For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்காவா? அக்கா கணவரா? இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289

அக்காவா? அக்கா கணவரா? இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289

By Staff
|

வாழ்க்கையில் எதிர்பாராத தருணங்கள் நிகழும் என்பார்கள். ஆனால், என் வாழ்வில் எதிராபாராத நிகழ்வுகள் மட்டுமே நிறைந்துக் காணப்படுகிறது. தற்சமயம் யாரை காப்பாற்றுவது, யார் பக்கம் துணை நிற்பது என்ற முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறேன்.

நான் திருமணமாகி சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வரும் பெண். ஆனால், திருமணத்திற்கு முன்பு எனக்கொரு காதல் உறவு இருந்தது. அது என கணவருக்கு இந்நாள் வரையிலும் தெரியாது.

திருமணத்திற்கு பிறகு கூறலாம் என நினைத்திருந்தாலும், அவரது மனோபாவம் மற்றும் குணாதியங்கள் அறிந்துக் கொண்ட பிறகு, நிச்சயம் அது என் திருமண வாழ்க்கையை பாதித்துவிடும் என்று அறிந்தமையால் கூறாமல் தவிர்த்து விட்டேன்.

எங்கள் வீட்டில் எனது அந்த காதல் உறவு குறித்து அறிந்த ஒரே ஆள் என் அக்கா மட்டும் தான்.

இன்று அவள் இல்லற வாழ்வில் ஒரு பிரச்சனை. அதற்கு உதவு முன்வந்தால்.. என் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்கா!

அக்கா!

நான் இப்போது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய். என் கணவர் மிகவும் பாசமானவர். என் அக்காவிற்கு திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது. அவளுக்கு நிச்சயமான போது, என் மாமா (அக்காவின் கணவர்) வீட்டில் நிறைய வரதட்சணை எதிர்பார்த்தனர். மாமாவிற்கு அதில் நாட்டம் இல்லை என்ற போதிலும், மாமனாருக்கு அதில் நாட்டம் அதிகம். கௌரவம், பெரிய குடும்பம், சாதியில் நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவே நிறைய வரதட்சணை கேட்டார்.

செய்தோம்!

செய்தோம்!

எங்கள் குடும்பமும் வசதியில் குறைந்தவர்கள் அல்ல. ஆகையால், அவர்கள் கேட்டதற்கு எந்த விதத்திலும் குறை வைக்காமல் வரதட்சணை கொடுத்து திருமணத்தை சிறப்பாக முடித்து வைத்தோம். திருமணத்திற்கு பிறகு மீண்டும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என்பதை உறவில் காவலராக பணிபுரியும் நபர் முன் வைத்து பேசி முடித்துக் கொண்டோம். அனைத்தும் சுமூகமாக தான் நடந்து முடிந்தது. அவளது (அக்கா) திருமண வாழ்வில் ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.

ஒன்பது ஆண்டுகள்!

ஒன்பது ஆண்டுகள்!

அக்காவுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஓராண்டு காலமாக அவர் எங்கள் வீட்டில், அப்பா, அம்மாவுடன் தான் தங்கி வருகிறார். மாமா மிகவும் நல்லவர். அவளை கண்களில் வைத்து பார்த்துக் கொண்டார். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார்.

ஆனால், பிரச்சனை செய்வதே என் அக்கா தான். அவள் வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். அவள் படிக்கும் புத்தகங்கள் தான் அவளது உலகம். அவளுக்கு வெளியே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவுகளும் கூட இல்லை.

இரண்டாவது முறை!

இரண்டாவது முறை!

ஏற்கனவே முன்னர் ஒருமுறை மாமனார் வீட்டில் கோபித்து கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தால். பிறகு, மாமா தான் கெஞ்சி, கூத்தாடி அழைத்து சென்றார். இப்போது மீண்டும் வந்திருக்கிறாள். ஒருசில வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரிவு ஓராண்டு காலத்தை தாண்டி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. நான் அறிந்த வரை என் மாமா மீது எந்த பிரச்சனையும், குறையும் இல்லை. இவர் தான் பிடிவாதம் பிடித்து பிரிந்து வாழ்கிறாள்.

