For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்யாணமாகி 20 வருஷமாச்சு. ஆனா, எங்களுக்குள்ள இதுவரைக்கும் எதுவுமே நடக்கல... - My Story #320

By Staff
|

இப்படி ஒரு நிலைமை எந்த ஒரு பெண்ணுக்கும் வந்துவிட கூடாது என்று நான் வணங்கும் ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன். பிறந்ததில் இருந்து வாழ்க்கையில் கஷ்டம் என்று எதையும் நான் அனுபவித்தது கிடையாது.

கேட்க நினைப்பதை, அதற்கு முன்பே வாங்கிக் கொடுத்துவிடும் பெற்றோர். நான் விரும்புவதை எல்லாம், அந்த நொடியிலேயே நிறைவேற்றும் அண்ணன் என்று இளவரசி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவள் நான்.

Real Life Story: In The 20 Years of Marriage Life. We Never Had Intercourse

எனக்கும் என் அண்ணனுக்கும் ஏறத்தாழ 12 வயது வித்தியாசம். ஆகையால், அவனை அண்ணா என்று குறிப்பிடுவதை காட்டிலும், எனக்கு அவன் அப்பா மாதிரி என்று குறிப்பிடலாம். எனக்கு பிடிக்கவில்லை வேண்டாம் என்று கூறினால், என்னை எந்த வகையிலும் வற்புறுத்தாமல், என் வழியில் பயணிக்க சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர்.

எனக்கு காதல் மீது பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆகையால், என் 22வது வயதில் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிளையை திருமணம் செய்துக் கொண்டேன். அவரிடம் குறை என்று எதுவும் இல்லை.

அவர் என்னை கொடுமை செய்ததும் இல்லை. என் அப்பா, அண்ணாவை போலவே, நான் விரும்புவதை எல்லாம் நிறைவேற்றும் பாசமான கணவர். ஆனால், எங்கள் இருபது வருட இல்லற வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது ஒருமுறை கூட அடக்கவில்லை.

இதை விட பெரிய கொடுமை ஒன்று இருக்கிறதா? என கேட்கும் வகையிலான வாழ்க்கையை மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
42 வயது!

42 வயது!

எனக்கு இப்போது வயது 42. சில வாரங்களுக்கு முன்பு தான், எங்கள் இருபவதாவது திருமண நாளை விமர்சையாக உறவினர்களுடன் கொண்டாடினோம். மிகுதியான வாழ்த்துக்கள், பரிசுகள், பணம், ஆடம்பரம் என நிறைந்திருந்தாலும். பெண்கள் தங்கள் வாழ்வின் முழுமையாக கருதும் தாய்மையை நான் இதுநாள் வரை அடையவில்லை. இனிமேல், தாய்மை அடைவது என்பது மிக அரிதான காரியம்.

ஆரம்பத்தில்...

ஆரம்பத்தில்...

திருமணமான ஆரம்பத்தில் எனக்குமே கொஞ்சம் கூச்சம் இருந்தது. முன், பின் தெரியாத ஆளுடன் எப்படி? உடலுறவு சார்ந்த அச்சம் என நானுமே சிறிது அவகாசம் கேட்டிருந்தேன். எந்தவொரு தயக்கமும் இன்றி அவரும், பரவாயில்லை என்றார். அந்த கொஞ்ச கால அவகாசம் என்பது இரண்டு ஆண்டுகளை தாண்டியது. நானாக எப்படி போய் உடலுறவு கொள்ள கேட்பது என்ற கூச்சம் என்னை தடுத்துக் கொண்டே இருந்தது.

மறைமுகமாக...

மறைமுகமாக...

நேரடியாக கேட்க தானே கூச்சம் என்று மறைமுகமாக முயன்று பார்த்தேன். நெருக்கமாக உட்கார்வது, முத்தமிடுவது, ஏக்கமாக காண்பது... ஏன்! அவர் முன் வேண்டுமென்றே குளித்து முடித்து வந்து ஆடை உடுத்து நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன். ஆயினும், அவருக்கு என் மேல் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை. உடலுறவு மட்டும் தான் எங்களுக்குள் நடக்கவில்லையே தவிர, அவர் மிகவும் பாசமானவர். நல்லவர்.

மூன்று வருடங்கள்!

மூன்று வருடங்கள்!

அவர் என்னை தொட்டதே இல்லை என்றெல்லாம் நான் கூறவில்லை. நெருக்கமாக நாங்கள் இருந்திருக்கிறோம். ஆனால், அவர் உடலுறவை மட்டும் தவிர்த்து வந்தார். அவராகவும் அதற்காக எதையும் முன்னெடுக்கவில்லை, நான் மறைமுகமாக முன்னெடுப்பதையும் அவர் கண்டுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் நான் வெளிப்படையாக கேட்டும் பார்த்தேன். ஆனால், அவர் அதுக்கு செவி சாய்க்கவில்லை.

ஒருவேளை?!

ஒருவேளை?!

ஒருவேளை ஆரம்பத்தில் நான் கால அவகாசம் எடுத்துக் கொண்டதை தவறாக ஈடுத்துக் கொண்டு என்னை பழிவாங்குகிறாரா என்றும் கருதினேன். அதற்காக மன்னிப்பும் கேட்டேன்.

