For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவ மலடியானு கேட்குறதுக்கு முன்னாடி, எனக்கு ஆண்மை இருக்கான்னு யாரும் கேட்கல... - My Story #309

By Staff
|

பத்து வருஷமா ஓயாமா உழைச்சேன். பெஸ்ட் எம்ப்ளாயினு பேர் வாங்குனேன். என்ன நம்பி எவ்வளோ பெரிய பிராஜக்ட் வேணாலும் கொடுக்கலாம். எந்தவொரு பிரச்சனையா இருந்தாலும் டெட்லைனுக்கு முன்னாடி நான் முடிச்சிருவேன்னு என் மேனஜர்ஸ் எல்லாருக்கும் அபரிமிதமான நம்பிக்கை இருந்துச்சு. அந்த கட்டத்துல லவ், கல்யாணம் மேல எல்லாம் பெரிய இன்ட்ரஸ்ட் வரல.

Real Life Story: Actually I Had Fertility Issue, Not She.

உலகத்துல எல்லாருக்கும் ஒரு போதை இருக்கும். எனக்கும் அப்படியான ஒரு போதை இருக்கு. இங்க்லீஷ்ல '..ஹாலிக்'னு சில இடத்துல மென்ஷன் பண்ணுவாங்க. எல்லாரும் ஆல்கஹாலிக் மட்டும் தான் போதைன்னு நினைச்சுட்டு இருக்காங்க, ஷாப்பஹாலிக், வர்க்கஹாலிக்னு '...ஹாலிக்' சேர்ந்து வர எல்லாமே போதை தான். அந்த வகையில நான் ஒரு வர்கஹாலிக்.

யாராச்சும் என்ன வர்கஹாலிக்னு சொல்லிட்டா எனக்குள்ள ஒருவிதமான சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்து ஓடும். ஆர்கேசம் மாதிரியான ஒரு உணர்ச்சின்னு கூட அத சொல்லலாம்.

நான் இப்படி ஒரே இடத்துல ஆணி அடிச்சாப்புல உட்கார்ந்து சம்பாதிச்ச, பேரு, புகழ், பணம் எல்லாம் எனக்கு என்ன கொடுத்துச்சு....

இது நான் கடந்த வந்த பாதை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரன் தேடல்!

வரன் தேடல்!

என்னோட 27வது வயசுல இருந்தே அப்பா, அம்மா வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. எனக்கு பொண்ணு இப்படி இருக்கனும், அப்படி இருக்கணும்னு எல்லாம் எந்தவொரு கண்டிஷனும் இல்ல. நான் வாழ்ற இந்த வாழ்க்கை மற்றும் சொஸைட்டிக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் டீசண்டான பெஹேவியர் இருந்தா மட்டும் போதும்னு சொல்லிட்டேன். ஆனாலும், அப்பா, அம்மா நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போற பெரிய இடத்து பொண்ண தான் பார்ப்பேன்னு ஒத்த கால்ல நின்னாங்க.

3 வருஷம்!

3 வருஷம்!

மூணு வருஷமா எப்படியும் இருபது, முப்பது வரன்களுக்கு மேல வந்திருக்கும். மூணு, நாலு தடவ ஆன்சைட் எல்லாம் போயிட்டு வந்தத ஒரு ஸ்டேட்டஸா சொல்லி ரொம்ப அதகளம் பண்ணி பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க என் வீட்டுல. ஒரு பையன் என்ன தான் பெரிய இவனா இருந்தாலும் அவன் முப்பத க்ராஸ் பண்ணிட்டா இந்த மாப்பிளை பார்க்குற படலத்துல பலர் பின்வாங்கு வாங்கன்னு என் சொந்த அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.

ஓகே!

ஓகே!

31 வயசு, இதுக்கு மேல நீ தள்ளிப்போடவும் முடியாது, எங்களால பொண்ணு தேடவும் முடியாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. கடைசியா, ஒரு பொண்ணு... மிடில் கிளாஸ் ஃபேமிலி... படிச்சுட்டு காலேஜ்ல பிரஃபசரா வேலைக்கு போயிட்டு இருந்த பொண்ணு, அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியாம போனதுல இருந்து வேலைக்கு போறது இல்லன்னு சொன்னாங்க. எனக்கு பார்த்ததும் ஒரு ஸ்பார்க் வரணும்னு சொல்லுவாங்களே... அதெல்லாம் வரவே இல்ல. அம்மா - அப்பா கட்டாயப் படுத்தின காரணத்தினால ஒகே சொன்னேன்.

