For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் வெறும் பிள்ளை பெற்றுப் போடும் மெஷினாக தான் இருக்கிறேன்... - My Story #296

நான் வெறும் பிள்ளை பெற்றுப் போடும் மெஷினாக தான் இருக்கிறேன்... - My Story #296

By Staff
|

எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து, என் பள்ளி காலங்களில் முதல் அல்லது இரண்டாவது ரேங் தவிர நாம் கீழே சென்றதே இல்லை. கல்லூரியிலும் 85% குறைவாக நான் மதிப்பெண் வாங்கியதே இல்லை. 2013-14 ஆண்டுகளில் எங்கள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் மிக சிலரே செலக்ட் ஆகி வேலை பெற்றனர். அதில் நானும் ஒருத்தி.

Real Life Story: I wanted to become an IT Professional. But, My Parents Spoiled It

சிலருக்கு தடகளம், விளையாட்டுகளில் ஆர்வம் நிறைய இருக்கும். சிலருக்கு ஆடல், பாடல், இசை, எழுத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எனக்கு படிப்பில் தான் ஆர்வம் அதிகம். பள்ளி முழுக்க தமிழ் மீடியத்தில் படித்தே வளர்ந்தவள். ஆனாலும், ஆங்கிலம் எனக்கு கொஞ்சம் சரளமாக வரும். ஆகையில், கல்லூரியில் ஆங்கில வழியில் படிப்பதில் எனக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை.

சிறு வயது முதலே என் சாப்ட்வேர் என்ஜினியர் ஆகவேண்டும் என்பது என் பெரும் கனவு. ஒரே இடத்தில் அடைப்பட்டு கிடக்க எனக்கு சுத்தமாக பிடிக்காது. ஆனால், இன்று என் கனவுகள் எல்லாம் சுக்குநூறாக உடைக்கப்பட்டு, நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு கிடக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3 இடியட்ஸ்.

3 இடியட்ஸ்.

பள்ளி காலம் முதலே என் நட்பு வட்டம் என்பது மிகவும் சிறியது. நான் எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பேன் என்பதால், சிலர் என்னை ஓரம்கட்டி வைத்துவிடுவார்கள். எனக்கு விளையாடுவதை காட்டிலும் புதியதாக எதையாவது படிப்பதில் தான் ஆர்வம் நிரம்பி இருந்தது. என்னை "நானாக" இந்த உலகில் ஏற்றுக் கொண்டே இரண்டே ஜீவன்கள் என் இரண்டு தோழிகள் தான். நாங்கள் மூவருமே மிடில்-கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

எங்கள் கனவு!

எங்கள் கனவு!

எங்கள் மூவரின் கனவும் வெவ்வேறு துறையை சேர்ந்தவை. எனக்கு ஐ.டி, ஒருத்தி தடகளத்தில் ஆர்வம் கொண்டிருந்தாள், இன்னொருத்தி வங்கி வேலையில் சேரவேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தாள். எங்கள் மூவரையும் ஒன்றிணைத்தது நாங்கள் தினமும் பயணிக்கும் அந்த பேருந்து தான். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நாங்கள் ஒரே பள்ளியில், ஒரு கிளாஸில் படித்து வந்தோம். கல்லூரி சென்ற பிறகும், திருமணமான பிறகும் கூட, எனக்கு சொல்லிக்கொள்ளும் படியான தோழிகள் அவர்கள் இருவரும் தான்.

வேலை!

வேலை!

கல்லூரி கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே வீட்டில் மாப்பிளை தேடும் படலம் ஆரம்பமாகிவிட்டது. அம்மாவிற்கு எப்படியாவது எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற ஆர்வம். உறவில் ஓரிருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால், என்னை கல்லூரிக்கு அனுப்பவே அச்சம் கொண்டிருந்தனர். அப்பாவின் சப்போர்ட் இருந்த ஒரே காரணத்தால் நான் கல்லூரி சென்றேன். அதிலும் ஒரு நிபந்தனை இருந்தது.

ஆட்டோ டிரைவர்!

ஆட்டோ டிரைவர்!

என் அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். சொந்தமாக மூன்று ஆட்டோக்கள் இருக்கிறது. இரண்டை வாடகைக்கு விட்டுள்ளார். எனக்கான நிபந்தனை என்னவெனில், கிண்டர் கார்டன் குழந்தை போல என்னை அப்பாவே தினமும் காலை ஆட்டோவில் வந்து கல்லூரியில் விட்டு, மாலை வந்து பிக்கப் செய்துக் கொள்வார். இந்த ஒப்பந்த்திற்கு கையெழுத்திட்ட பிறகே கல்லூரி வாசல் மிதிக்க சம்மதம் தெரிவித்தனர்.

முன்பே தெரியும்

முன்பே தெரியும்

உறவினர் சிலரின் தூண்டுதல் காரணத்தால் அம்மா எனக்கு கல்லூரின் கடைசி ஆண்டிலேயே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால், அப்பா எனக்கு கொஞ்சம் சப்போர்ட் செய்த ஒரே காரணத்தால் அதில் இருந்து தப்பித்தேன். இன்டர்வியூ நாளில் கூட அப்பா தான் என்னை கல்லூரிக்கு வந்து டிராப் செய்து, இரவு ரிசல்ட் வரும் வரை காத்திருந்த என்னை அழைத்து சென்றார். எப்படியாவது இந்த வேலை கிடைத்துவிட்டால், திருமணத்தை தள்ளிப்போட்டு, என் கனவில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்திருந்தேன்.

பூகம்பம்!

பூகம்பம்!