ஆனால், அதில் எல்லாம் அவருக்கு எந்த கோபமும் இல்லை. நீயாக கேட்காமல் இருந்திருந்தாலுமே கூட, நான் தவிர்த்திருப்பேன். எனக்கு உடலுறவில் நாட்டமில்லை. பெண்கள் தூய்மையானவர்கள். கோவிலை போன்றவர்கள். அவர்களை சுத்தம் செய்ய கூடாது என்று கூறினார்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான கருத்தியல் கொண்டிருக்கும் நபர் எதற்கு திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். என் வாழ்நாள் முழுக்க நான் இப்படியே இருந்திட வேண்டியது தானா என்ற அச்சம் எழும்பியது. நான் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தும், எனக்கான தீர்வு சுழியமாக தான் இருந்தது.

ஒருநாள்!

ஒருநாள்!

எத்தனை நாட்கள் தான் ஆசையை அடக்கிக் கொள்ள முடியும். நான் உடலுறவுக்கு அடிக்ட் எல்லாம் இல்லை. ஆனால், எந்தவொரு பெண்ணுக்கும் உறவுகொள்ள ஆசை இருப்பது ஒன்றும் தவறில்லையே. அப்போது எனக்கு வயது 27. நாங்கள் தங்கி இருந்த குடியிருப்பில் வசித்து வந்த ஒரு நபருடன் முதல் முறையாக உடலுறவுக் கொண்டேன். எங்களுக்குள் இருந்து ஒரு கவர்ச்சியின் பால் அந்த நிகழ்வு நடந்தது.

ஒரேமுறை தான்...

ஒரேமுறை தான்...

ஆனால், அது ஒரே ஒருமுறை தான் நடந்தது. அதன் பின், அவர் திருமணம் செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார். எனக்கும் அது உள்ளூர பெரிய தவறு செய்துவிட்ட குற்றவுணர்வை ஏற்படுத்திய காரணத்தால்.. இனிமேல், இப்படியான தவறை செய்திடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். ஆயினும், தாய்மை அடைய வேண்டும் என்ற எனக்குள் இருந்த ஏக்கம்... என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

தற்கொலை!

தற்கொலை!

என் இருபது வருட இல்லற வாழ்வில் ஐந்தாறு முறை தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஒருமுறை நான் தற்கொலைக்கு முயற்சியும் செய்தேன். ஆனால், இதனால் இரு குடும்பத்திற்கும் பெரிய அவமானம் ஏற்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட்டேன்.

மருத்துவர்கள்!

மருத்துவர்கள்!

நான் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் கருத்தரிக்கவில்லை என்ற காரணத்தால்... இருவீட்டார் உறவினர்களும் என்னை பல மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர்., சில மருந்துகளை பரிந்துரை செய்தனர். ஆனால், ஒருவர் கூட என் கணவரிடம் இதுக்குறித்து ஒரு முறை கூட பேசவில்லை. நானும், எங்கள் ப்ரைவேட் வாழ்க்கை குறித்து வெளியே சொல்ல விரும்பவில்லை.

உண்மையை....

உண்மையை....

எங்கள் இருபதாவது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே, அவரிடம் 27 வது வயதில் ஒருமுறை நான் வேறு ஒரு நபருடன் உடலுறவுக் கொண்டேன் என்ற உண்மையை கூறிவிட்டேன். அழுது கொண்டே இருந்த என்னை, கட்டியணைத்து, நான் உன்னை மன்னித்துவிட்டேன். இதை நினைத்து வறுத்தப் படாதே என்று ஆறுதல் கூறி சென்றார்.

மாற்றம்!

மாற்றம்!

ஆனால், மறு தினத்தில் இருந்தே அவர் என்னுடன் பழகுவதில் நிறைய மாற்றங்கள். கடந்த இரண்டு மாதமாக அவர் என்னுடன் மிகவும் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்து தான் பேசுகிறார், பழகுகிறார். ஒருவேளை நான் அசுத்தமானவள் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டாரோ என்று கருதுகிறேன்.

வலி!

வலி!

எங்கள் இருபது வருட வாழ்வில் என் மனதில் நிறைந்திருக்கும் வலி எத்தகையனது என்று எனக்கு மட்டுமே தெரியும். ஏறத்தாழ பத்தாண்டு காலம் விஷேசம் எதாச்சும் என்று யாராவது வாயை திறந்தாலே... கண்களில் கண்ணீர் அணை திறந்தது போல வந்துவிடும். இதில் பலமுறை மலடி படமும் பெற்றிருக்கிறேன். சிலர், சில நல்ல காரியங்களுக்கு என்னை அழைப்பதும் இல்லை, என் வாழ்த்தை எதிர்பார்ப்பதும் இல்லை.

20 வருடங்கள்!

20 வருடங்கள்!

எப்படியும் இன்னுமொரு நாலைந்து ஆண்டுகளுக்குள் மாதவிடாய் காலம் நின்றுவிடும். முதல் இருபது வரும் கேட்டதையும், கேட்காதையும் எனக்கு கொடுத்த ஆண்டவன். இரண்டாவது இருபது வருடங்களில் நான் கேட்ட ஒன்றே, ஒன்றை மட்டும் கொடுக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டான். இனி, அடுத்த கடைசி இருபது ஆண்டுகள் எப்படி நகரமோ என்ற அச்சத்தோடு வாழ்ந்து வருகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: In The 20 Years of Marriage Life. We Never Had Intercourse

Now, I am 42 year old woman. I have been married for 20 years now. My husband and I have had no sex in all these 20 years.
Story first published: Wednesday, November 7, 2018, 11:44 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more