For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தந்தை பழிக்குப் பழியாக செய்த செயல்!

தன் மகள் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிக்கிறார் என்று தெரிந்த பெற்றோர் நிகழ்த்திய கொடூர தாக்குதல், அது ஏற்படுத்திய சர்ச்சைகள்.

|

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இஃப்தார் விருந்து சமீபத்தில் நடத்தியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இஃப்தார் விருந்து என்பது சாதரணமாக எல்லா இடங்களிலும் நடத்தப்படுகிறது தானே, ஆனால் இவருடையது மட்டும் எதனால் எல்லாரோலும் விவாதிக்கப்படுகிறது, அதிசயமாக பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த முழுக்கதையையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த வருடத்தின் நடந்த ஒர் ஆணவக் கொலையை டெல்லி மக்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். சாதி என்ற விஷம் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது, அது மனிதர்களின் உயிரை எவ்வளவு எளிதாக பறிக்கிறது என்பதை இந்த கதை உணர்த்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞன் அன்கிட் சக்‌ஷேனா. இவர் புகைப்படக்கலைஞர். இவரும் இருபது வயதுடைய சாசாதி என்ற பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். அன்கிட் இந்து, சாசாதி முஸ்லீம். பிரச்சனை இங்கிருந்தே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருவரும் சந்தித்துக் கொள்வதும், மொபைலில் சாட்டிங் என்று நாட்கள் ஒடியிருக்கிறது.

Image Courtesy

#2

#2

சாசாதியின் தம்பி பதினான்கு வயதுடைய சிறுவன், அக்கா சாசாதியின் போனில் யாரோ ஒர் இளைஞனிடம் சாட்டிங் செய்திருப்பதை பார்த்து விடுகிறார். அந்த இளைஞனை அக்கா காதலிக்கிறாள் என்பதையும் தெரிந்து கொள்கிறான். அந்த இளைஞன் வேறு மதத்தை சார்ந்தவன் என்பதையும் தெரிந்து கொண்டு நேராக அப்பாவிடம் சென்று முறையிடுகிறான்.

விஷயம் வீட்டினர் எல்லாருக்கும் தெரிந்து விட்டது.

Image Courtesy

#3

#3

சாசாதிக்கு திட்டு, அடி விழுகிறது, கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று சொன்னதோடு, வீட்டிலேயே அடைத்து வைக்கிறார்கள். உடனடியாக திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால் சாசாதி தான் அன்கிட்டைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.

இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவர்கள் இறுதியாக ஒர் முடிவுக்கு வருகிறார்கள்.

Image Courtesy

#4

#4

சாசாதியின் மாமா, அவனை கொன்றுவிடலாம் என்று யோசனையை முன் வைக்கிறார். அதற்கு சாசாதியின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒத்துழைக்கிறது.

இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த சாசாதி எப்படியாவது இந்த தகவலை தன் காதலனுக்கு தெரியப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறார்.ஆனால் அவர் நினைத்ததை விட வேகமாக சாசாதியின் குடும்பத்தினர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய தினமே சாசாதியின் குடும்பத்தினர் அன்கிட் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

Image Courtesy

#5

#5

வீட்டிற்குள்ளிருந்த அன்கிட்டை அடித்து தெருவிற்கு இழுத்து வந்திருக்கிறார்கள். காதல் விவகாரம் தானே வாருங்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லலாம் என்று அழைத்திருக்கிறார் அன்கிட் ஆனால் அவர்கள் எதுவும் கேட்காமல் அந்த இடத்திலேயே அன்கிட்டை கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த கொலையை செய்தது சாசாதியின் தந்தை. சத்தம் கேட்டு வெளியே வந்த அன்கிட்டின் தாய் தன் மகனை நான்கைந்து பேர் சேர்ந்து அடிப்பதைக் கண்டு பதற்றத்துடன் அவர்களை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சியபடி அருகில் வருகிறார்.

Image Courtesy

#6

#6

தாய்க்கும் அடி விழுகிறது. கத்தி, தன்னை விட்டுவிடும்படியும், மகனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லியும் கத்துகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, ஆனால் சாசாதியின் குடும்பத்தினர் எதையும் கண்டுகொள்ளவில்லை. அசிங்கமாக திட்டியபடி தாக்கியிருக்கிறார்கள்.

தந்தை யாஷ்பாலையும் தாக்கியிருக்கிறார்கள். அவர் இதய நோயாளி அவரை விட்டு விடுங்கள் என்று கெஞ்ச, உனக்கு ஒரு மகள் இருக்கிறாள் தானே எங்கே அவள் என்று கேட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#7

#7

அரை மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அன்கிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அன்கிட்டின் தாய்,தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்கள்.

பொது இடத்தில், அவ்வளவு கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அரங்கேற்றப்பட்ட இந்த சம்பவம் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. சாசாதியின் தாய், தந்தை, மாமா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். பதினான்கு வயதுடைய தம்பி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

Image Courtesy

#8

#8

இந்த காதல் விவகாரம் என்பதைத் தாண்டி இந்து முஸ்லீம் பிரச்சனையாக விஸ்வரூம் எடுத்தது. அன்கிட் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார் டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி.

குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபராக அன்கிட் இருந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு டெல்லி முதல்வராக இருக்கக்கூடிய அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

#9

#9

இது எதற்காக?ஆணவக் கொலை தாரளமாக செய்து கொள்ளுங்கள், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு கொடுத்து விடும் என்று சொல்வது போல அல்லவா இருக்கிறது. ஆணவக் கொலையே நடக்கக்கூடாது என்பதற்கு என்ன முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. பணத்தால் எல்லாவற்றையும் சரி கட்டலாம் என்று நினைப்பது பெரும் தவறு என்றும் விவாதிக்கப்படுகிறது.

#10

#10

பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட அன்கிட்டின் தந்தை யஷ்பால் தான் தற்போது இஃப்தார் விருந்து நடத்தியிருக்கிறார். முஸ்லீம் பெண்ணை காதலித்ததற்காக பெற்றோரின் கண் முன்னே அந்த பெண்ணின் குடும்பத்தினராலேயே கொலை செய்யப்பட்ட அன்கிட் நினைவாக தொண்டு நிறுவனத்தை துவக்கியவர் இந்த இஃப்தார் விருந்தினை நடத்தியிருக்கிறார்.

Image Courtesy

 #11

#11

மதத்தின் பெயரால் விலைமதிப்பு மிக்க மனித உயிர்களை பறித்தது போதும். இந்த இஃப்தார் விருந்து எந்த மதத்தின் பெயராலோ அல்லது, தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவோ நடத்தவில்லை. எல்லாரும் ஒன்று கூடுவோம். நாம் எல்லாரும் நண்பர்கள், ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தவே இந்த இஃப்தார் விருந்து.

இஃப்தார் விருந்து மட்டுமல்ல தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி,கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளும் கொண்டாடுவோம் என்கிறார் அன்கிட்டின் தந்தை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story About a Boy Who Killed By his girl friend family

Story About a Boy Who Killed By his girl friend family
Story first published: Tuesday, June 5, 2018, 12:56 [IST]
Desktop Bottom Promotion