட்டு ஓடினோம்.

நினைத்தது போலவே வந்திருக்கிறார்கள். ஆனால் இம்முறை விஷய்ம் பெரும் விபரீதம் ஆனது.

#7

#7

Image Courtesy

வீட்டை விட்டு செல்லக்கூடாது என்பதற்காய் கட்டி வைத்த போதும் கூட ஓடிவிட்டாள் என்று சொல்லி மிகவும் கோபத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்தவர்கள். வீட்டை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இருக்கிற நான்கைந்து சாமான்களை அடித்து ஓடித்திருக்கிறார்கள். அதோடு அப்பா, அண்ணா மாமாவை அடித்து உதைத்திருக்கிறார்கள். என் மகள் வீட்டிற்கு வந்து சேரும் வரை உன் அம்மாவை விடமாட்டோம் என்று சொல்லி என்னுடைய அம்மாவிய வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டார்கள்.

வழியெங்கும் உன் மகன் எங்கே ? இருக்கும் இடத்தை சொல்லாவிட்டாள் உன்னை கொன்று விடுவோம் என்று அடித்துக் கொண்டே சென்றிருக்கிறார்கள்.

#8

#8

Image Courtesy

என் அம்மா வழியில் ஹோட்டல் தெரியவே பசிக்கிறது, சாப்பாடு வாங்கிக் கொடு சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். கார் நிறுத்தப்பட்டது. ஹோட்டலுக்கு அழைத்துச் என்று சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் தக்க சமயமாய் பார்த்து அவர்களிடமிருந்து தப்பித்து அருகிலிருந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டார்.

அவர்களும் பின்னாடியே பள்ளிவாசலுக்குள் நுழைந்து விட்டார்கள். பின்னர் அங்கிருந்தவர்கள் ரத்தம் சொட்ட, கிழிந்த ஆடையுடன் நிற்பதைக் கண்டு என்னவென்று விசாரித்தார்கள். விவரத்தை சொன்னதும் என் அம்மாவிற்கு ஆதரவாய் அவர்கள் அத்தனை பேரும் வந்தார்கள். இல்லையென்றால் என் அம்மாவை இன்று உயிருடன் பார்த்திருக்கவே முடியாது.

#9

#9

Image Courtesy

நாங்கள் என்று இல்லை எங்களைப் போல சாதி மாறி திருமணம் செய்து கொள்வதற்கு இங்கே பலத்த எதிர்ப்பு இருக்கிறது. சர்வ சாதரணமாக ஆணவக் கொலைகள் நடக்கும். அவளிடம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அவனிடம் பேசுவதே அவமானம், அதில் நீ அவனிடம் குடும்பம் வேறு நடத்தப் போகிறாயா... உனக்கு நல்ல மாப்பிள்ளையை இந்தியாவிலிருந்து அழைத்து வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியாவிற்கு திருமணம் செய்து கொண்டு போனால்தான் உனக்கு கௌரவம் எங்களுக்கும் பெருமை

#10

#10

Image Courtesy

இன்னும் பத்து நாட்களில் இந்திய மாப்பிள்ளை வந்து விடுவார் என்ற கட்டத்தில் தான் அவள் வீட்டிலிருந்தே வெளியேறியிருக்கிறாள். சரி கதைக்கு வருவோம். அங்கே கூட்டம் சேர்ந்துவிட்டதால் அவர்களால் என் அம்மாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதோடு விஷயம் எல்லாருக்கும் பரவ ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் அவளை நான் கடத்தி விட்டதாகவும் கொன்று விட்டதாக சந்தேகம் இருக்கிறது என்று சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

#11

#11

Image Courtesy

கோர்ட் எங்கள் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டது. எங்கள் இருவருக்கும் இருக்கிற ஓரே பயம், போலீஸ் நிலையத்தில் எங்களை பிரித்தது போல இங்கேயும் எங்களை பிரித்துவிடுவார்கள் என்பது தான். அவர்களிடம் பணமும், அதிகாரமும் இருக்கிறது. அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் கோர்ட்டுக்கு செல்லாமலும் தவிர்க்க முடியாது.

பல அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எங்கள் காதலுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். உங்களை பிரிக்க மாட்டார்கள் நாங்கள் இருக்கிறோம் என்று தைரியம் கொடுக்க நானும் அவளும் கோர்ட்டுக்கு கிளம்பினோம்.

#12

#12

Image Courtesy

கோர்ட் வாசலிலேயே அவளின் பெற்றோர் உறவினர்கள் பலரும் நின்றிருந்தார்கள். அவளின் அம்மா மட்டும் அவளிடம் வந்து, ஏன் இப்படி எங்கள் மானத்தை வாங்குகிறாய், ஒழுங்காக நாங்கள் சொல்வதைக்கேள்,இல்லையென்றால் நடப்பதே வேறு என்று சொல்லி நெற்றியில் இருந்த குங்குமத்தை அழிக்க வந்தார். அதற்குள் அவள் விலகவே லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுற்றியிருந்தவர்கள் தலையிட்டு எங்களை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார்கள்

இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உட்சபட்ச பயத்தில் உட்கார்ந்திருதோம். கோர்ட்டில் அவளிடம் இவன் உன்னை கடத்திச் சென்றானா என்று கேட்டார்கள்.

#13

#13

Image Courtesy

இவள் இல்லை, என்னுடைய முழு விருப்பத்தின் படி தான் சென்றேன் இருவரும் திருமணம் செய்திருக்கிறோம் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாள். அந்த நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றை அவளின் பெற்றோர் கையில் எடுத்தார்கள்.

என் மகளுக்கு இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லை இந்த திருமணம் செல்லாது என்றார்கள். நீதிபதி என்னிடம் உன் வயது என்ன என்றார் நான் 22 என்றேன். அவளிடம் கேட்டார்.... முதலில் பத்தொன்பது என்று சொன்னாள், பின் அவளுடைய அடையாளச் சான்றிதழில் இருக்கிற பிறந்த ஆண்டின் படி அவள் வயது 17 என்பது உறுதியானது.

#14

#14

Image Courtesy

கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது, இதுக்கே உங்களுக்கு தண்டை கிடைக்கும் தெரியுமா என்றார். பின்னர் அவள், இல்லை நான் என் காதலனுடன் செல்ல வேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொன்னேன், எனக்கு வீட்டினருடன் செல்ல விருப்பமில்லை நான் என் காதலனுடன் தான் செல்வேன் என்று கூறினாள். என்னிடம் இதில் உன் விருப்பம் என்ன என்று கேட்டார்கள். ஆமாம், நானும் அவளை காதலிக்கிறேன் அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்றேன்.

சரி, அவளுக்கு பதினெட்டு வயது முடியும் வரையும் அரசு காப்பகத்தில் இருக்கட்டும் என்று உத்தரவிட்டார். அவளுக்கு பதினெட்டு வயது ஆனதும் எங்களுக்கு ஆதரவளித்த சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story About Nepal Couples Who Married against their caste

Story About Nepal Couples Who Married against their caste
Story first published: Wednesday, May 30, 2018, 12:59 [IST]
Desktop Bottom Promotion