For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் மனைவியை கொலை செய்ததற்கு இது தான் காரணம்! my story#185

சைக்கோ கணவன் தன் மனைவியை மிக சொற்ப காரணங்களைச் சொல்லி கொலை செய்த கதை

By Staff
|

வாழ்க்கையே கல்லூரி காலத்திற்கு பிறகு அப்படியே வேறு மாதிரியாக மாறியது என்று சொல்லலாம். இதுவரை இருந்த நான் தானா இது... இது என்னுடைய வாழ்கை தானா என்னுமளவிற்கு என்னுள் நிறைய வித்யாசங்கள் தெரிய ஆரம்பித்தது.

பள்ளி முடிக்கும் வரையிலும் உடன் படிக்கும் பெண்கள் ஏன் அக்காளிடம் கூட அவ்வளவாக முகம் கொடுத்து பேசமாட்டேன், ஏதோ கூச்சமாக இருக்கும், வெட்கம் வரும் அதனால் தலையை குனிந்து கொண்டே வேகமாக அவர்கள் இருக்கும் இடத்தை கடந்து விடுவேன். கல்லூரிக்கு வந்த பிறகு உடனிருந்த நண்பர்களா அல்லது பார்க்கும் சினிமாவா என்று தெரியவில்லை அந்த தயக்கம் உடைந்தது.

அது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தால் உடையாமலே இருந்திருக்க செய்திருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாஸ்மின் :

யாஸ்மின் :

முதலாமாண்டு வகுப்பறையில் நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருந்தோம். வகுப்புகள் தொடங்கி கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. கருப்பு நிற பர்தா அணிந்த ஒருத்தி திடீரென வந்தாள்.

முன்னால் நின்றிருந்த ஆசிரியரிடம் எதேதோ சொல்லி விட்டு பெண்கள் பகுதியில் உட்கார்ந்து கொண்டாள். ஸ்டூடண்ட்ஸ் திஸ் ஸ் யாஸ்மின் இனி நம்ம க்ளாஸ் என்று அறிமுகம் கொடுத்தார் ஆசிரியர். பார்த்ததும் எரிச்சலாய் இருந்தது, என்ன இது வெளிய பர்தா போட்டுட்டு போறீங்க சரி, க்ளாஸ் ரூம்லயுமா? அப்படி என்ன பேரழகியா நீ....

மச்சி அந்த புள்ளைய ரேகிங் செய்வோமா? நம்ம ரெண்டு வாரம் சீனியர் தானடா என்றேன், இடைவேளையில் அவளை வம்பிழுப்பது என முடிவெடுத்துக் கொண்டோம்.

அவளல்லோ பெண் :

அவளல்லோ பெண் :

வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியே சென்றது தான் தாமதம்.... முன்னால் பின்னால் என தன்னைச் சுற்றியிருந்த அனைவரிடத்திலும் மிக சகஜமாக பேச ஆரம்பித்தாள். எண்களை பறிமாறிக்கொண்டார்கள்.

முதன் முதலாக புதிய கல்லூரி,புதிய வகுப்பறைக்கு வந்திருக்கிறோம் என்ற தயக்கமே அவளிடத்தில் இல்லை. நண்பர்கள் அவரவர் வேலையை கவனிக்க, அவளை கவனிப்பதே எனது முழு வேலையாகிப் போனது. அதை காதல், ஈர்ப்பு என்றெல்லாம் இப்போதே பெயரிடவில்லை. பிடித்திருக்கிறது அவ்வளவு தான்.

எழுந்து தன்னுடைய பர்தாவைக் கழற்றி கொண்டு வந்திருந்த பைக்குள் திணித்தாள். நீளக்களர் சுடிதார், கழுத்தில் வந்து விழும் முடி என மிக திருத்தமாக இருந்தாள். பெண்ணென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என இவளைச் சொல்லலாம்.

நமக்கு நாமே :

நமக்கு நாமே :

இடைவேளையில் வம்பிழுக்க வேண்டும் என்று நினைத்தவன், ஏனோ காரணம் ஏதும் தெரியாமல் அடங்கிப் போயிருந்தேன். எல்லாரிடத்திலும் சகஜமாக பேசியவள் என்னிடம் மட்டும் ஒரு இடைவேளியை கடைபிடித்தாள்.

