என் மனைவி மீதான ஈர்ப்பும், கவர்ச்சியும் இழந்துவிட்டேன் - இரகசிய டைரி #001

என் மனைவி மீதான ஈர்ப்பும், கவர்ச்சியும் இழந்துவிட்டேன் - இரகசிய டைரி #001

By Staff

என் மனைவியின் மீதான ஈர்ப்பு முற்றிலும் இழந்துவிட்டேன். எங்கள் இருவருக்கும் மத்தியிலான விரிசலின் ஆரம்பக் கட்டத்தில் நின்றுக் கொண்டிருக்கிறேன். எப்போது நாங்கள் பயணித்து வரும் படகின் விரிசல் அதிகரித்து உறவு நீரில் மூழ்கும் என்பது அறியவில்லை.

என்னைவிட வயதில் மூத்தவளாக இருந்த போதிலும், அவளது குணங்களை விரும்பி தான் திருமணம் செய்துக் கொண்டேன். அது மட்டுமே போதும் என்ற கருத்து என்னுள் ஆரம்பத்தில் வலிமையாக இருந்தது.

கடந்த ஓராண்டு காலமாக வாழ வேண்டுமே என்ற கட்டாயத்தின் பேரில் மட்டுமே இந்த திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறேன். நான் திங்கள் முதல் வெள்ளி வரை 9 - 5 அலுவலகம் சென்று வருபவன். அவள் ஈவ்னிங் ஷிப்ட் செல்வதாக இருந்தால் அன்றைய தினம் எனக்கு நிம்மதியாக படுகிறது. வார இறுதி நாட்களை எப்படியாவது கடத்துவிடுவேன்.

எங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனையே தாம்பத்தியம் தான். நாங்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு பல மாதங்கள் ஆகிறது. அவள் மீது ஈர்ப்பு குறைந்த பிறகு உடலுறவில் நாட்டம் குறைந்துவிட்டது. சில முறை முயற்சித்து பார்த்தேன். ஆனால், அது மன அழுத்தம் மட்டுமே தரவல்லதாய் அமைகிறது. இதை அவளும் அறிகிறாள்.

இதே கதை நீடித்தால் நிச்சயம் எங்களுக்குள் விவாகரத்து ஏற்படும். எனக்கு எங்கள் திருமண பந்தத்தை முறித்துக் கொள்ள விருப்பமில்லை. ஆனால், அதற்காக எங்கள் நாட்களை கொலை செய்யவும் விருப்பமில்லை. நான் மீண்டும் அவள் மீது ஈர்ப்பு கொள்ள வேண்டும். வெறும் உடலுறவுக்கு மட்டுமல்ல... எங்கள் மீத வாழ்க்கையை நிம்மதியாய் கழிக்க... அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்வு அவசியம்!

ஆராய்வு அவசியம்!

ஒரு உணவுப் பொருள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது அல்லது தொடர்ந்து ஒரு சில போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி தோற்றுக் கொண்டே இருக்கிறது எனில், நாம் அதற்காக அந்த உணவை அல்லது அந்த அணியை கலைத்துவிட போவதில்லை. அதற்கு மாறாக முதலில் ஆராய்ச்சி செய்வோம். ஆரம்பத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியமாக இருந்த உணவு திடீரென கேடு விளைவிக்க காரணம் என்ன? சிறந்து செயற்பட்டு வந்த அணி தொடர்ந்து தோல்வி அடைய காரணம் என்ன?

எனவே, முதலில் ஆராய்ச்சி முக்கியம்!

எதை இழந்தீர்கள்!

எதை இழந்தீர்கள்!

நிச்சயம் உங்கள் மனைவி மீது உங்களுக்கு ஆர்வம் குறைந்து போக வெறும் உடல்வாகு மட்டுமோ, அவருக்கு உங்களை விட வயது முதிர்ச்சி அதிகமாகிறது என்பதோ காரணமாக இருக்க முடியாது. திருமண பந்தத்தின் ஆரம்ப நாட்களில் நீங்கள் அதிகம் பெற்ற ஏதோ சிலவன இன்று உங்களுக்கு கிடைக்காமல் போயிருக்கலாம். உங்கள் இருவர் நடுவே பாலமாக, ஒரு பிணைப்பு ஏற்படுத்திய ஏதோ ஒன்றை இழந்திருப்பீர்கள் அதை கண்டுப் பிடியுங்கள்.

என்ன செய்கிறீர்கள்?

என்ன செய்கிறீர்கள்?

ஒருவேளை திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் எந்த ஒரு வேலையாக இருந்தாலும் நீங்கள் இருவரும் சேர்ந்தே செய்திருக்கலாம். அவருக்கு நீங்கள் அதிகம் உதவி இருக்கலாம். நீங்கள் அவருக்கு அதிகம் உதவி இருக்கலாம். காலப்போக்கில், அலுவலக அவசரகதி வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் சில விஷயங்கள் செய்ய மறந்திருக்கலாம். உங்கள் மனைவியும் கூட உங்களுக்காக செய்து வந்த சிலவற்றை மறந்து போயிருக்கலாம்.

மன அழுத்தம்!

மன அழுத்தம்!

நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது... கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு சென்று வருவது தெளிவாக தெரிகிறது. இன்றைய தம்பதிகளின் உறவில் அதிகம் விரிசல் ஏற்பட முக்கிய காரணமே அலுவலகம் சார்ந்த மன அழுத்தம் தான்.

நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்கு மத்தியில் சரியான நேரம் ஒதுக்காமல் இருந்திருக்கலாம். இருவருமே, ஒருவரை ஒருவர் முன்பு போல அவருக்கு தன் மீது ஈர்ப்பு இல்லை, அவர் மாறிவிட்டார் என்று மனதின் உள்ளே மட்டும் நினைத்துக் கொண்டு உறவில் வருத்ததுடன் நிலைத்திருக்கலாம்.

உங்களை மகிழ்வித்தவை என்ன?

உங்களை மகிழ்வித்தவை என்ன?

ஒவ்வொரு தம்பதி மத்தியிலும் ஒரு ஹை-பாயிண்ட் இருக்கும். அதாவது, அந்த ஒரு நிகழ்வு, பொருள், தருணம், இடம்... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நடந்தால், கண் முன் கிடைத்தால் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள்.

உதாரணமாக, சிலருக்கு பானிபூரி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். தங்களுக்குள் என்ன ஒரு சண்டை இருந்தாலும், பானிபூரி சாப்பிட்டால் மறந்துவிடுவார்கள். சிலர், தங்களுக்குள் என்ன கோபமாக இருந்தாலும், சில நினைவுகளை, ஏதேனும் பாடலை முணுமுணுத்தால் சண்டை மறந்து கட்டியணைத்துக் கொள்வார்கள்.

அப்படியாக உங்கள் உறவில் உங்கள் இருவருக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கிய ஹை-பாயிண்ட் இருந்திருக்கும். அது என்னவோ, அதை முயற்சி செய்து பாருங்கள் உங்கள் மனைவி மீது ஈர்ப்பு வரலாம்.

வெளியூர் பயணம்?

வெளியூர் பயணம்?

கடைசியாக பிக்னிக், கோவில், உறவினர் திருமணம் என்று ஏதேனும் காரணமாக நீங்கள் ஒன்றாக வெளியூர் சென்று வந்தது எப்போது?

சில நேரம் ஒரே இடத்தில் இருப்பதால், ஒரே மாதரியான நாட்களை கடத்தி வருவதால் கூட வாழ்வில், உறவில் தொய்வு காணப்படலாம். ஒருவேளை கடந்த ஓரிரு ஆண்டுகளில் நீங்கள் இருவரும் வேலையை மட்டும் தான் கட்டிக் கொண்டு அழுகிறோம், எங்களை கட்டிக்கொள்ள வில்லை என்றால். முதலில் ஒருவாரம் லீவ் போட்டுவிட்டு பயணத்தை ஏற்பாடு செய்யுங்கள்.

குழந்தை?

குழந்தை?

நீங்கள் கூறியதில்... உங்கள் மனைவி பற்றியும், அவருடனான மன ரீதியான, உடல் ரீதியான ஈர்ப்பின்மை குறித்து மட்டுமே கூறி இருந்தீர்கள். ஆகவே, உங்களுக்கு குழந்தைகள் இல்லை என்பதும். உங்களுக்கு திருமணமாகி அதிகபட்சம் மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

இன்று குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பதை ஃபேஷனாக கருதுகிறார்கள். குழந்தை என்பது வெறும் வம்சவிருத்தி மட்டுமல்ல, கணவன் - மனைவி உறவுக்கான ஒரு அச்சாணி. உங்கள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல். ஒரு புது உலகை உருவாக்கி அதில் வாழ்வது உங்களை வாழ்வின் முக்கிய நிலையை உணர செய்யும்.

அவரிடம் பேசினீர்களா?

அவரிடம் பேசினீர்களா?

உங்களுக்கு தன் மீது ஈர்ப்பு இல்லை என்பதை அறிந்தும் உங்கள் மனைவி எதுவும் பேசாமல், உங்களிடம் சண்டை இடாமல் இருக்கிறார் என்றால், அவர் வாழ்வில் அதைவிட பெரிய மன அழுத்தம் அல்லது பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம். அதுகுறித்து நீங்கள என்றாவது கலந்தாலோசித்தது உண்டா?

இல்லை, உங்களுக்குள் இருக்கும் அதே எண்ணம் அவருக்குள்ளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா?

முதலில் அவர் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கிறாரா? அவருக்குள் ஏதேனும் பிரச்சனை மனசஞ்சலம் இருக்கிறதா? என்று கண்டறியுங்கள்.

 தீர்வு?

தீர்வு?

உங்களுக்கு நீங்கள் செய்யும் வேலை போரடித்துவிட்டது என்று வேலை மாற்றம் செய்வதில்லை, நிறுவனம் / கம்பெனி மட்டுமே மாறுகிறீர்கள். அப்படி தான் காதலும், உறவும். உங்களுக்கு ஏதோ ஒரு விஷயம் போரடிக்கிறது. அதாவது நீங்கள் இப்போது பயணித்து வரும் சூழலில் தான் பிரச்சனையே தவிர உங்கள் இருவருக்குள் அல்ல.

மேலும், உங்களுக்கும் மனைவியை பிரிய மனமில்லை. ஈர்ப்பு, பிணைப்பு மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றே எண்ணுகிறீர்கள். நாம் மேலே கூறியுள்ளவற்றை முயற்சித்து பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் உறவு ஆரம்பக் காலத்தில் இருந்ததை போல, ஏன் அதைவிட அதிகமாகவே இன்பமயமாக திகழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion