For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் இவருடைய காதல் கதை தான்! My story #182

தன்னுடைய காதல் மனைவியை பார்க்க ஐந்து மாதங்கள் வரை சைக்கிளில் பயணித்த ரியல் லைஃப் ஜோடியைப் பற்றிய சுவாரஸ்ய கதை.

|

அமெரிக்கா இங்க தான் இருக்கு போய்ட்டுவான்னு பையன அனுப்பி வைக்கிற அப்பா சினிமால மட்டும் தான் இருப்பாங்க. ஆனா நிஜத்துலயும் சரி, சினிமாலயும் சரி காதலுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தயாராக இருப்பார்கள்.

இந்த காதலை விட இந்த உயிர் கூட எனக்கு பெரிதல்ல என்று அபத்தமான முடிவுகளை எடுப்பதையும் பல நேரங்களில் கடந்து வந்திருப்போம். இப்போது மிக சுவாரஸ்யமான ஒரு காதல் ஜோடியைப் பற்றித்தான் படிக்கப்போகிறீர்கள். நடைமுறையில் இது சாத்தியமே இல்லை என்று அனைவராலும் நமப்பட்ட நேரத்தில் உங்களது நம்பிக்கையை விட என் காதல் பெரிது என்று ஜெயித்துக் காட்டிய ஓர் வாலிபரின் காதல் பக்கங்கள் தான் இந்த கதை.

Man Travels 5 Months in a Cycle to Meet His Lover

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு :

பிறப்பு :

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இருக்கக்கூடிய தென்கனல் என்ற மாவட்டத்திற்கு அருகில் இருக்கிறது ஆத்மாலிக் என்கிற குக்கிராமம். இங்கு தான் 1949 ஆம் ஆண்டு மஹானாந்தியா பிறக்கிறார். ஏழு குழந்தைகளில் மஹானந்தியா மூன்றாவது குழந்தை.

அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இருந்தும் தன் குழந்தைகளை கல்வி கற்க ஊக்கப்படுத்தினார்.

Image Courtesy

காடு :

காடு :

மஹானாந்தியா இருந்த பகுதி சற்று அடந்த காட்டுப்பகுதி, தாத்தாவுடன் சேர்ந்த இயற்கையை அதிசயங்களை ரசிப்பது, இருக்கும் குடிசை வீட்டின் சுவற்றில் கிறுக்குவதும் தான் சிறுவன் மஹானந்தியாவிற்கு இருந்த ஒரே பொழுது போக்கு. இந்த காடு தான் ருட்யார்ட் கிப்ளிங், 'த ஜங்கிள் புக்' என்ற நாவலை எழுத காரணமாக இருந்திருக்கிறது.

Image Courtesy

முதல் அதிர்ச்சி :

முதல் அதிர்ச்சி :

மிகவும் இன்பமயமாக நகர்ந்து கொண்டிருந்த இளமைப்பருவத்தில் மஹானாந்தியாவிற்கு முதல் அதிர்ச்சி பள்ளியில் காத்திருந்தது. தான் வசிக்கும் இடத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்தது.

அப்படியே அங்கு சென்றாலும் என்னை அங்கிருக்கும் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.வகுப்பறையிலும் அனுமதிக்கப்படவில்லை.

Image Courtesy

தாழ்த்தப்பட்டவன் :

தாழ்த்தப்பட்டவன் :

என்னை யாராவது தொட்டாலோ அல்லது என்னுடைய கை யார் மீதாவது பட்டாலோ உடனே.... அடுத்த நொடியே அவர்கள் ஆற்றுக்குச் சென்று குளிப்பர். நான் தீண்டத்தகாதவன் என்று சொல்லி வகுப்பறைக்கு வெளியவே நிறுத்திவிடுவார் ஆசிரியர்.

எங்களுக்கு அவர்கள் வளர்க்கிற செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கிற மரியாதை, அந்த இடம் கூட கொடுக்கப்படவில்லை, அந்த விலங்குகளைக் காட்டிலும் நாங்கள் தாழ்வானவர்களாகவே நடத்தப்பட்டோம்.

Image Courtesy

கொடுமை :

கொடுமை :

அந்த இளம்வயதில் இக்கொடுமைகள் ஒவ்வொன்றும் என் மனதில் ஆழமாக பதிந்தன. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதனாக என்னை நடத்த என்ன காரணம்? நான் என்ன தவறு செய்தேன் என்று பல நாள் யோசித்திருக்கிறேன்.

அங்கிருக்கும் கோவில் பகுதிக்கு அருகில் நடந்து சென்றாலே அங்கிருப்பவர்கள் எல்லாம் என்னை நோக்கி கல்லெறிய ஆரம்பித்துவிடுவர். என்னுடைய நிழலைக்கூட பாவமென்று நினைத்தார்கள்.