பின் ஒரு நாள் லேபிலிருந்து வெளி வரும் போது அவளாகவே அழைத்தாள், எதோ கேட்டாள் தலையாய் ஆட்டினேன், பதில் சொல்லக்கூட வாயை திறக்க முடியவில்லை. பின் வழிய வந்து அவளாகவே பேசி சகஜமாக்கினாள்.

தெர்ல பிடிச்சிருக்கு :

தெர்ல பிடிச்சிருக்கு :

இருவரும் சற்று சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவளிடம் கேட்டேன். ஏன் மொத நாள் க்ளாஸுக்கு வந்தப்ப என்கூட பேசல?

பேசினேனே.....

ஹெலோ ரெண்டு நாள் கழிச்சு தான் பேசின... எனக்கு நல்லா நியாபகம் இருக்கும்.

அவ்ளோ நியாபகம் வச்சிருக்கவங்க நீங்களா பேச வேண்டியது தான... இதற்கு என்ன சொல்ல... ஒரு வாராக மழுப்பி, எல்லார்ட்டையும் பேசுற மாதிரி என்கிட்டயும் பேசுறியான்னு பாத்தேன், ஆனா என்கிட்ட மட்டும் பேசவேயில்ல வருத்தமா போச்சு..

சாரி.... நான் வேணும்னு பண்ல, என்று ஆரம்பித்து எதேதோ சொன்னாள். இறுதியாக அவள் சொன்னது மட்டும் தெளிவாக காதில் விழுந்து தொலைத்துவிட்டது.

ஏன்னு தெர்ல உங்கள பாத்ததும் பிடிச்சிருந்துச்சு.

ஹாஸ்டல் வார் :

ஹாஸ்டல் வார் :

கேட்டதும் உடலெல்லாம் சிலிர்த்தது போல ஒரு உணர்வு, மொதோ நாள் உன்னை பாக்குறதும் எனக்கு பிடிச்சிருந்தது என பரஸ்பரம் பறிமாறிக் கொண்டோம். காதலைச் சொல்லிக்கொள்ளாமல் இருவரும் காத்திருந்தோம்.

அவள் சொல்லட்டும் என்று நானும் நான் சொல்லட்டும் என்று அவளும் காத்திருந்த நாட்கள் அவை, நண்பர்கள் எப்படித்தான் மோப்பம் பிடிப்பார்களோ, ஹாஸ்டலில் என்னை வைத்து கலாய்த்தார்கள். அவள் முன்னால் என் இமேஜை தாறுமாறாக டேமேஜ் செய்தார்கள்.

எப்போ சொல்லப்போற? :

எப்போ சொல்லப்போற? :

இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாமாண்டு கல்லூரிக்குள் நுழைந்தோம். என்னுடன் மிக சகஜமாக பேசக்கூடியவளாக யாஸ்மின் இருந்தாள். காதலை சொல்லிக் கொள்ளவில்லை என்றாலும் நெருக்கமாக பேசக்கூடியவர்களாக இருந்தோம். எங்களுக்குள் எந்த ஒளிமறைவும், ரகசியமும் இல்லையென்ற அளவிற்கே எங்கள் உறவு இருந்தது.

எப்போ லவ் சொல்லப்போற? என்று கேட்கும் போதெல்லாம், ஒரு ஸ்மைலுடன் கடந்து விடுவாள். இந்த ஆண்டுடன் பிரியப்போகிறோம் என்று உணர ஆரம்பித்ததும் அவளை நெருக்க ஆரம்பித்தேன், சொல்லு என்னைய லவ் பண்றியா இல்லையா? ஏமாத்த பாக்குறியா....

ஒரு ஊர்ஜிதம் தேவைப்பட்டது. எதன் அடிப்படையில் அவள் என்னை காதலிக்கிறாள் என்று நம்புவது, செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவதாலா? இரவு மணிக்கணக்கில் போன் பேசுவதாலா? வாட்ஸாப் சாட் முழுவதும் கிஸ்ஸிங் ஸ்மைலிக்களால் நிறைந்திருப்பதாலா? தெரியவில்லை. மெசேஜ் அனுப்பி நீண்ட நேரம் பதிலில்லாமல் போன் செய்தேன். அட்டெண்ட் செய்தவள் தங்கம் க்ளாஸ்ல இருக்கேன் என்று சொல்லி கட் செய்தாள்...

ஆனால் வண்டிகள் சத்தமும், பின்னால் யாரோ பேசிக் கொண்டிருக்கும் சத்தமும் மிகத் தெளிவாக கேட்டது. கல்லூரியில் எந்த வகுப்பறையில் உட்கார்ந்திருந்தாலும் இப்படி கேட்காது. பொய் சொல்ற யாஸ்மின்..

விலகல் துவக்கம் :

விலகல் துவக்கம் :

மீண்டும் கால் செய்தேன். எடுக்கவில்லை. வரிசையாக மெசேஜ் அனுப்பினேன் யாஸ்மீன் என்கிட்ட பொய் சொல்ற எதையோ மறைக்கிற நீ என்னைய உண்மையா லவ் பண்றியா? ஆர் யூ சீட்டிங் மீ என்று நான் அனுப்பிய எந்த கேள்விக்கும் பதிலில்லை.

மண்டைக்குள் யாரோ உட்கார்ந்து அடிப்பது போல உணர்வு, யாரோ கழுத்தை நெறிக்கிறார்கள். என்னைப் பார்த்து இந்த உலகமே ஏளனமாக சிரிக்கிறது. நீ தோத்துட்ட, நீ ஏமாந்துட்ட, அவ உன்னைய ஏமாத்திட்டா என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தது.

கண்ணே குருடாகிவிடு :

கண்ணே குருடாகிவிடு :

அன்று ஹாஸ்டலில் இருக்கும் சீனியர் அண்ணன் ஒருவர் குறும்படம் எடுக்கப்போவதாக சொல்லியிருந்தார், நானும் என் அறைத் தோழர்களும் ஷூட்டிங் பாக்க வரோம் என்று சொல்லி அவருடன் ஒட்டிக் கொண்டோம்.

பார்க்கில் அவர்கள் ஒரு பக்கம் ஷூட்டிங் எடுக்க நாங்கள் சற்று தள்ளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். வெள்ளை நிற சுடிதாருடன் தூரத்தில் ஒரு பெண் அவளின் தோலை அணைத்தவாறு ஒருவன் நடந்து வந்து கொண்டிருந்தான். யாஸுக்கும் வொயிட் கலர் நல்லாயிருக்கும். அன்னக்கி மேக்ஸ் செமஸ்டர் அப்போ வொயிட் போட்டுட்டு வந்தா என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் கிட்ட வந்து விட்டார்கள்.

அவள் யாஸ்மின் தான், அவன் யார்? நானிருக்க வேண்டிய இடத்திலிருக்கும் அவன் யார்?

துரோகி :

துரோகி :

பார்த்த அதிர்ச்சியில் என்னால் ஒன்றும் செய்யவோ சொல்லவோ முடியவில்லை, இரண்டடி தள்ளி நின்று கொண்டிருந்த நண்பனைக் கூட அழைக்க முடியவில்லை, கண்ணீர் கொட்டுகிறது, அப்படியே சிலை போல ஆகிவிட்டிருந்தேன். துரோகி, இப்டி என்ன லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டியேடீ என்ற கோபம் உள்ளுக்குள்ளே எரிமலையாய் வெடித்துக்கொண்டிருந்தது.

அவளை அந்த இடத்திலேயே கொன்று புதைத்திட வேண்டும், என்னிடத்தில் நிற்கும் அவனை வெட்டி சாய்த்திட வேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக என் சுயத்தை, இயல்பை இழந்து கொண்டிருக்கிறேன்.