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வான மகிழ்ச்சி அந்த இரவு முடியும் வரை கூட நிலைக்கவில்லை. அப்பா தன்னால் முடிந்த வரை வீட்டில் பேசுகிறேன் என்று உறுதிமொழி அளித்தார். ஆனால், வீட்டில் அன்றிரவு ஒரு பூகம்பமே வெடித்தது. சென்னைக்கு என்னை வேலைக்கு அனுப்ப அமமவிற்கு துளியும் விருப்பம் இல்லை. இப்படி கல்லூரி முடித்து சென்னைக்கு வேலைக்கு சென்ற உறவினர் பெண்கள் தான் அங்கேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். நீயும் அதே திட்டமிடுகிறாய் என்று என் மீது அவநம்பிக்கையுடன் பேசினார்.

ஒருக்கட்டத்தில் அப்பாவினாலும் அம்மாவை எதிர்த்து பேச முடியாமல் போனது, ஒரு மூலையில் உட்கார்ந்துக் கொண்டு, நான் இறந்த பிறகு.. காரியம் செய்துவிட்டு அந்த வேலைக்கு போ என்று சபிக்க துவங்கினார். மனம் உடைந்து போனேன். வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு தலை அசைத்தேன்.

திருமண ஏற்பாடுகள்...

திருமண ஏற்பாடுகள்...

கல்லூரி கடைசி தேர்வு முடிந்து ஒரே வாரத்தில் நிச்சயம். அடுத்த மாதத்திலேயே திருமணம். வேலையில் ஜாயின் செய்வதற்கு அவர்கள் கொடுத்திருந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் குறித்திருந்த தேதியில் நான் கருத்தரித்து இருந்தேன். அம்மா ஆக போகிறேன் என்ற மகிழ்ச்சியை காட்டிலும், என் கனவுகள் மொத்தமும் நாசமாகிப் போனதே என்ற வேதனை மட்டுமே மனதில் நிறைந்திருந்து. பிறந்த வீடு, புகுந்த வீடு என அனைவருக்கும் மகிழ்ச்சி, என் ஒருத்தியை தவிர.

கருக்கலைப்பு!

கருக்கலைப்பு!

எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் ஒரு மகன். இதற்கு நடுவே புகுந்த வீட்டில் நடந்த ஒரு கொடுமையின் காரணத்தால், நானே எனது இரண்டாவது குழந்தயை அபார்ட் செய்துவிட்டேன். குடும்பத்தை பொறுத்தவரை அது தானாக கலைந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், என் தோழிகள் இருவரை தவிர வேறு யாருக்கும் அது நானாக கலைத்தது என்று தெரியாது.

ரணம்!

ரணம்!

தற்போது என் வாழ்வில் பண கஷ்டமோ, விரும்பியது கிடைப்பதில்லை என்ற நிலையோ இல்லை... கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கும் கணவர், செல்லமாக அடம்பிடித்தாலும் அதட்டினால் கேட்டுக்கொள்ளும் மகன். ஆனால், என் மனதில் 20 ஆண்டுகளாக சுமந்த கனவு என் கைகளில் இல்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே. அது போல தான். அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிய அன்று இரவு என் கைகளால் கழித்துப் போட வைத்தனர். என் பல ஆண்டு கனவு ஒரு இரவு கூட நீடிக்கவில்லை என்பது இன்றும் குறையாத ரணமாய் மனதில் நீடித்து இருக்கிறது.

அடுத்தது!

அடுத்தது!

இங்கே என் மனநிலை, உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த கவலை யாருக்கும் இல்லை. மகன் இருந்தாலும், வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி வேண்டும் என்ற விருப்பத்துடன், மாமனார், மாமியார், அப்பா, அம்மா காத்திருக்கிறார்கள். மனதில் 20 ஆண்டுகள் வளர்ந்த கரு சிதைந்து போன வடு இன்னும் காயவில்லை.

என் கணவர் பிஸ்னஸ் செய்பவர். ஆகையால், அவருக்கு தன் மனைவி வேலைக்கு சென்றால், அவமானம் என்று கருதுகிறார். பெற்றவர்களுக்கு பேரக் குழந்தைகள் கையில் வேண்டும். அவர்களை கொஞ்சி கொண்டு சந்தோசமாக இருப்பார்கள்.

இது தான் இலட்சியமா?

இது தான் இலட்சியமா?

ஆகமொத்தம் என்னை தவிர, பிற அனைவரும் சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கனவு என்ற ஒன்று இருக்கவே இருக்காதா? திருமணமும், குழந்தை பெற்றுக் கொள்வதும், அவர்களை வளர்க்க பாடுபடுவதும் தான் வாழ்க்கை என்று கருதுகிறார்களா? திருமணமும், குழந்தையும் அவசியம் தான். ஆனால், அதற்காக என் கனவுகளை எதற்கு நான் பலிக்கடாவாக அளிக்க வேண்டும். 20 வயதில் திருமணம் செய்துக் கொண்டு 24 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தயாராகிக் கொண்டிருப்பது தான் வாழ்க்கை இலட்சியமா?

பெண்கள் இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள், தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்கிரார்கள் என்பதெல்லாம் பொய். நூறில் பத்து, பதினைந்து பெண்கள் தான் அவர்களுக்கு விருப்பமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அதுவும் மாநகரங்களில். இன்றும்,டவுன், கிராம புறங்களுக்கு சென்று பாருங்கள். பெண்கள் பிள்ளை பெற்றுப் போடும் மெஷின்களாக தான் இருக்கிறார்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: I wanted to become an IT Professional. But, My Parents Spoiled It

Real Life Story: I wanted to become an IT Professional. But, My Parents Spoiled It
Story first published: Monday, August 20, 2018, 11:22 [IST]
Desktop Bottom Promotion