For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325

என் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325

By Staff
|

நான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் மொத்தம் ஏழு பேர். அப்பா, அம்மா, நான் மற்றும் மூத்த சகோதரன் ஒருவர், இளைய சகோதரர் மூவர். ஜாடையில் மட்டுமல்ல, குணத்திலும் நான் மட்டும் தான் அம்மா மாதிரி. அப்பா 1960களில் இந்தியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தவர். ஆகையால், சகோதரர்கள் நாங்கள் எல்லாம் அம்மாவின் அரவணைப்பில் தான் அதிகம் வளர்ந்தோம்.

அப்பா மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். பிறர், படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வமாக இருந்த போது, நான் மட்டும் அம்மாவின் அரவணைப்பே கதி என்று இருந்தவன். சந்தைக்கு செல்வதில் இருந்து சமைப்பது வரை அனைத்திலும் அம்மாவிற்கு உதவியாக இருந்தேன். ஆகையாலோ என்னவோ, சாதுவாக, வாயில்லா பூச்சியாகவே வளர்ந்துவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளந்தி!

வெள்ளந்தி!

படிப்பு பெரிதாக ஏறவில்லை என்ற காரணத்தால் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கேயும் அயராது உழைத்தாலும் எனது வெள்ளந்தித் தனத்தால் பிறரது பொழுதுப்போக்கு மற்றும் கேலிக் கிண்டலுக்கு நான் ஒரு கருவியாக இருந்தேன். இவற்றை எல்லாம் நினைத்து நான் கவலைப்பட்டது இல்லை. நானுண்டு என் வேலை உண்டு என்றே தான் என் காலம் நகர்ந்து வந்தது.

திருப்பம்!

திருப்பம்!

என் வாழ்வில் பெரிய திருப்பமே எனக்கு நடந்த திருமணம் தான். அதுனால் வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த நாங்கள் ஆளுக்கொரு புறமாக பிரிந்ததும் என் திருமணத்திற்கு பிறகு தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் என் மனைவியின் சந்தேகத்திற்குரிய சில செயல்கள்....

மனைவி!

மனைவி!

என் மனைவியுடன் பிறந்தவர்கள் மூவர். அவர்கள் குடும்பத்தில் படித்த ஒரே நபர் யார் என்றால், அது என் மனைவி தான். என் மனைவியின் மூன்று சகோதரர்களும் என்னுடன் அதே ஆலையில் பணியாற்றி வந்தவர்கள் தான். அவர்களது தங்கை, அதாவது என் மனைவி. வரன் பார்த்து சரியாக அமையாததால், என்னை மிரட்டி தான் சம்மதிக்க வைத்தனர். இங்கே துவங்கியது நான் அடிப்பணிந்து நடக்க ஆரம்பத்தது.

ஷிப்ட்!

ஷிப்ட்!

எனக்கு பெரும்பாலும் தொழிற்சாலையில் ஷிப்ட் வேலைகள் அதிகம். வாரம் ஒருமுறை ஷிப்ட் மாறும். ஆகையால், வீட்டில் காலை மாலை என்ன நடக்கிறது என்பது பெரிதாக நான் அறிந்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. நிறைவு ஷிப்ட் சென்று வந்தால் பகலில் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு தான் நான் வீட்டுக்கே வருவேன்.

தனிக்குடித்தனம்!

தனிக்குடித்தனம்!

ஆரம்பத்தில் இருந்தே தனிக்குடித்தனம் செல்ல திட்டமிட்டு வந்தார் என் மனைவி. நானும், என் மனைவியும் அதிகம் பேசிக் கொண்டது என் வீட்டார் பற்றி அவர் கூறும் குறைகள் மட்டுமே. எதற்கு எடுத்தாலும் கடித்துக் கொள்வார். அவருக்கு கோபம் வந்தாலும், எனக்கு கோபம் வந்தாலும் கடைசியில் பணிந்து போகும் ஆள் நானாக தான் இருப்பேன்.

மரணம்!

மரணம்!

எனக்கு திருமணம் முடித்த ஒன்றரை ஆண்டுகளில் என் தம்பிகளுக்கும் அடுத்தடுத்து திருமணம் முடித்தோம். காரணம், என் அப்பா கொஞ்சம் உடல்நலம் குன்றி காணப்பட்டார். கடைசிக்குட்டி தம்பிக்கு திருமணமான எட்டு மாதத்தில் அப்பா காலமானார். ஏழு பேர் வாழ்ந்த குடும்பத்திற்கும் 15 பேர் வாழும் குடும்பத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்தன.

பிரிவு!

பிரிவு!

வீட்டில் தொடர்ந்து நடந்த சின்ன, சின்ன சண்டைகள் காரணத்தால் நான்கு சகோதரர்கள் தனிக்குடித்தனம் சென்றனர். ஒருவேளை நான் மட்டும் தனிக்குடித்தனம் சென்றிருந்தால் பிறர் எல்லாம் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்திருப்பார்களோ என்ற எண்ணமும் எனக்கு பல ஆண்டுகளாக மனதை உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு காரணம் என் மனைவி தான்.

