சிறிய ஆண்குறி பிரச்சனையால், முழுத் திருப்தி அடையாத மனைவி - இரகசிய டைரி #006

Posted By: Staff
Subscribe to Boldsky

என் மனைவி எனது ஆண்குறி சிறியது என்று கருதுகிறார். அவருக்கு கல்லூரிக் காலத்தில் இருந்து ஆன்லைன் பார்ன் பார்க்கும் பழக்கம் இருப்பதை நான் அறிவேன். அவருக்கு பெரிய ஆண்குறி மீதான ஈர்ப்பு அதிகம். உறவில் அவர் திருப்தி ஏற்படுத்தும் என்று கருதும் ஆண்குறி அளவை விட எனது சிறியது என்று அவர் கருதிகிறார்.

ஒரு நாள் நான் படுக்கை அறையில் இருந்து உறங்கி எழும் போது, அவர் ஹாலில் யாரோ தோழியுடன் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. அப்போது, அவரது தோழியுடன் எனது ஆண்குறி அளவுக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அன்றிலிருந்து, அவரது தோழிகள் வரும் நிகழ்வுகளுக்கு நான் செல்வதே இல்லை. என் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆண்குறியை பெரிதாக்க நானும் எத்தனயோ முயற்சி செய்துவிட்டேன். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை.

இந்த பிரச்சனையால் எனது மனைவி, என்னை பிரிந்து சென்று விடுவாரோ என்று அச்சம் கொள்கிறேன். நான் என்ன செய்ய?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெறுப்படைகிறேன்!

வெறுப்படைகிறேன்!

முதலில் உங்கள் மனைவியை நினைத்துப் பார்க்கும் போது வெறுப்படைகிறேன். தங்கள் அந்தரங்க விஷயங்கள் குறித்து பெண்கள் தோழிகளுடன் விவாதிப்பது., சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது எல்லாம் இயல்பு. ஆனால், கணவனின் ஆண்குறி குறித்து பேசிக் கொள்வது வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பேசுங்கள்!

பேசுங்கள்!

முதலில் உங்கள் மனைவியிடம் இதுகுறித்து விவாதிக்க தயங்க வேண்டாம். மேலும், பார்ன் பார்க்கும் பழக்கம் உங்கள் மனைவிக்கு இருக்கிறது என்பதை கூறியுள்ளீர்கள்.

பார்ன் என்பது ஒரு மாயை. அதில் நாம் காண்பது எல்லாமே உண்மை அல்ல. மேலும், ஒவ்வொரு நாட்டின் ஆண்கள் மத்தியிலும், ஆண்குறி அளவு மாற்றம் இருப்பது இயல்பு.

ஆண்குறி!

ஆண்குறி!

இந்திய ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 5- 6 அங்குலம். ஆண்குறி ஆறு அங்குலம், ஏழு அங்குலம் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. காரணம், பெண்குறியானது நான்கு அங்குலம் வரை தான் ஏற்கும். அதற்கும் மேல் கடினமாக உறவில் ஈடுபடும் போது பெரிய ஆண்குறியானது அவர்களுக்கு மிகுந்த வலி தான் ஏற்படுத்தும். சில பெண்களே அதை அனுபவிக்கலாமே தவிர, அனைவராலும் அது இயலாத காரியம்.

மருத்துவர்!

மருத்துவர்!

ஒருவேளை நான்கு அங்குலத்திற்கும் குறைவான நீளம் இருக்கிறது எனில், நீங்கள் Sexologist எனப்படும் பாலியல் ஆய்வாளர் மருத்துவரை அணுகுங்கள். அவர், உங்கள் ஆண்குறி உடலுறவில் ஈடுபட, பெண்களை திருப்தி படுத்த போதுமானதாக இருக்கிறதா என்று கூறிவிடுவார்.

விறைப்பு!

விறைப்பு!