Image Courtesy

தேவதை :

தேவதை :

அன்றைக்கு எங்கள் பள்ளியில் பிரிட்டிஷைச் சேர்ந்த ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்கள் முன்னாள் ஸ்கூல் இன்ஸ்பெக்டர் என்று சொன்னார்கள். பள்ளியை பார்வையிட்டு அவர்களின் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பும் போது, வகுப்பறை வாசலில் நின்றிருந்த என்னருகில் வந்தார் அந்தப் பெண்மணி, அந்த இன்ஸ்பெக்டரின் மனைவி.

பள்ளியிலிருந்து அவரை வரவேற்று அளிக்கப்பட்ட பூங்கொத்த என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன் , பின் மெதுவாக குனிந்து என் காதருகில் வந்து, நான் உன்னைத் தொடலாம், ஏனென்றால் நானும் தீண்டத்தகாதவள் தான் என்று சொல்லி சிரித்துவிட்டு நகர்ந்தார்.

Image Courtesy

லவ் :

லவ் :

அன்றைக்கு முழுவதும் என்னுடைய சந்தோஷத்திற்கு அளவேயில்லை, பள்ளியில் எல்லாரும் என்னை சற்று உயர்வாக பார்த்தாக தோன்றியது. வீட்டிற்கு வந்ததும், அம்மாவிடம் நடந்ததைக் கூறினேன். அம்மா அந்த இன்ஸ்பெக்டர் மனைவியை நான் காதலிக்கிறேன் என்றேன்.

அம்மாவும் சிரித்துக் கொண்டே வெள்ளைக்கார பொண்ணைய கட்டிக்கப்போற என்று கேட்டார். ஆமாம் என்று வேகமாக தலையாட்டினேன்.

Image Courtesy

கால ஓட்டம் :

கால ஓட்டம் :

கால ஓட்டத்தில் இவ்விஷயம் நடந்ததே மறந்து போனது. கல்வியை விடாமல் பல கொடுமைகளுக்கு மத்தியில் தொடர்ந்தேன் கூடவே ஓவியம் மீதான என்னுடைய ஆர்வமும் வளர்ந்தது.

என்னுடைய ஓவியத் திறமையைப் பார்த்து டெல்லியில் இருக்கக்கூடிய கவின்கலை பல்கலைக்கழகத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

Image Courtesy

டெல்லியில் :

டெல்லியில் :

கிராமத்தில் வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு அதுவும் தன்னுடைய இளமைக்காலம் முழுவதும் பல அடுக்குமுறைகளை மட்டுமே சந்தித்து வந்த இளைஞனுக்கு டெல்லி விசித்திரமான உலகமாகத்தான் தெரிந்தது.

ஆனால் இங்கே ஸ்காலர்ஷிப் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாட்களை நகர்த்த முடியவில்லை. இங்கேயும் தீண்டாமை கொடுமை தொடர்ந்தது, பல நாட்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்தேன், ஒரு கட்டத்தில் இங்கேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விடலாமா என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.

Image Courtesy

புதிய வழி ஆரம்பம் :

புதிய வழி ஆரம்பம் :

ஒரு முறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது வெள்ளைக்கார பெண்ணொருத்தி அதிகாரிகள் படை சூழ நடந்து வந்து கொண்டிருந்தார் சுற்றி நின்ற கூட்டத்தினருக்கு கையசைத்துக் கொண்டிருந்தார்.

அந்த நொடி என்ன தோன்றியதோ தெரியவில்லை, கையிலிருந்த ஒரு பேப்பரை எடுத்து அவரை போட்ரைட் வரைய ஆரம்பித்தேன்.

Image Courtesy

 விண்வெளி வீராங்கானை :

விண்வெளி வீராங்கானை :

இவர் ரஷ்யாவின் முதல் விண்வெளி வீராங்கனை வேலண்டீனா டெரஸ்கோவா,சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். வரைந்து முடித்ததும் உடனே அவரிடம் என் ஓவியத்தை கொடுத்தேன். அசந்து விட்டார். மறு நாள் பத்திரிக்கை டிவி என எல்லா இடங்களிலும் இந்த செய்தி தான். ஒரே நாளில் டெல்லியில் பிரபலமாகிவிட்டிருந்தேன்.