தாந்திரக...

தாந்திரக...

என்ன தான் படித்திருந்தாலும், தாந்திரிக, சூனியம், தகடு, போன்ற விஷயங்களில் நிறைய ஆர்வம் கொண்டவர் என் மனைவி. இதை நான் கண்டுபிடிக்கவே மூன்று ஆண்டுகள் ஆனது. கூட்டுக் குடும்பமாக இருந்த போதிலும் சரி, அனைவரும் பிரிந்த பிறகு தனியாக இருந்த போதிலும் சரி... வாரம் தவறாமல் ஏதேனும் ஒரு தகடு, எலுமிச்சை, கயிறை கொண்டு வந்த வீட்டின் பூஜை அறை மற்றும் சமையல் அறையில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்ததை நீண்ட காலம் கழித்தே நான் கண்டறிய முடிந்தது.

ஆன்மீகம்!

ஆன்மீகம்!

ஆரம்பத்தில், வீட்டின் நன்மைக்காக செய்கிறேன் என்று கூறிக் கொண்டிருந்தார். நானும் முட்டாள் போல நம்பிக் கொண்டிருந்தேன். எனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகம். அதே போல, இப்படியான காரியங்கள் ஆரம்பத்தில் நாம் வேண்டுவதை நிறைவேற்றினாலும், கடைசி காலத்தில் நமக்கே திருப்பி அடிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

வருத்தம்!

வருத்தம்!

முதலில் என் மனைவி செய்து வந்த இந்த காரியங்கள் அவர் நினைத்தது போலவே குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கியது. சொத்து, நகை அதிகம் ஏற்படுத்திக் கொள்ள வழிவகுத்தது என்றாலும். இப்போது அதுவே திருப்பி அடிக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, என் மனைவிக்கும் உண்டு. இப்போது அவர் நிறையவே வருந்துகிறார். அதற்கு எங்கள் வாழ்வில் இப்போது நாங்கள் கடந்து வரும் சில நிகழ்வுகளை காரணமாக கூறலாம்.

மகன், மகள்!

மகன், மகள்!

மகளின் திருமணம் தட்டிக்கழிந்து வருவது... நன்கு படித்திருந்தும் மகனுக்கு வேலை வாய்ப்புகள் சரியாக அமையாது இருப்பது. நாங்கள் கட்டிய புதிய வீட்டில் நாங்கள் பெரிதாக ஏமார்ந்தது என்று காரணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். சரியாக கூற வேண்டும் என்றால் என் அம்மாவின் மறைவுக்கு பிறகே எங்கள் வாழ்வில் நிறைய எதிர்வினை தாக்கங்கள் எதிர்கொண்டு வருகிறோம்.

உண்மையா?

உண்மையா?

இந்த அறிவியல் யுகத்தில் இதை எல்லாம் என் மகள், மகனிடம் கூறினால் என்னை ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் இழந்த, எதிர்கொண்டு வரும் துன்பங்களுக்கு அவர்கள் ஒரு காரணம் கூறுகிறார்கள். ஆனால், தன் அம்மா இப்படியான தாந்திரிக வேலைகள் எல்லாம் செய்து வந்தார் என்பது அவர்கள் யாருக்கும் தெரியாது.

சந்தேகம்!

சந்தேகம்!

என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள சில ஜோதிடர்களிடம் சென்றேன். சொல்லி வைத்தது போல அனைவரும் இதே காரணத்தை தான் சொல்கிறார்கள். இதை எல்லாம் யாரிடம் கூறுவது என்று தெரியவில்லை. நான் எதிர்கொண்டு வரும் இந்த அனைத்தும் என் நம்பகமான சிநேகிதன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். அவன் நன்கு படித்து சமூகத்தில் நல்ல இடத்தில் இருக்கிறான். என்னை போலவே அவனுக்கும் ஆன்மீகத்தில் நிறைய ஆர்வமும் உண்டு.

என்ன செய்வது?

என்ன செய்வது?

தாந்திரக, சூனியம், தகடு வைப்பது போன்றவை நிஜமாகவே திருப்பி அடிக்குமா? இதெல்லாம் நம்ப தகுந்ததா? அல்ல, இதெல்லாம் இயற்கையாக நடக்கும் வாழ்வியல் மாற்றங்களா? வயதான காலத்தில் சங்கடங்களை மட்டுமே மனம் முழுக்க ரணமாக சுமந்து வாழ்ந்து வருகிறேன்.

- பல காலமாக என் நண்பன் அனுபவித்து வரும் இந்த சூழல் எனக்கும் மிகுந்த வருத்தத்தை அளிப்பதால், இதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன், இப்படிக்கு நம்பகமான சிநேகிதன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Her Suspicious Acts Effects My Whole Family!

Real Life Story: Her Suspicious Acts Effects My Whole Family!
Desktop Bottom Promotion