Most Read: இரண்டு, மூன்று முறைக்கும் மேல் திருமணம் செய்த அரசியல்வாதிகள்!

கல்யாணம்!

கல்யாணம்!

சொந்த ஊருல ஒருமுறை மேரேஜ், ரிஷப்ஷன், கூட வர்க் பண்றவங்க அவ்வளோ தூரம் ட்ராவல் பண்ணி வர முடியலன்னு சென்னையில ஒருமுறை ரிஷப்ஷன்னு ஏறத்தாழ ஒரு வாரம் ஓயாம அந்த ஸ்பாட் லைட் வெளிச்சத்துல நின்னு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சு. உடம்புக்குள்ள இருந்த எனர்ஜி எல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு குடிச்ச மாதிரியான ஒரு ஃபீலிங். என் லைப்ல கடைசி பத்து வருஷத்துல நான் அதிகமா சோர்ந்து போனது இந்த ஒரு வாரம் தான்.

ஹனிமூன்!

ஹனிமூன்!

என் கூட வர்க் பண்றவங்க எல்லாம் சிங்கப்பூர், மலேசியா ஹனிமூன் ட்ரிப் பேக்கேஜ் புக் பண்ணியிருந்தாங்க. ஒரு நாள் கூட ரெஸ்ட் எடுக்காம... சென்னையில ரிஷப்ஷன் முடிஞ்ச மறுநாளே ஃப்ளைட்ல பறந்தாச்சு. ஐஞ்சு நாள் ட்ரிப்... முதல் ரெண்டு நாள் நாங்க ரெண்டு பேருமே அடிச்சுப் போட்ட மாதிரி தான் இருந்தோம். மூணாவது நாள் இராத்திரி தான் எங்களுக்குள்ள ஒரு புரிதல் ஏற்பட்டு, ஒகே எல்லாம் பர்பெக்டா நடக்கும்னு ட்ரை பண்ணோம்.

ஃபெயிலியர்!

ஃபெயிலியர்!

மூட் அவுட்! எதனால முடியலன்னு தெரியல. ஒருவேள முன்னாடியே இதெல்லாம் செக் பண்ணியிருக்கணுமோனு பயம்... மீத ரெண்டு நாள் இந்த டென்ஷன், டிப்ரெஷன்லயே ஓடிடுச்சு. ஒருவேள கல்யாணம், ரிஷப்ஷன்னு ஒரே அலைச்சலா இருந்த காரணத்தால கூட இப்படி இருந்திருக்கலாம்னு விட்டுட்டோம். ஆனா, இது தொடர்கதையாக ஆரம்பிச்சது.

ரெண்டு வருஷம்!

ரெண்டு வருஷம்!

கொஞ்ச நாள்ல எல்லா நார்மலாயிடுச்சு. எங்க தாம்பத்திய வாழ்க்கை நல்லா தான் இருந்துச்சு. ஆனா, கருத்தரிக்கல. மூணாவது மாசத்துல இருந்தே, சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் விசேஷமா, விசேஷமான்னு கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருஷமாகியும் எந்த விசேஷமும் இல்ல. வீட்டுல எங்க அம்மான்னு மட்டுமில்லாம, என் மனைவியோட அம்மாவுமே கூட, அவள தான் பிடிச்சு கேள்விக் கேட்டுட்டே இருந்தாங்க. அத என்னால தாங்கிக்க முடியல.

Most Read: தந்தையின் கனவையும் சேர்ந்து சுமந்த தினேஷ் கார்த்திக் - டாப் 10 உண்மைகள் #UnKnownFacts

செக்கப்!

செக்கப்!

யாருக்கும் தெரியாம நானே தனியா செக்கப் போனேன். டாக்டர் என்னோட ஸ்பெர்ம் ஹெல்த் தான் ப்ராப்ளம்னு சொன்னாரு. சரியான ஃபுட் ஹேபிட், உடல் வேலை செய்யாததால கூட இந்த பிரச்சனை வரலாம்னு சொன்னாரு. கடைசியா நீங்க எப்போ நல்லா ஓடி, ஆடி விளையாடினீங்கன்னு ஒரு கேள்வி கேட்டாரு. அது, ஸ்கூல், காலேஜ் டேஸ்ல. எப்படியும் ஒரு பத்து வருஷம் இருக்கும்னு சொன்னேன்.

சில மருந்து, கொஞ்ச எக்ஸர்சைஸ், விளையாட்டுன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணாரு. அத ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.