பெண்கள் என்றாலே கோபம் :

பெண்கள் என்றாலே கோபம் :

அந்த சம்பவத்திற்கு பிறகு பெண்கள் என்றாலே கோபம் உண்டானது. அவர்களைக் காண்டாலே வெறுப்பு, பழிவாங்க வேண்டும் என்கிற வெறி உள்ளுக்குள் அணையாமல் எரிந்து கொண்டேயிருந்தது. யாஸ்மின் என்ன புண்ணியம் செய்தாலோ அதன் பிறகு என் கண்ணில் சிக்கவில்லை.

அன்றைக்கு பார்க்கில் நடந்த விஷயம் நண்பர்கள் மூலமாக அவளது காதுக்கு எட்டியிருக்கும் போல அதன் பிறகு சுத்தமாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டிருந்தாள்.

இனி இப்படித்தான் :

இனி இப்படித்தான் :

இப்போது என்னுளிருந்த கெட்டவன் விழித்துக் கொண்டான். ஒருபக்கம் படிப்பு வேலை என்று சென்று கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் எனக்குள்ளிருந்த கெட்டவன் விழித்துக் கொண்டான்.

அலுவலகத்தில் அறிமுகமான தோழி நட்பு ரீதியாக பழகினாள். யாஸ்மின் கதையைச் சொன்னேன், காரணமேயில்லாமல் என்னை ஏமாற்றியவளை நினைத்து இன்றளவும் வருத்தப்படுவதாய், அழுவதாய் நா தழுதழுத்து மென்று முழுங்கி வசனத்தை எடுத்து விட்டேன்.

உண்மையென நம்பி ஆறுதல் சொன்னாள், நான் பழிவாங்கும் படலத்தின் முதல் ஆடு!

திருமணம் :

திருமணம் :

இப்படியே மூன்று பேரை அடுத்தடுத்து ஏமாற்றினேன். அதற்கான பிரச்சனையை சந்தித்தேன், ஒரு கட்டத்தில் அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட வேறு வேலைக்கும் சேர்ந்தேன்.

இன்னல்களை சந்தித்தாலும், அது ஒரு வித மனநிறைவைக் கொடுத்தது, எனக்கு வலியை ஏற்படுத்தியதற்கு இது தான் தண்டனை என்று மனதில் சொல்லிக் கொண்டேன். இந்நிலையில் வீட்டில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. எந்த பெண்ணை காட்டினாலும் ஒன்று யாஸ்மின் போல யாரையாவது ஏமாற்றியிருப்பாள், அல்லது என்னிடம் ஏமாந்தவர்கள் போல யாரிடமாவது ஏமாறியிருப்பாள் என்றே தோன்றியது.

யாரையாவது லவ் பண்ணிருக்கியா? :

யாரையாவது லவ் பண்ணிருக்கியா? :

வீட்டிலும் வற்புறுத்தி ஒருத்தியை திருமணம் செய்து வைத்தார்கள். திருமணத்திற்கு முன்பு அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை, மிகவும் சிடுமூஞ்சியாக நடந்து கொண்டேன் அவளிடம். முதலிரவு அன்றும் அவளுடன் முகம் கொடுத்து பேசக்கூட தோன்றவில்லை.

எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல... வீட்ல கம்பல் பண்ணாங்கன்னு தான் ஒத்துக்கிட்டேன் என்று சொன்னேன்.

எனக்கும் தான், மும்பை ஆபிஸ் போய் வொர்க் பண்ணனும்னு ஆசை, எவ்ளோ பெரிய ஆஃபர் தெரியுமா? மேரேஜ்னால அத ஒத்துக்க முடியல என்றாள். மும்பையில் அவள் காதலன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

லவ்? முழித்தாள்... க்ரஸ்.... எனக்கு காலேஜ்ல ஒரு லவ் இருந்தது பேரு யாஸ்மின் என்று ஆரம்பித்து கதையைச் சொன்னேன்.

பாய் ஃபிரண்ட் :

பாய் ஃபிரண்ட் :

லவ்லி... எனக்கு லவ் எல்லாம் யாருமில்ல, பட் காலேஜ்ல என் பின்னாடி ஒரு பையன் சுத்தினான், எங்க வீட்ல லவ் மேரேஜ் எல்லாம் ஒத்துக்கமாட்டாங்கன்னு சொல்லி அவன் லவ் அக்ஸப்ட் பண்ணல, ஜஸ்ட் பேசுவோம் என்று மென்று முழுங்கினாள்.