பொய், புரட்டு!

பொய், புரட்டு!

என் அம்மா, அப்பாவுக்கு மகள் மீது தான் நம்பிக்கையும், பாசமும் அதிகம். அவள் சொல்வதை தான் தெய்வ வாக்கினை போல நம்புகிறார்கள். யாரும் இல்லாத போது விவாகரத்து வாங்குவது தான் திட்டம் என்று கூறும் என் அக்கா. அப்பா, அம்மா முன்னிலையில் அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாக போலியாக நடிக்கிறாள்.

அவளுக்கு தேவை எல்லாம் பணம் மட்டும் தான். அப்பா, அம்மா கடந்த ஓராண்டு காலமாக அவளுக்கு தேவையான பணத்தை மாதாமாதம் கொடுத்தாலுமே கூட. அவர்களுக்கே தெரியாமல் பணத்தை வீட்டில் இருந்து திருடுகிறாள்.

புகுந்த வீட்டில்..

புகுந்த வீட்டில்..

அவளுக்கு வசதியான வாழ்க்கை வாழ வேண்டும். நினைக்கும் போதெல்லாம் பணம் வேண்டும். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், தனக்கு பிறர் சேவகம் செய்ய வேண்டும் என்று கருதுகிறாள். புகுந்த வீட்டில் இவள் தனக்கான வேலையே செய்துக் கொள்ள முனைவதில்லை.

ஏன், அவள் கணவருக்கு இதுவரை சமைத்துப் போட்டதுக் கூட இல்லை. இவளது ஒரே வேண்டுகோள்... மாமா தனது சம்பளத்தை இவளிடம் கொடுத்துவிட வேண்டும். தனிக்குடித்தனம் சென்றுவிட வேண்டும். ஆனால், அதற்கு என் மாமா துளியும் ஒப்புக் கொள்ளவில்லை.

அறிவுரை!

அறிவுரை!

இவ்வளவு நல்ல கணவன் அமைந்தும், அவள் ஏன் தன் வாழ்கையை சீரழித்து கொள்கிறாள் என்ற கோபம் எனக்கு இருந்தது, இன்னுமும் இருக்கிறது. ஒரு நாள் அவளிடம் நேராக சென்று, இன்னும் நீ இப்படியே நடந்துக் கொண்டிருந்தாள், அம்மா, அப்பாவிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிடுவேன் (மாமா வீட்டில் நடப்பவை, எங்கள் வீட்டிலேயே இவள் திருடுவது அனைத்திற்கும் என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன). நான் மாமாவுக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று கூறினேன்.

மிரட்டல்!

மிரட்டல்!

நீ அப்படி யாராச்சும் கிட்ட இதப்பத்தி ஒரு வார்த்தை பேசினாலும், உன்னோட பாஸ்ட் லைப் பத்தி உன் புருஷன் கிட்ட சொல்லிடுவேன். அப்பறம் உன் வாழ்க்கை தான் நாசமா போகும். என்று என்னையே மிரட்டுகிறாள். நான் அவள் வாழ்க்கையை பாதுகாக்க, காப்பாற்ற முன் சென்றால். அவள் என் வாழ்க்கைக்கு ஒரு முடிவுக்கட்ட காத்திருக்கிறாள்.

இப்போது நான் மாமாவுக்கு உதவுவதா? இல்ல அக்கா பக்கம் நிற்பதா? என்று தெரியாமல் தவிக்கிறேன். இவளுக்கு உதவ சென்று, என் வாழ்க்கையை நானே அழித்துக் கொள்ள தயாராக இல்லை.

ஆனால், எப்படியாவது இவளை பற்றி அப்பா, அம்மாவிடம் கூற வேண்டும். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதை தடுக்க வேண்டும். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கதியில் இருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I Was Trapped in Between My Sister and Her Husbund.

Real Life Story: I Was Trapped in Between My Sister and Her Husbund. I do not know What it do, Whom I have to save. And surely I Know, If i make my support to my sister's husband. She will ruin my life. Because I had secret past life before my marriage. And she only knew about it.
Desktop Bottom Promotion