ஆண்குறியை யாராலும் பெரிதாக்க முடியாது. சில உணவுகள், சில பயிற்சிகள் செய்வதன் மூலம் விறைப்பு நிலையை சீராக்கலாம். சிலருக்கு விறைப்பு நிலையில் சில கோளாறுகள் இருக்கும் போது ஆண்குறி முழுமையாக விறைப்பு அடையாமல் போடலாம்.

பலன்!

பலன்!

அதனால், சில உணவுகள், பயிற்சிகள் செய்வதால் முழு விறைப்பு ஏற்படும். இப்படியாக வேண்டுமானால் ஆண்குறி பெரிதாகிறது என்று கருதிக் கொள்ளலாம். மற்றப்படி எந்த ஒரு உணவும், மருந்தும், பயிற்சியும் ஆண்குறி அளவை பெரிதாக்காது. எனவே, இத்தகைய முயற்சிகளை கைவிட்டுவிடுங்கள்.

தன்மானம்!

தன்மானம்!

நீங்கள் ஆண்குறி சிறியதாக இருப்பது குறித்து சங்கடமும், மனைவி பிரிந்துவிடுவாரா என்ற எண்ணம் தொந்தரவாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளீர். நீங்கள் உண்மையில் தொந்தரவாக நினைக்க வேண்டியது மனைவி பிரிவை பற்றி அல்ல. உங்கள் சுய மரியாதை குறித்து.

விதிவிலக்கல்ல!

விதிவிலக்கல்ல!

எப்படி ஆண்கள் அவர் மனைவி உடல் வாகு குறித்து அவர் நண்பர்களிடம் பேசுவது அநாகரீக செயலோ, அப்படி தான் உங்கள் மனைவி தோழியுடன் உங்கள் ஆண்குறி பற்றி பேசியதும் அநாகரீகமான செயல்.

எனவே, முதலில் உங்கள் மனைவியிடம் கலந்தாலோசிக்க தயங்க வேண்டாம். பின்விளைவுகள் பற்றி அஞ்சாமல். துணித்து பேசுங்கள். ஒருவேளை அவருக்கு செக்ஸ் தான் முக்கியம், ஆண்குறி அளவு தான் முக்கியம் என்றால், அவரை பிரிவதே மேல். உடலுறவுக்கு அப்பாற்பட்ட காதலும், இல்லற வாழ்வின் அங்கங்களும் எத்தனையோ உள்ளன.

மெய் காதல்!

மெய் காதல்!

மெய் (உண்மை) காதல் என்பது மெய் (உடல்) மட்டுமே விரும்பாது. உடலை கவர்ச்சி, இன்பம் தாண்டியது மன கவர்ச்சியும், இன்பமும். குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை அறிந்தும் தங்கள் துணையை பிரியாத ஆண், பெண் இருக்கிறார்கள்.

மேலும், வெறும் உடல் சுகம் மட்டும் தேடும் துணை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அவர்களால் உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து பயணித்து வர இயலாது.

முயற்சி!

முயற்சி!

எதற்கும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து நீங்கள் போதுமான உடல் திறனுடன் தான் இருக்கிறீர்கள் என்ற தகவல் கிடைத்துவிட்டால், உங்கள் மனைவியிடம் ஆண்குறி அளவும், பார்ன் மாயை குறித்தும் தயங்காமல் பேசுங்கள். அவர் இதை ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து இணைந்தே, இனிதே வாழுங்கள்.

நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும்!

நல்லதே நடக்கும். உங்கள் மனைவியிடம் இருக்கும் பார்ன் மீதான ஆர்வமும், ஆண்குறி மீதான ஈர்ப்பும், போதிய உண்மை நிலை குறித்த அறிவும் இல்லாததே இதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் மனம் திறந்து பேசினால், நிச்சயம் அவரிடம் ஒரு நல்ல மாற்றம் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Confession: My Penis is Small, I Bother About My Wife, If She Leave Me Because of This?

Secret Confession: My Penis is Small, I Bother About My Wife, If She Leave Me Because of This?