Image Courtesy

வாய்ப்புகள் :

வாய்ப்புகள் :

தொடர்ந்து பல வாய்ப்புகள் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் டேனியல் பேட்ரிக் மொய்னிஹான் ஆகியோரது ஓவியம் வரைந்து கொடுத்தது என்னால் மறக்க முடியாத ஒன்று. இவர்கள் மூன்று பேரையும் சந்தித்த பிறகு என் வாழ்வில் புதிய ஒளி வீசத்துவங்கியது என்றே சொல்லலாம்.

Image Courtesy

காதலியே... :

காதலியே... :

அதன் பிறகு டெல்லியில் இருக்கக்கூடிய சுற்றுலாதளங்களுக்குச் சென்று அங்கு வருபவர்களிடத்தில் ஓவியம் வரைந்து கொடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தேன். 1975 டிசம்பர் 17 ஆம் தேதி ஸ்வீடனைச் சேர்ந்த சார்லெட் என்ற பத்தொன்பது வயது பெண் என்னைக் கடந்து சென்றாள்.

மீண்டும் திரும்பி நீங்கள் தானே மஹானாந்தியா? உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்னை ஒரு ஓவியம் வரைந்து தர முடியுமா? உங்களைப் பார்க்க 22 நாட்கள் பயணம் செய்து வந்திருக்கிறேன் தயவு செய்து முடியாது என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்று பேசுகிறாள்.

Image Courtesy

திருமணம் :

திருமணம் :

வரைந்து கொடுக்கிறார், கூடவே இருவரும் நட்பாக இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போய்விடுகிறது. பள்ளிப்பருவதில் அம்மாவிடம் சொன்னது போல இந்த வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார் மஹானாந்தியா.

ஐரோப்பாவின் உயர்ந்த சாதியில் பிறந்தவர் சார்லெட், நானோ தாழ்ந்த சாதி இந்தியாவிலேயே என்னை ஒரு மனிதனாக கூட மதிக்காத தீண்டத்தகாதவனாக நடத்தும் போது ஐரோப்பிய பெண்மணியை விரும்பலாமா? காதலைச் சொல்வதா வேண்டாமா என்று தயங்கி நின்ற நேரத்தில் சார்லெட்டே வந்து தன்னுடைய அன்பைச் சொல்கிறாள்.

உடன் ஒரிசாவுக்குச் சென்று அங்கு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.

Image Courtesy

பிரிவு :

பிரிவு :

இந்தியாவிற்கு வந்த சார்லெட்டின் விசா காலம் நிறைவடைய, தன்னுடைய காதல் கணவன் மஹானாந்தியாவை விட்டு பிரிய வேண்டிய கட்டாயம். கடைசி வருட படிப்பு இருக்கிறது அதை முடிக்கவேண்டிய கட்டாயம் வேறு, நீயும் என்னுடன் வா என்று அழைக்க.... இல்லை நான் உழைத்து சம்பாதித்து கட்டாயம் உன்னை பார்கக் வருவேன் என்று உறுதி கூறுகிறார் மஹானாந்தியா.

Image Courtesy

காதலுக்காக :

காதலுக்காக :

வருடம் முழுக்க உழைத்தாலும் ஒரு முறை விமானத்தில் செல்ல டிக்கெட் எடுக்கும் அளவிற்கு சம்பாதிக்க முடியாது என்பது புரிந்தது, என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவருக்கு இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்த வெளிநாட்டினர் புதிய யுத்தியை கைகாட்டினர்.

விமானப் பயணத்தை விட தரை வழியாக நீ பயணம் செய்யலாம் அது மிகவும் மலிவானது தான் நீ ஸ்வீடன் தானே செல்லவேண்டும் தாராளமாக நீ பயணிக்கலாம் என்று சொல்கிறார்கள்.

Image Courtesy

பயணம் ஆரம்பம் :

பயணம் ஆரம்பம் :

1977 ஆம் ஆண்டு, தன்னுடைய உடமைகளை எல்லாம் விற்கு செக்கண்ட் ஹேண்டில் சைக்கிள் ஒன்றை வாங்குகிறார். அதில் தன்னுடைய பேக் மற்றும் பெயிண்டிங் செய்ய தேவையான பொருட்களை வைத்துக் கொண்டு தன்னுடைய காதலியைத் தேடி ஸ்வீடனுக்கு கிளம்பிவிட்டார்.

இன்று இருப்பது போல கூகுள் மேப் வசதியெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை, வழி நெடுகிலும் கேட்டுக் கொண்டு விசாரித்துக்கொண்டு பயணப்பட்டார்.

Image Courtesy

டெல்லியிலிருந்து.... :

டெல்லியிலிருந்து.... :

அமிர்தசரஸ்,ஆஃப்கானிஸ்தான்,ஈரான்,துருக்கி,பல்கரியா,யூகஸ்லோவியா,ஜெர்மனி,ஆஸ்டியா,டென்மார்க் என கடந்து கடைசியாக ஸ்வீடன் வந்து சேர்கிறார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் சைக்கிளிலேயே பயணித்திருக்கிறார்.