கதையில் பாதியை மறைத்து மீதியை திரித்து சொல்வது அப்பட்டமாய் தெரிந்தது. கதை கேட்ட பிறகு அவளும் யாஸ்மின் போலத்தான் என்று உறுதி செய்த பிறகு அவளை முழுவதுமாக வெறுத்தேன், ஆனால் கொடுமை ஒரே வீட்டில் இருக்க வேண்டியதாய் போயிற்று. எரிந்து விழுந்தாலும் வெறுத்து ஒதுக்கினாலும் அதற்கு ஒரு காரணத்தை தேட வேண்டியிருந்தது.

அவள் வேண்டாம் :

அவள் வேண்டாம் :

அவள் என்னுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதோ முள்படுக்கையில் இருப்பது போன்றதொரு உணர்வு, அவள் அருகில் வந்தாலே நெருப்பை அள்ளி கொட்டியது போல உள்ளுக்குள் தோன்றியது. அதை உணரவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் இருதலைக்கொல்லி பாம்பு போல தவித்துக் கொண்டிருந்தேன்.

அவளை என்ன செய்யலாம்.... என்னைப் போல யாரோ ஒருவனை அழ வைத்து வந்திருக்கிறாள் , அவளுடனான இந்த வாழ்க்கை நமக்கு தேவை தானா? பல நாட்கள் யோசித்தேன்.

நீ சாவதே மேல் :

நீ சாவதே மேல் :

ஒரு மாதத்திற்கு பின் அவள் இறப்பதே மேல் என்று தோன்றியது. ஒருவனை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் என்னையும் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றப் பார்க்கிறாள். ஒருத்தி காதலித்து ஏமாற்றினாள் என்றால் இவள் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றுகிறாள்.

நடுவில் அலுவலகம் செல்லவா என்று என்னிடமே கேட்கிறாள்..... என்னை கணவன் என்று நினைத்தாலா அல்லது வேறு எதாவது என்று நினைத்தாலா..... அவள் இறக்க வேண்டியதன் காரணத்தை உள்ளுக்குள்ளே சொல்லிக் கொண்டிருந்தேன். இன்று இரவு அவள் கதையை முடித்து விட வேண்டியது தான் என்று உறுதி செய்து கொண்டேன்.

மன்னிப்பு :

மன்னிப்பு :

நான் ஒன்றும் ரெகுலர் கொலைகாரனில்லை, எப்படி கொலை செய்யப்ப்போகிறேன் என்று எதுவும் தெரியாது. அவள் வாழத் தகுதியில்லாதவள் என்பது மட்டும் புரிந்திருந்தது. அன்று மாலை அலுவலகம் முடிந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்தேன்.

கோவிலுக்கு போலாமா? என்னிடமிருந்து எதிர்பாராத அந்த கேள்வி அவளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. அரக்க பறக்க கிளம்பி என்னுடன் வந்தாள் விநாயகர் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன் நீண்ட நேரம் எதையோ வேண்டினாள். கோவிலிலேயே இரவு ஏழு மணி வரை இருந்துவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பினோம். வரும் வழியெல்லாம் கொலையை எப்படி அரங்கேற்றுவது என்ற சிந்தனை தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.

வழக்கத்தை விட அவள் சந்தோசமாக காணப்பட்டாள். இன்று தானே உன் கடைசி நாள்,மகிழ்ந்திரு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். இரவு உணவு சாப்பிட்டு படுக்கைக்குச் சென்றோம். தன் தலையணை எடுத்து ஹாலுக்குச் சென்றவளிடம் இங்கயே படு என்றேன், தலையைக் குனிந்து சிரித்தவள் லைட்டை ஆஃப் செய்து அருகில் படுத்துக் கொண்டாள்.... நான் ஆரம்பித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Psycho husband Kills His Wife

Psycho husband Kills His Wife
Story first published: Monday, February 26, 2018, 16:41 [IST]
Desktop Bottom Promotion