பழி ஏத்துக்கிட்டா...

பழி ஏத்துக்கிட்டா...

நான் செக்கப் முடிஞ்சு வந்ததும்.. என்கிட்டே தான் பிரச்சனை. யாராச்சும் கேட்டா என் பெயர சொல்லிடு நான் பாத்துக்குறேன். இல்ல நானே சொல்லிக்கிறேன் விடுன்னு சொன்னேன். ஆனா, அவ அதுக்கு ஒத்துக்கல. என்னையும் எதுவும் பேச விடல. எல்லா பழியையும் தன்மேல அவளே எடுத்துக்கிட்டா.

குட்டு!

குட்டு!

என்ன பொறுத்த வரைக்கும் வாழ்க்கைன்னா நல்லா சம்பாதிக்கணும், பிராஜக்ட் மேனேஜர், சி.இ.ஓ ரேஞ்சுக்கு வளரனும்ங்கிறது மட்டும்தான் சந்தோஷம்னு நெனச்சேன். அப்ப தான் புத்திக்குள்ள ஒரு யாரோ குட்டுன மாதிரி இருந்துச்சு. உறவுகளும், காதலையும் தாண்டி இந்த உலகத்துல பெரிய சந்தோஷம் வேற இல்லன்னு தெரிஞ்சுகிட்டேன்.

ஆறு மாசம்!

ஆறு மாசம்!

டாக்டர் சொன்ன மாதிரி தொடர்ந்து ட்ரீட்மென்ட், எக்ஸர்சைஸ், ஸ்போர்ட்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன். வர்கஹாலிக்ல இருந்து கொஞ்சம் வெளிய வந்தேன். என் டீம்ல எனக்கு கீழ வர்க் பண்றவங்க எல்லாம் என்கிட்ட ஏதோ புது மாற்றம் தென்படுதுன்னு சொன்னாங்க. உடம்புல மட்டுமில்ல, ஆபீஸ்லயுமே கூட என்னோட வர்க் இம்ப்ரூவ் ஆக ஆரம்பிச்சது. மைண்ட், பாடி ரிலாக்ஸா இருந்துச்சு. 16 மணி நேரத்துல பண்ற வர்க் 10 - 12 மணி நேரத்துல முடிக்க ஆரம்பிச்சேன்.

Most Read:தங்கள் சீக்ரட் செக்ஸ் லைப் குறித்து 12 இந்திய நடிகர், நடிகைகள் கூறிய வாக்குமூலங்கள்!

சந்தோஷம் பிறந்தது...

சந்தோஷம் பிறந்தது...

கடைசியா ஆறு மாசம் கழிச்சு... என் வைஃப் கன்சீவ் ஆனாங்க. அந்த சந்தோசத்த வேற எந்த ஒரு விஷயத்தாலயும் கொடுக்க முடியாது. ஏறத்தாழ எனக்காக கடந்த ஒன்றரை வருஷமா.. மலடியானு எத்தனயோ பேர் இன்டைரக்டா கேட்டிருக்காங்க.. அத எல்லாம் பொறுத்துக்கிட்டு. என்னோட பிராப்ளம் தெரிஞ்சும் ஏத்துக்கிட்டு எனக்கு பக்கபலமாவும், என்னையும், என் குடும்பத்தையும் ஹெல்தியாவும் பாத்திக்கிட்டு இருக்காங்க.

சுபம்!

சுபம்!

இப்ப என் குழந்தைக்கு ரெண்டு வயசாக போகுது. காசு, பணம், பிரமோஷன் எப்ப வேணாலும் வரும். ஆனா, வாழ்க்கையில சில விஷயங்கள் அந்தந்த வயசுல நடந்துட்டா தான் உண்டு. வயசோ, இளைமையா பத்து, இருபது வருஷம் கழிச்சு கிடைக்காது.

வர்க் மட்டும் ஹெல்தியா இருந்தா பத்தாது. நீங்களும், உங்க உடம்பு, மனசு, குடும்பம் எல்லாமும் ஹெல்தியா இருக்கணும். இத புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப லேட்டாச்சு. என் அனுபவத்த சொல்லிட்டேன். இத படிச்சு... நீங்க சீக்கிரமே புரிஞ்சுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Actually I Had Fertility Issue, Not She.

Real Life Story: Actually I Had Fertility Issue, Not She. But, Without knowing any fact, this society started blaming her for no reason. And She accepted it just to save my status in this so called fucking society.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more