வழியில் பல நல்ல உள்ளங்களை சந்தித்தேன், எல்லாரும் நான் எங்கே செல்கிறேன் என்று கேட்டு ஆச்சரியப்பட்டார்கள், ஆசிர்வதித்தார்கள்,உணவு கொடுத்தார்கள்,உதவி செய்ய முன்வந்தார்கள். யாருமே என்னை தாழ்த்தும் விதத்தில் பேசவில்லை சொல்லி வைத்தாற் போல உற்சாகப்படுத்தினார்கள். பதிலுக்கு நானும் ஓவியங்களை பரிசளித்தேன். அவர்கள் யாருக்குமே நான் பேசும் மொழி தெரியாது எனக்கும் அவர்கள் பேசும் மொழி தெரியாது. இருந்தும் நாங்கள் மனதின் மொழியால் பேசிக் கொண்டோம்.

Image Courtesy

சைக்கிள் :

சைக்கிள் :

புதிய சைக்கிளே தொடர்ந்து ஓட்டினால் மக்கர் செய்யும் போது செக்கண்ட் ஹேண்ட் வாங்கி அதனையும் ஐந்து மாதங்கள் சரியாக சொல்ல வேண்டுமெனில் நான்கு மாதம் மூன்று வாரங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் சைக்கிள் சும்மா இருக்குமா? தன் பங்கிற்கு அதுவும் சோதித்தது.

பல முறை கோளாறாகி மக்கர் செய்ய, அதையும் சரி செய்து தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

Image Courtesy

உனக்காகதான் சார்லெட் :

உனக்காகதான் சார்லெட் :

மஹானாந்தியா வருவார் என்று தெரியும். ஆனால் இந்தியாவிலிருந்து தன்னைப் பார்க்கவென்றே ஐந்து மாதங்கள் பயணித்து வருவார் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, ஸ்வீடன் எல்லையில் நின்றிருந்த அதிகாரிகளுக்கும் ஒரே ஆச்சரியம். இந்தியாவிலிருந்து ஸ்வீடனுக்கு சைக்கிளிலா? என்று நம்ப மறுக்க, தான் வந்த காரணத்தையும் ஒடிசாவில் இருவருக்கும் திருமணம் நடந்த புகைப்படங்களையும் காண்பிக்கிறார்.

அதிகாரிகள் மூலமாக சார்லெட்டை தொடர்பு கொள்ள, சார்லெட் ஆனந்தத்தில் துள்ளிகுதித்து ஆம், மஹானாந்தியா சொல்வது உண்மை என்கிறார்.

Image Courtesy

மீண்டும் திருமணம் :

மீண்டும் திருமணம் :

சார்லெட்டின் பெற்றோருக்கும் ஆச்சரியம், தன்னுடைய மகளுக்காக ஒருவன் ஐந்து மாதம் பயணப்பட்டு வந்திருக்கிறானா? என்ற மகிழ்வுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். கருப்பரான என்னை திருமணம் செய்து கொள்ள அவர்களது கலாச்சாரமும் சட்டமும் இடம் கொடுக்கவில்லை, இருந்தும் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டார்கள்.

1979 ஆம் ஆண்டு இன்னொரு முறை ஸ்வீடனில் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த லவ் ஜோடி.

Image Courtesy

தற்போது :

தற்போது :

தற்போது முதுமைப்பருவத்திலும் அன்பொழுக குடும்பத்தை நேசித்துக் கொண்டிருக்கிறார் மஹானாந்தியா. இவருக்கு எமிலி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் இருக்கிறார்கள். ஸ்வீடிஷ் அரசாங்கத்தின் கலை மற்றும் கலாச்சார பிரிவில் ஆலோசகராக இருந்த மஹானந்தியா தன்னுடைய ஓவியத் திறமையால் ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார்.

ஸ்வீடன் அரசாங்கத்தில் இந்தியாவின் கலாச்சாரத் தூதுவராகவும் இருக்கிறார். இவரது காதல் கதை இந்த நூற்றாண்டின் சிறந்த காதல் என்று புகழப்பட்டு திரைப்படங்களாக எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது சன்ஜெய் லீலா பன்சாலி இவரது கதையை திரைப்படமாக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Man Travels 5 Months in a Cycle to Meet His Lover

Man Travels 5 Months in a Cycle to Meet His Lover
Story first published: Tuesday, February 20, 2018, 16:36 [IST]
Desktop Bottom Promotion